ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் முன்பதிவு துவக்கம்!!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. sமுதல் லாட்டில் ஒதுக்கப்பட்ட 250 கார்களுக்கும் முன்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த ம

By Saravana Rajan

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடலுக்கு இந்தியாவில் மீண்டும் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் முன்பதிவு துவக்கம்!!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்கோடா ஆக்டேவியா காரின் சக்திவாய்ந்த மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் முன்பதிவு துவக்கம்!!

முதல் லாட்டில் ஒதுக்கப்பட்ட 250 கார்களுக்கும் முன்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த மாடலை வாங்க முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், அவர்களுக்கு நல்ல செய்தியாக இந்த காருக்கு மீண்டும் இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் முன்பதிவு துவக்கம்!!

புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 230 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த காரில் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் முன்பதிவு துவக்கம்!!

இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 6.8 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், இந்த காரின் சஸ்பென்ஷன் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. சாதாரண ஆக்டேவியா காரைவிட ஆக்டேவியா ஆர்எஸ் மாடலில் கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாடலில் 17 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அடாப்டிவ் ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் முன்பதிவு துவக்கம்!!

இந்த காரில் கருப்பு வண்ண பின்னணியிலான ஹெட்லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கருப்பு வண்ண க்ரில் அமைப்பில் ஆர்எஸ் பேட்ஜ் இடம்பெற்றிருக்கிறது. கருப்பு வண்ண வலை பின்னல் கொண்ட ஏர்டேம் பொருத்தப்பட்டு இருக்கின்றன. எல்இடி பனிவிளக்குகள் உள்ளன. ரியர் ஸ்பாய்லர், க்ரோம் பூச்சுடன் கூடிய புகைப்போக்கி அமைப்பு குழாய்கள் ஆகியவை முக்கிய சிறப்பம்சங்கள்.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் முன்பதிவு துவக்கம்!!

ஆக்டேவியா ஆர்எஸ் காரில் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருக்கைகளில் சிவப்பு வண்ண தையல் வேலைப்பாடுகள் கவர்வதாக இருக்கின்ரன. 9.2 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி உள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் முன்பதிவு துவக்கம்!!

இந்த காரில் 9 ஏர்பேக்குகள், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டைனமிக் சேஸீ கன்ட்ரோல், பாதசாரிகள் சாலையை கடப்பது குறித்து எச்சரிக்கும் வசதி என பல பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு மீண்டும் முன்பதிவு துவக்கம்!!

2018 மாடலாக விற்பனை செய்யப்படும் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் ரூ.26.78 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. சிறந்த பெர்ஃபார்மென்ஸ் செடான் மாடல் என்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் இந்த காரை வாங்குவதற்கு அதீத ஆர்வம் காட்டுகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 11, 2018, 18:14 [IST]
English summary
Skoda Auto has reopened bookings for the Octavia RS in India. Deliveries of the Octavia RS will begin around the festive season. The Skoda Octavia RS was launched back in September 2017. The performance-sedan now comes with a price tag of Rs 26.78 lakh, ex-showroom (India).
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+