பெற்றோர்களின் கனவை நிறைவேற்ற மகன் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு... வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ...
பெற்றோர்களின் கனவை நிறைவேற்றுவதற்காக, சர்ப்ரைஸான பரிசு ஒன்றை மகன் வழங்கினார். நெகிழ்ச்சிகரமான அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பெற்றோர்களின் கனவை நிறைவேற்றுவதற்காக, சர்ப்ரைஸான பரிசு ஒன்றை மகன் வழங்கினார். நெகிழ்ச்சிகரமான அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பெற்றோர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கு கார் பரிசளிக்க வேண்டும் என்பது இந்திய இளைஞர்கள் பலரின் லட்சியமாக உள்ளது. அப்படி தங்கள் லட்சியத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் பலரின் வீடியோக்களை, சமூக வலை தளங்களின் உதவியுடன் நாம் பார்த்து வருகிறோம்.

இந்த வகையில் இளைஞர் ஒருவர் தனது பெற்றோருக்கு ஹோண்டா சிட்டி காரை பரிசளிக்கும் வீடியோ ஒன்று, சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி கொண்டுள்ளது. இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர், புதிய ஹோண்டா சிட்டி காரை ஷோரூமில் இருந்து டெலிவரி எடுக்கிறார்.

பின்னர் ஹோண்டா சிட்டி காருக்கு சம்பிரதாயப்படி பூஜைகள் செய்து முடித்த பின், நேராக பூங்கா ஒன்றை நோக்கி அந்த இளைஞர் பயணிக்கிறார். ஏனெனில் அந்த பூங்காவில், இளைஞரின் பெற்றோர் ஏற்கனவே காக்க வைக்கப்பட்டிருந்தனர்.

அங்கு சென்றதும், ஹோண்டா சிட்டி காரை, அவர்களுக்கு சர்ப்ரைஸாக பரிசளிக்கிறார். இதனால் அந்த இளைஞரின் பெற்றோர் நெகிழ்ந்து போய் விட்டார்கள். பின்னர் அந்த இளைஞர், காரின் சாவியை தனது தந்தையிடம் ஒப்படைத்து விடுகிறார்.

இதன்பின் கேமரா முன் வரும் அந்த இளைஞர், தனது பெற்றோருக்கு கார் பரிசளிக்க வேண்டும் என்ற கனவையும், அதனை நனவாக்கியது எப்படி? என்பதையும் பகிர்ந்து கொள்கிறார். அத்துடன் கடினமாக உழைத்தால், எந்த கனவையும் நிறைவேற்றலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது இந்த நெகிழ்ச்சி வீடியோ வைரலாக பரவி வருகிறது. வி நேஷன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மிகுந்த நம்பிக்கைக்கு உரிய கார்களில் ஒன்றாக இருந்து வருவதுதான் ஹோண்டா சிட்டி. ஆனால் மேற்கண்ட வீடியோவில் கண்ட இளைஞர், ஹோண்டா சிட்டி காரின் எந்த வேரியண்ட்டை வாங்கியுள்ளார் என சரியாக தெரியவில்லை.

ஆனால் இது பெட்ரோல் மாடலின் டாப்-எண்ட் வெர்ஷனாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனெனில் இந்த மாடல் சன் ரூஃப்பை பெற்றிருக்கும். அதேபோல் இந்த இளைஞர் வாங்கிய காரிலும் சன் ரூஃப் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 12.1 லட்ச ரூபாய். ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில், மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக ஹோண்டா சிட்டி திகழ்ந்து கொண்டுள்ளது.

அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஹோண்டா சிட்டி பல முறை முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய மார்க்கெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களிலும் ஹோண்டா சிட்டி கார் கிடைக்கிறது.

ஹோண்டா சிட்டியின் பெட்ரோல் வெர்ஷன் கார்களில், 1.5 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக, 117 பிஎச்பி பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

அதே நேரத்தில் தற்போதைய தலைமுறை ஹோண்டா சிட்டி காருடன்தான் டீசல் இன்ஜின் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 1.5 லிட்டர் டீசல் இன்ஜினானது அதிகபட்சமாக, 99 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை உருவாக்கும் சக்தி வாய்ந்தது.

மாருதி சுஸுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, டொயோட்டா யாரிஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வென்டோ உள்ளிட்ட கார்களுக்கு, மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி மிக கடுமையான போட்டியை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா சிட்டி காரில், லெதர் இருக்கைகள், க்ரூஸ் கண்ட்ரோல், ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப் சிஸ்டம், எல்இடி டிஆர்எல்கள், 6 ஏர் பேக், டைமண்ட் கட் அலாய் வீல்கள், டாப் எண்ட் வெர்ஷனில் சன் ரூஃப் என ஏராளமான வசதிகள் நிறைந்துள்ளன.

தற்போது அடுத்த தலைமுறை ஹோண்டா சிட்டி காரை உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டுள்ளன. இந்த கார் வரும் 2020ம் ஆண்டில், இந்தியாவில் விற்பனைக்கு வரும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல் நியூ சிட்டி காரில், மைல்டு ஹைபிரிட் சிஸ்டமை (Mild Hybrid System) ஹோண்டா வழங்கும் எனவும் கூறப்படுகிறது. அத்துடன் தற்போது உள்ள வெர்ஷனை காட்டிலும், புதிதாக வரவுள்ள வெர்ஷன் மிகப்பெரியதாக இருக்கும், அதிக வசதிகள் நிறைந்திருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








