Just In
- 1 hr ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 8 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 9 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 11 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
மே.வங்கம்:மமதா தளபதி பிகே வியூகம் தவிடுபொடி? அன்று சிங்கிள்..இன்று டிரிபிள் டிஜிட் இடங்களில் பாஜக?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரே ஒரு எழுத்து மாறியதால் உலகம் முழுக்க பிரபலமான கார்.. சமூக வலை தளங்களில் அனல் பறக்கும் விவாதம்..
ஒரே ஒரு எழுத்து மாறியதால், உலகம் முழுக்க ஒரு கார் பிரபலம் அடைந்துள்ளது. சமூக வலை தளங்களில் இதுகுறித்து அனல் பறக்க விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

உலகின் முதன்மையான கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று போர்ஷே (Porsche). ஜெர்மனி நாட்டை சேர்ந்த போர்ஷே நிறுவனத்தின் ஹை பெர்ஃபார்மென்ஸ் ஸ்போர்ட்ஸ் கார்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை. போர்ஷே நிறுவனத்தின் கார்கள் விலை உயர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்திய சாலைகளில் போர்ஷே நிறுவனத்தின் லக்ஸரி கார்களை பார்ப்பது என்பது மிகவும் அபூர்வமான ஒரு விஷயமாகவே கருதப்பட்டு வருகிறது. ஏனெனில் பெரும்பாலான இந்திய வாடிக்கையாளர்கள் விரும்புவது பட்ஜெட் கார்களை மட்டுமே.

இந்த சூழலில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் போர்ஷே கேயனே (Porsche Cayenne) கார் ஒன்று பயணித்து கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் போர்ஷே கேயனே கார் சிக்கியது. இதனால் அங்கு சில மணி துளிகளை செலவிட வேண்டிய கட்டாயம் போர்ஷே கேயனே காருக்கு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் அந்த சாலையில் இருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் போர்ஷே கேயனே காரையே ரசித்து பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் அந்த போர்ஷே கேயனே காருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு காரின் டிரைவருக்கு மட்டும் வித்தியாசமான ஒரு விஷயம் தென்பட்டது.

ஆம், போர்ஷே கேயனே காரின் பின்பகுதியில் அதன் பிராண்ட் நேம் (Brand Name) எழுத்து பிழையுடன் தவறாக இருந்தது. அதாவது 'Porsche' என்றுதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக 'Porshce' என்று இருந்தது.

இந்தியா டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி எழுத்து பிழை கண்டறியப்பட்ட போர்ஷே காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் 90 லட்ச ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. ஆனால் இவ்வளவு செலவு செய்தும் கூட, அதன் பிராண்ட் நேம் தவறாக இருந்தால் எப்படி இருக்கும்? என கற்பனை செய்து பாருங்கள்.

இதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், எழுத்து பிழை இருப்பது சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளருக்கு தெரியுமா? தெரியாதா? என்பதை உறுதிபடுத்த முடியவில்லை. ஆனால் 90 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்ட காரில், அதன் பிராண்ட் நேம் எழுத்து பிழையுடன் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.

பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக போர்ஷே போன்ற விலை உயர்ந்த கார்களுக்கு என தனியாக உள்ள ரசிகர்கள், எப்படி இந்த தவறு நிகழ்ந்தது? என்பது குறித்து அனல் பறக்க விவாதம் செய்து வருகின்றனர்.

ஏனெனில் விலை உயர்ந்த லக்ஸரி கார்களின் கட்டுமானம், தரம் உள்ளிட்ட விஷயங்களில் சிறிய தவறு நிகழ்ந்தாலும் கூட, அது பெரும் புயலை கிளப்பிவிடும். அதுபோல்தான் இந்த எழுத்து பிழையும் தற்போது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

ஆனால் இந்த தவறுக்கு நாங்கள் காரணம் அல்ல என போர்ஷே நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போர்ஷே நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''எங்களது தரப்பில் தவறு நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும்.

ஜெர்மனி நாட்டில் உள்ள எங்களது தொழிற்சாலையில் அனைத்து கார்களின் பேட்ஜ்களிலும் ஸ்பெல்லிங் சரியாக உள்ளதா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை சோதனை செய்வதை நாங்கள் வழக்கமாக வைத்துள்ளோம்.

இதன்பின் வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்படும் முன்பாக அந்தந்த டீலர்ஷிப்களில், மீண்டும் ஒரு முறை காரின் அனைத்து பேட்ஜ்களின் ஸ்பெல்லிங்கும் பரிசோதிக்கப்படும். இதனால் எங்களது தரப்பில் தவறு நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

ஒவ்வொரு காரையும் முழுமையாக பரிசோதித்து பார்த்த பின்னரே வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து வருகிறோம். குவாலிட்டி கன்ட்ரோல் என்ற விஷயத்தில் நாங்கள் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம்'' என்றார்.

எழுத்து பிழை கண்டறியப்பட்ட கார் பழைய மாடல் எனவும் போர்ஷே நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். எனவே அந்த காரின் உரிமையாளருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. ஏனெனில் தவறு இருப்பது தெரிந்திருந்தால், அவர் அதனை சரி செய்திருக்க கூடும்.

ஆனால் தற்போது இந்த செய்தி உலகம் முழுக்க வைரலாகி விட்டது. இதன்மூலமாக எழுத்து பிழை இருப்பது குறித்த விஷயம் தற்போது அந்த காரின் உரிமையாளருக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

அதேசமயம் போர்ஷே நிறுவனம் மறுத்துள்ள நிலையில், இந்த தவறு எப்படி நிகழ்ந்தது என்பது மட்டும் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. ஒருவேளை போர்ஷே நிறுவனத்தின் பெயரை கெடுக்க யாராவது போலியாக ஒரு படத்தை தயார் செய்து பரவ விட்டார்களா? என்பதும் உறுதியாக தெரியவில்லை.