ஸ்கோடா ரேபிட் காரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

ஸ்கோடா ரேபிட் ஓனிக்ஸ் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய சிறப்பு பதிப்பு மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களுடன் இந்த சிறப்பு பதிப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு

ஸ்கோடா ரேபிட் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் விசேஷ அம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஸ்கோடா ரேபிட் காரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

ஸ்கோடா ரேபிட் ஓனிக்ஸ் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய சிறப்பு பதிப்பு மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களுடன் இந்த சிறப்பு பதிப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் லேபிஸ் புளூ மற்றும் கேண்டி ஒயிட் என்ற இரண்டு புதிய வண்ணங்களில் கிடைக்கும்.

ஸ்கோடா ரேபிட் காரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

முகப்பு க்ரில் அமைப்பு, சைடு மிரர்களில் பளபளப்பான கருப்பு வர்ண பூச்சு கொடுக்கப்பட்டு தனித்துவப்படுத்தப்பட்டு இருக்கிறது. க்ரில் அமைப்பை சுற்றிலும் க்ரோம் பீடிங் மூலமாக தனியாக பிரித்து காட்டப்பட்டு இருப்பதும் சிறப்பு. அதேபோன்று, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் பின்னணியிலும் கருப்பு வர்ண பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா ரேபிட் காரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த காரின் சைடு மிரர்கள், பூட் ரூம் பகுதிகளிலும் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், 16 அங்குல கருப்பு வண்ண க்ளப்பர் அலாய் சக்கரங்கள் இந்த காரின் வசீகரத்தை வெகுவாக கூட்டுகிறது.

ஸ்கோடா ரேபிட் காரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

உட்புறத்தில் இரட்டை வண்ணக் கலவை தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எபோனி- சேண்ட் என்ற கருப்பு மற்றும் மணல் வண்ணத்தில் இன்டீரியர் பாகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரில் மரத் தகடுகள் மற்றும் தோல் அலங்கார வேலைப்பாடுகளும் உட்புறத்தை பிரீமியமாக காட்டுகிறது.

ஸ்கோடா ரேபிட் காரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த காரில் 6.5 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். இதுதவிர ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

ஸ்கோடா ரேபிட் காரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த காரில் இருக்கும் 1.6 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 153 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் தவிர்த்து, பெட்ரோல் மாடல் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், டீசல் மாடல் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

ஸ்கோடா ரேபிட் காரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஸ்கோடா ரேபிட் ஓனிக்ஸ் எடிசன் கார் ரூ.9.75 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து விற்பனைக்கு கிடைக்கும். பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்போரை கவரும் விதத்தில் இந்த சிறப்பு பதிப்பு மாடலை ஸ்கோடா ஆட்டோ களமிறக்கி இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 21, 2018, 12:43 [IST]
English summary
Skoda Rapid Onyx Edition Details: Skoda India has launched a new special variant of their C-segment sedan — the Rapid Onyx Edition, at a starting price of Rs 9.75 ex-showroom (India).
மேலும்... #ஸ்கோடா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+