ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்போர்ட்லைன் மாடல் விரைவில் அறிமுகம் !!

ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்போர்ட்லைன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்லைன் என்ற பெயரில் வரும் இந்த மாடல் பயணிப்பதற்கு அதிக சொகுசாகவும், வெகு கவர்ச்சியையும் பெற்றிருக்கும்.

ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்போர்ட்லைன் மாடல் விரைவில் அறிமுகம் !!

பளிச்சென்ற கண்ணை பறிக்கும், அடிக்கும் சிகப்பு நிறத்தில் பளபளக்கிறது இந்த வாகனம். இதற்கென்று பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட பெயிண்ட் ஷாப்பில் மெருகேற்றப்படுகிறது இந்த ஸ்கோடா கார். முழுசிகப்பில் முகம்சுழிக்க வைக்காமல் அங்கங்கே கருப்பு நிறங்களில் உண்டான சில பல வேலைப்பாடுகள் வாகனத்தினை ஓவியம் போன்று பிரித்து காட்டுகிறது.

ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்போர்ட்லைன் மாடல் விரைவில் அறிமுகம் !!

அதுயென்ன அங்கங்கே கருப்பு என்ற கேள்விக்கு விடையாய் முன்பக்க கருப்பு கிரில் கண்ணின் வெளிப்புறத்தில் மையிட்டு பெண் போல் வெளியில் துண்டாக தெரிகிறது , பளபளக்கும் முன் விளக்குகள் கறுப்பு நிறங்களால் தனிப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்போர்ட்லைன் மாடல் விரைவில் அறிமுகம் !!

சிக்கென்ற கருஞ்சிறுத்தை குட்டி போல் கறுப்பு நிற காதுகளை கொண்டுள்ளது இந்த ஸ்கோடா. காது என்பது இதன் சைடு வியூ கண்ணாடிகளை குறிக்கும். அங்கீகரிக்கப்பட்ட அதன் வலைத்தளத்தில் வெளியான இதன் அதிகாரபூர்வ படங்களிலும் இதன் நிறங்கள் ஆர்ப்பரிக்கும் வகையில் தான் உள்ளது. கறுப்புடன் வெள்ளி சேர்ந்த கலவையாக இதன் அல்லாய் வீல்கள் வண்டியை களிமண் பொம்மை போல் களிப்புறச்செய்கிறது.

ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்போர்ட்லைன் மாடல் விரைவில் அறிமுகம் !!

இந்த ஐரோப்பிய தயாரிப்பான ஸ்கோடா சூப்பர்ப் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் சாதாரண மாடலைவிட 15mm குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் உடன் 19 இன்ச் அல்லாய் வீலுடன் பறக்க தயாராக உள்ளது என்றே கூறலாம்.

ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்போர்ட்லைன் மாடல் விரைவில் அறிமுகம் !!

என்னதான் வெளியே பலநிற கலவையுடன் நம்மை அருகில் அழைத்தாலும் , கறுப்பழகன் போல் உட்புறம் முழு விஸ்வரூபம் எடுத்து மெலிற் கறுப்புடன் முழுவதும் பின்னி பிடலெடுக்கிறது. பந்தய கார் போன்ற இதன் இருக்கைகள் அழகிய நெருங்கிய முழுமையுற்ற தையலுடன் பிசிறின்றி ராயல் லுக் அளிக்கிறது.

Most Read Article:ரூ.9.99 லட்சத்தில் புதிய மஹிந்திரா மராஸ்ஸோ கார் விற்பனைக்கு அறிமுகம்! டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு கடும் சவால்!

ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்போர்ட்லைன் மாடல் விரைவில் அறிமுகம் !!

கதவு விளிம்புகள் தங்க நகை போல் பலப்பலப்வென ஜொலிக்கின்றன. ஸ்டேரிங் வீல் தூய்மையான லெதரால் தைக்கப்பட்டு கைக்கு மென்மையின் உச்சத்தை அளிக்கிறது. எடை குறைவான அலுமினியம் பொருட்களால் இதன் பெடல்கள் அமைந்துள்ளது அம்சம்.

ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்போர்ட்லைன் மாடல் விரைவில் அறிமுகம் !!

கொலம்பஸ் சாட்டிலைட் நேவிகேஷன் என்ற மென்பொருளுடன் பாதுகாப்பை பலப்படுத்திகிறது இவ்வாகனம். 9 .2 அங்குல திரையுடன் தகவல் பலகை காரின் முன் பகுதியில் டச் தொழில்நுட்பத்துடன் அமைந்துள்ளது. மேலும் இதனுடன் இணையதள தகவல்களையும் wifi மூலகமாக பெறலாம்.

ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்போர்ட்லைன் மாடல் விரைவில் அறிமுகம் !!

ஸ்கோடா நிறுவனம் தனது வாகனத்தை இரு வேறு பரிணாமத்தில் அளிக்க உள்ளது அவை ஸ்டைல் மற்றும் L & K என்பதே. இந்த இரண்டுமே 1 .8 லிட்டர் பெட்ரோல் மற்றும் இரண்டு லிட்டர் டீசல் பரிணாமத்தில் கிடைக்கவிருக்கிறது. இவை இரண்டுமே TDI தொழில்நுட்பத்தால் ஆனது. 7 ஸ்பீட் DSG GEAR BOX உடன் இந்த பெட்ரோல் என்ஜின் 177BHP செயல்திறனும் 320 NM டார்க்கும் அளிக்க வல்லது. இந்த கியர் பாக்ஸ்குகள் மேனுவல் தொழில்நுட்பத்திலும் வேண்டுமெனில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்போர்ட்லைன் மாடல் விரைவில் அறிமுகம் !!

இதன் மறுபுறமாக இரண்டு லிட்டர் டீசல் என்ஜின் ஆனது 175BHP உடன் 350NM டார்க் கொண்டு உறுமி எழும் . ட்ரான்மிஸ்ஸின் தொழில்நுட்பம் மேல குறிப்பிட்டது போன்றே அமையப்பெற்றதால் அடிக்கோடிடவேண்டிய அவசியமற்றுப்போனது.

ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்போர்ட்லைன் மாடல் விரைவில் அறிமுகம் !!

ஸ்கோடா இவ்வாகனத்தின் சிறப்பு பிரதியினை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதன் ஆரம்ப விலை 23.49 லட்சம் , இது டெல்லியில் உள்ள பொதுவான விலை. இந்த சிறப்பு பிரதிகள் முந்தைய ஸ்கோடா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது இந்நிறுவனம். இந்த சிறப்பு பிரதியின் வெற்றி மற்றும் சந்தை விற்பனை புல்லியை கொண்டு மேலும் இதன் பிரதிகளை பலப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஸ்போர்ட்லைன் மாடல் விரைவில் அறிமுகம் !!

ஸ்கோடா சுபெர்ப் ஸ்போர்ட்லைன் பற்றி டிரைவ் ஸ்பர்க்கின் கருத்து:

ஸ்கோடா ஆட்டோ இந்தியா வலைத்தளத்தில் "விரைவில் அறிமுகம்" என்ற தலைப்பிலே தனது இந்த வாகனம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது பின்னாளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை தாங்கி வெளிவரலாம் என்பதை குறிப்பது போல் உள்ளது. மேலும் இதனுடைய துல்லியமான சிறப்பம்சங்கள், செயல்திறன், விலை போன்றவை இன்னும் சிறப்புற அறிவிக்கப்படவில்லை.

Tamil
மேலும்... #ஸ்கோடா
English summary
Skoda Auto has listed the new Superb Sportline edition on their official website, indicating an India launch soon. The Skoda Superb Sportline is a sportier and fun-to-drive variant of the company's flagship sedan offering.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more