கார் உரிமையாளர்களை கதிகலங்க வைக்கும் ஹைடெக் திருடர்கள்!

இப்போது வரும் கார்களில் திருடு போவதை தவிர்ப்பதற்கான பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நவீன பூட்டு அமைப்பு கொடுக்கப்படுகிறது. கார் நிறுவனங்களின் எஞ்சினியர்கள் பல ஆண்டுகள் ரூம் போட்டு யோசித்து அறிமு

பெருநகரங்களில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார்களிலிருந்து ஏர்பேக் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆக்சஸெரீகள் திருடுபோகும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளது. இது கார் உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கார் உரிமையாளர்களை கதிகலங்க வைக்கும் ஹைடெக் திருடர்கள்!

இப்போது வரும் கார்களில் திருடு போவதை தவிர்ப்பதற்கான பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நவீன பூட்டு அமைப்பு கொடுக்கப்படுகிறது. கார் நிறுவனங்களின் எஞ்சினியர்கள் பல ஆண்டுகள் ரூம் போட்டு யோசித்து அறிமுகம் செய்யும் தொழில்நுட்பங்களை, திருடர்கள் மிக லாவகமாக கற்று தேர்ந்து விடுகின்றனர்.

கார் உரிமையாளர்களை கதிகலங்க வைக்கும் ஹைடெக் திருடர்கள்!

இது கார் சர்வீஸ் மையங்களில் வேலை பார்க்கும் மெக்கானிக்குகள் மற்றும் இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் சம்பந்தப்படுவதுதான் முக்கிய காரணமாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். சர்வீஸ் மையங்களில் வேலை செய்யும் சில மெக்கானிக்குகளுக்கு போதிய வருவாய் இல்லாதபோது, இதுபோன்று கார் கொள்ளையர்களுக்கு உதவி செய்தோ அல்லது நேரடியாகவோ ஈடுபடும் வாய்ப்புள்ளது.

கார் உரிமையாளர்களை கதிகலங்க வைக்கும் ஹைடெக் திருடர்கள்!

மேலும், கொள்ளையர்களில் பலரும் கார் குறித்த நுட்பங்களில் ரொம்பவே அப்டேட்டாக இருக்ககின்றனர். இதனை வைத்து, காரில் இருக்கும் விலை மதிப்பு மிக்க பொருட்கள் அல்லது காரையே திருடி சென்றுவிடுகின்றனர்.

கார் உரிமையாளர்களை கதிகலங்க வைக்கும் ஹைடெக் திருடர்கள்!

இதுவரை கார் ஆடியோ சிஸ்டம் திருடு போய் வந்த நிலையில், தற்போது ஏர்பேக்குகளை குறிவைத்து திருடி வருகின்றனர். ஏர்பேக்கை மிகவும் சாமர்த்தியமாக திருடிச் செல்வதாகவும் தெரியவந்துள்ளது. அதாவது, மீண்டும் மற்றொரு காரில் பொருத்துவதற்கு ஏற்ப அதனை திருடர்கள் கழற்றிச் செல்வதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கார் உரிமையாளர்களை கதிகலங்க வைக்கும் ஹைடெக் திருடர்கள்!

ஏர்பேக் மற்றும் ஆடியோ சிஸ்டத்தின் ஒயர்கள் உள்ளிட்ட இணைப்புடன் அவர்கள் லாவகமாக எடுத்துச் சென்றுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி, போலீசாரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கார் உரிமையாளர்களை கதிகலங்க வைக்கும் ஹைடெக் திருடர்கள்!

டேஷ்போர்டு கிளிப்புகளை சாமர்த்தியமாக கழற்றிவிட்டு, ஏர்பேக், ஆடியோ சிஸ்டம், ஏசி கன்ட்ரோலர்கள் உள்ளிட்டவற்றை திருடிச் செல்வதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அனைத்து சம்பவங்களும் ஒரே மாதிரி இருப்பதால், இதில் ஈடுபட்டவர்கள் ஒரு கும்பலை சேர்ந்தவர்களாகவே இருக்கக்கூடும் என போலீசார் நம்புகின்றனர்.

கார் உரிமையாளர்களை கதிகலங்க வைக்கும் ஹைடெக் திருடர்கள்!

இந்த ஹைடெக் திருடர்களை பிடிப்பதற்கு போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். ஆடியோ சிஸ்டம் மற்றும் ஏர்பேக் உள்ளிட்டவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் வரை இருப்பதால், இதனை குறிவைத்து திருடிச் செல்வதாக போலீசார் தெரிவித்ததுள்ளனர். அதனை கள்ளச் சந்தையில் குறைவான விலைக்கு அவர்கள் விற்பனை செய்வதாகவும் கருதப்படுகிறது.

கார் உரிமையாளர்களை கதிகலங்க வைக்கும் ஹைடெக் திருடர்கள்!

திருட்டிலிருந்து கார்களை பாதுகாக்க வீட்டு போர்டிகோவில் காரை நிறுத்தியிருந்தாலும், போர்டிகோவில் க்ரில் தடுப்பு போட்டு வைப்பது நல்லது. மேலும், இரவில் கார் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்தில் விளக்கு ஒன்றை எரியவிட்டு வைப்பதும் அவசியம்.

கார் உரிமையாளர்களை கதிகலங்க வைக்கும் ஹைடெக் திருடர்கள்!

வீட்டு போர்டிகோவில் அல்லது வீட்டு ஓரமாக தெரிவில் நிறுத்தியிருந்தாலும், அதனை நோக்கி சிசிடிவி கேமரா பொருத்தி வைப்பதும் அவசியம். மேலும், தெருவிளக்கு உள்ள இடத்தில் நிறுத்தி வைப்பதும், கவர் போட்டு வைப்பதும் திருடர்களின் பார்வையிலிருந்து தப்பிக்க வழிதரும்.

கார் உரிமையாளர்களை கதிகலங்க வைக்கும் ஹைடெக் திருடர்கள்!

மறுபுறத்தில் ஏர்பேக்கில் பழுது ஏற்படும்போது, பம்பர் டு பம்பர் இன்ஸ்யூரன்ஸ் இல்லாதவர்கள், கள்ளச் சந்தையில் வாங்குவதற்கு முற்படுகின்றனர். அதுவும் தவறான விஷயமாக அமைந்துவிடும். குறைவான விலைக்கு கிடைக்கிறதே என்று வாங்கி பொருத்தும்போது, அதில் ஏதேனும் பழுது இருந்தால் ஆபத்து சமயங்களில் கைவிட்டுவிடும்.

கார் உரிமையாளர்களை கதிகலங்க வைக்கும் ஹைடெக் திருடர்கள்!

அதேபோன்று, விரிவடையும்போதும் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே, ஏர்பேக்கை மீண்டும் மாற்றும்போது, அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் மட்டுமே ஏர்பேக்கை வாங்கி பொருத்துவதுதான் உங்களது பாதுகாப்பு உறுதி தரும் விஷயமாக இருக்கும்.

கார் உரிமையாளர்களை கதிகலங்க வைக்கும் ஹைடெக் திருடர்கள்!

இதுவரை கார் கதவுகளுக்கு சிறந்த பூட்டு தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன. ஆனால், இனி ஏர்பேக், ஆடியோ சிஸ்டம் என ஒவ்வொன்றுக்கும் தனி பூட்டு அமைப்பை உருவாக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ டிப்ஸ்
English summary
Some Costly Things most likely to be stolen from Vehicles.
Story first published: Wednesday, December 26, 2018, 12:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X