பழைய வாடிக்கையாளர்களுக்காக விலை குறைவான ஸ்கோடா சூப்பர்ப்!!

ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஸ்கோடா கார் வாங்கிய பழைய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்ப

By Saravana Rajan

ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பழைய வாடிக்கையாளர்களுக்காக விலை குறைவான ஸ்கோடா சூப்பர்ப்!!

ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஸ்கோடா கார் வாங்கிய பழைய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

பழைய வாடிக்கையாளர்களுக்காக விலை குறைவான ஸ்கோடா சூப்பர்ப்!!

புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரின் பேஸ் மாடல் ரூ.31.92 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார்ப்பரேட் எடிசன் மாடலுக்கு ரூ.23.49 லட்சம் என்ற மிக குறைவான விலையில் பழைய வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

பழைய வாடிக்கையாளர்களுக்காக விலை குறைவான ஸ்கோடா சூப்பர்ப்!!

சற்று சொகுசான கார் மாடலுக்கு மாற நினைக்கும் ஸ்கோடா வாடிக்கையாளர்களை தவறவிடக்கூடாது என்ற எண்ணத்திலும், வாடிக்கையாளர்களை தொடர்ந்து தனது பிராண்டில் தக்க வைக்கும் விதத்திலும் இந்த புதிய சூப்பர்ப் மாடலை ஸ்கோடா விற்பனை செய்ய இருக்கிறது.

பழைய வாடிக்கையாளர்களுக்காக விலை குறைவான ஸ்கோடா சூப்பர்ப்!!

சாதாரண ஸ்கோடா சூப்பர்ப் காரைவிட இந்த கார்ப்பரேட் எடிசன் மாடல் ரூ.8.50 லட்சம் விலை குறைவாக வந்திருக்கிறது. இதனால், ஸ்கோடா வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறப்பான தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய வாடிக்கையாளர்களுக்காக விலை குறைவான ஸ்கோடா சூப்பர்ப்!!

எனினும், சாதாரண ஸ்கோடா சூப்பர்ப் காரின் 1.8 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் பேஸ் மாடலைவிட இந்த கார்ப்பரேட் எடிசன் மாடலில் சில வசதிகள் குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பழைய வாடிக்கையாளர்களுக்காக விலை குறைவான ஸ்கோடா சூப்பர்ப்!!

சாதாரண ஸ்கோடா சூப்பர்ப் காரில் 177 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் அளிக்கும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 175 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் அளிக்கு. பெட்ரோல் மாடலானது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

பழைய வாடிக்கையாளர்களுக்காக விலை குறைவான ஸ்கோடா சூப்பர்ப்!!

டீசல் மாடலானது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த கார் வசதிகளை பொறுத்து 3 பெட்ரோல் வேரியண்ட்டுகளிலும், 2 டீசல் வேரியண்ட்டுகளிலும் கிடைக்கிறது. ரூ.31.92 லட்சம் முதல் ரூ.41.12 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

பழைய வாடிக்கையாளர்களுக்காக விலை குறைவான ஸ்கோடா சூப்பர்ப்!!

ஸ்கோடா சூப்பர்ப் காரின் விலை உயர்ந்த வேரியண்ட்டில் பை- ஸினான் ஹெட்லைட்டுகள், அடாப்டிவ் லைட் சிஸ்டம், 17 அங்குல அலாய் வீல்கள், ரியர் வியூ பார்க்கிங் கேமரா, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களை பெற்றிருக்கிறது.

பழைய வாடிக்கையாளர்களுக்காக விலை குறைவான ஸ்கோடா சூப்பர்ப்!!

புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டியூவல் ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக், ஹில் ஹோல்டு கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்பங்களையும் பெற்றிருக்கிறது.

பழைய வாடிக்கையாளர்களுக்காக விலை குறைவான ஸ்கோடா சூப்பர்ப்!!

தனது வாடிக்கையாளர்களுக்காக இந்த சிறப்பு பதிப்பு மாடலை ஸ்கோடா வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த கார்ப்பரேட் எடிசன் மாடலுக்கு தனது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில், அனைத்து வாடிக்கையாளர்களுக்கான மற்றொரு சிறப்பு பதிப்பு மாடலையும் வெளியிட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Superb Corporate Edition launched in India: Skoda has silently launched the Superb Corporate Edition in the country. The new Skoda Superb Corporate Edition is launched with an introductory price of Rs 23.49 lakh ex-showroom. The Superb Corporate Edition is exclusive to existing Skoda customers who are looking to upgrade.
Story first published: Wednesday, August 22, 2018, 13:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X