எஸ்எம்எல் இசூஸு நிறுவனத்தின் புதிய டிரக்குகள் அறிமுகம்!!

SML ISUZU நிறுவனம் தனது உலக தரம் வாய்ந்த பல ரக டிரக்குகளை தென்னிந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்டைல் மற்றும் அழகிய வடிவமைப்பு பெற்ற இந்த ட்ரக்குகள் GS SERIES வரிசையில் வந்துள்ளன.

SML ISUZU நிறுவனம் தனது உலக தரம் வாய்ந்த பல ரக டிரக்குகளை தென்னிந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

எஸ்எம்எல் இசூஸு நிறுவனத்தின் புதிய டிரக்குகள் அறிமுகம்!!

புதிய ஸ்டைல் மற்றும் அழகிய வடிவமைப்பு பெற்ற இந்த ட்ரக்குகள் GS SERIES வரிசையின் கீழ் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. உலகத் தரம் வாய்ந்தாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குளோபல் சீரிஸ் டிரக்குகள் எரிபொருள் சிக்கனம், ஓட்டுனருக்கான வசதிகள், மற்றும் ஓட்டுதலில் சிறந்த அனுபவம், நீடித்து உழைக்கும் தன்மை, அதீத செயல் திறன், குறைந்த பராமரிப்பு செலவுகள், அதிக லோடு இழுக்கும் தன்மை போன்றவற்றுடன் வந்துள்ளன.

எஸ்எம்எல் இசூஸு நிறுவனத்தின் புதிய டிரக்குகள் அறிமுகம்!!

இந்த GS சீரியஸ் டிரக்குகளை அடுத்து ADVANCED TELEMATICS தொழில்நுட்பத்தால் உருவான SML ISUZUவின் SAARTHI வாகனமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய டெலிமாட்டிக்ஸ் சொலுஷன் வாடிக்கையாளர்களுக்கு டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் மற்றும் ஆன் ரோடு சர்வீஸ் சப்போர்ட் போன்றவற்றை அளிக்கிறது.

எஸ்எம்எல் இசூஸு நிறுவனத்தின் புதிய டிரக்குகள் அறிமுகம்!!

இந்த குளோபல் சீரியஸ் வாகனத்தின் சிறப்பம்சங்களை பட்டியலிடுவோம் வாருங்கள்:

1. சொகுசு வாகனம் போல் காட்சியளிக்கும் இதன் தோற்றம்

2. புதிய ஸ்டைலான வடிவமைப்பு கொண்ட இதன் முன் விளக்குகள்

3. அதீத ஓட்டுநர் திருப்தி

4. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்

5. USB போர்ட் இணைக்கப்பட்ட டேஷ் போர்டுகள் (மொபைல் சார்ஜிங்)

6. என்ஜினிற்கும் கேபினிற்கும் இடைப்பட்ட போதுமான இடைவெளி மற்றும் காற்றோட்ட வசதி

7. மாற்றியமைக்கப்பட்ட புதிய லைட்டர் கிளட்ச் மற்றும் ஸ்மூதர் கியர்கள்

எஸ்எம்எல் இசூஸு நிறுவனத்தின் புதிய டிரக்குகள் அறிமுகம்!!

இந்த GS சீரிஸ் வரிசையில் பின்வரும் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சாம்ராட் HD 19

சர்தாஜ்

டிப்பர் சுப்ரீம்

பிரஸ்டீஜ்

சர்தஜ் HG 71

மற்றும் CNG மாடல்கள்

எஸ்எம்எல் இசூஸு நிறுவனத்தின் புதிய டிரக்குகள் அறிமுகம்!!

இந்த GS சீரியஸ் வண்டிகளுக்கு அந்நிறுவனம் *மூன்று வருடம் அல்லது அன்லிமிடெட் கிலோமீட்டர்ஸ் (என்ஜின் & கியர் பாக்ஸ் ) மற்றும் *இரண்டு வருடம் அல்லது அன்லிமிடெட் கிலோமீட்டர்ஸ் (வாகனத்திற்கு) வாரண்ட்டி காலமாக வரையறுத்துள்ளது.

எஸ்எம்எல் இசூஸு நிறுவனத்தின் புதிய டிரக்குகள் அறிமுகம்!!

டெலிமாட்டிக் சிஸ்டம் கொண்டுள்ள SAARTHI வாகனம் பயணத்தின் பொழுது உரிமையாளர் மற்றும் ட்ரைவரை SOS பட்டன் மூலமாக இணைக்க உள்ளது. இந்த வாகனம் தனது GPS ட்ராக்கிங் கொண்டு வாகனத்தை 24 மணிநேரமும் கண்காணிக்க முடியும். மொத்தமாக இந்த புதிய GS சீரியஸ் வாகனங்கள் ஸ்டைலாகவும் மார்டனாகவும் தோற்றம் அளிக்கிறது.

எஸ்எம்எல் இசூஸு நிறுவனத்தின் புதிய டிரக்குகள் அறிமுகம்!!

தென்னிந்திய மார்க்கெட்டில் இந்த GS சீரிஸ் வகை டிரக்குகள் கண்டிப்பாக வெற்றியடையும் என்று கருதப்படுகிறது. கட்டுமானம் , தொழில்நுட்பம், சிறப்பம்சம், வடிவமைப்பு போன்றவற்றில் திருப்திகரமான மாற்றங்களை கொண்டுள்ளது இந்த டிரக்குகள் . குளோபல் சீரிஸ் என்ற பெயருக்கு ஏற்றது போல் இது கண்டிப்பாக உலகத்தரம் வாய்ந்த டிரக்குகளாக இருக்கும் என்று நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 10, 2018, 13:01 [IST]
English summary
SML Isuzu has launched the new Global Series of trucks for the south Indian market in Bangalore. The new GS series trucks are aesthetically designed with new styling. SML Isuzu consists of two major business verticals: LCV and ICV Trucks and Buses and a range of special application vehicles.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+