தமிழக பதிவு எண்ணில் முக்காடுடன் சுற்றித்திரியும் ஹூண்டாய் புதிய கார்... சான்ட்ரோ தானோ..??

Written By:

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார்களில், அதற்கான பெரிய விற்பனை திறனை பெற்று தந்த மாடல் சான்ட்ரோ.

ஹேட்ச்பேக் காரான இதன் மேம்படுத்தப்பட்ட மாடலை இந்தாண்டில் ஹூண்டாய் வெயிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணில் வசமாக சிக்கிய ஹூண்டாயின் புதிய கார் இதுதான்..!!

இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிற்கு ஏற்ற ஏஹெச்2 என்ற குறியிட்டில் புதிய காரை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்தன.

கண்ணில் வசமாக சிக்கிய ஹூண்டாயின் புதிய கார் இதுதான்..!!

தொடர்ந்து அந்த காரின் சோதனையையும் ஹூண்டாய் இந்திய சாலைகளில் மேற்கொள்ள தொடங்கியது.

காரை மூடி மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டு வரும் புகைப்படங்களும் இணையத்தில் கசிந்தன.

கண்ணில் வசமாக சிக்கிய ஹூண்டாயின் புதிய கார் இதுதான்..!!

தமிழ் நாட்டின் பதிவு எண்ணை பெற்றிருக்கும் இந்த கார் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Recommended Video - Watch Now!
Shocking Car Accident That Happened In Karunagappally, Kerala
கண்ணில் வசமாக சிக்கிய ஹூண்டாயின் புதிய கார் இதுதான்..!!

ஹூண்டாயின் புதிய சான்ட்ரோ கார் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகலாம் என எதிபார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹூண்டாயின் சிறிய காரின் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணில் வசமாக சிக்கிய ஹூண்டாயின் புதிய கார் இதுதான்..!!

ஸ்பை படங்கள் மூலம் காரை உற்று உற்று பார்த்ததில், முன்பகுதி மவுன்ட் செய்யப்பட்ட பம்பர், வின்டுஷீல்டு வைப்பர், பிளாஸ்டிக் வீல் கவர், டெயில் லைட் கிளஸ்டர் மற்றும் ஸ்டாப் லைட் போன்றவை இடம்பெற்றிருப்பது தெரிகின்றன.

Trending On Drivespark:

இந்தியாவின் முதல் ரிவர்ஸ் கியரை பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடல் மோட்டார் சைக்கிள்..!!

அதிவேகமாக வந்த காருடன் நேருக்கு நேர் மோதி சாலையில் தூக்கிவீசப்பட்ட பைக்... (வீடியோ)

கண்ணில் வசமாக சிக்கிய ஹூண்டாயின் புதிய கார் இதுதான்..!!

இந்தியாவிற்கு ஏற்ற புதிய தலைமுறைக்கான சான்ட்ரோ காரின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தற்போது வெளியாகியுள்ள இந்த ஸ்பை படங்கள், ஹூண்டாய் சிறிய ரக காரின் டாப் என்ட் மாடலாக இருக்கலாம் என்று அந்நிறுவனத்தின் வட்டாரங்கள் கூறுகின்றன.

கண்ணில் வசமாக சிக்கிய ஹூண்டாயின் புதிய கார் இதுதான்..!!

சிறிய ரக காரின் ஸ்பை படங்களை வைத்து பார்க்கும் போது, அதில் காற்றோட்ட வசதிக்காக பெரிய கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் தயாரித்து வரும் புதிய சான்ட்ரோ காரின் வெளியிடு 2018ம் ஆண்டின் மத்தியில் நடக்கலாம் என்று தெரிகிறது.

கண்ணில் வசமாக சிக்கிய ஹூண்டாயின் புதிய கார் இதுதான்..!!

புதிய ரக சான்ட்ரோ காரில் வெளிக்கட்டமைப்பில் கூர்மையான முகப்பு விளக்குகள், பகலில் எரியும் எல்.இ.டி விளக்குகள், பம்பர் ஆகியவை வழங்கப்படவுள்ளன.

கண்ணில் வசமாக சிக்கிய ஹூண்டாயின் புதிய கார் இதுதான்..!!

பின்புறத்தில் ஹூண்டாய் ஐ10 காரை பின்பற்றி கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பது போன்று காட்சியளிக்கிறது. இதுதவிர புதிய சான்ட்ரோ காரின் மற்ற விவரங்கள் தெரியவில்லை.

கண்ணில் வசமாக சிக்கிய ஹூண்டாயின் புதிய கார் இதுதான்..!!

ஹூண்டாய் ஐ10 கார்களில் இருப்பது போன்ற 800சிசி அல்லது 1 லிட்டர் எஞ்சின் தேர்வுகள் புதிய சான்ட்ரோ காரில் வழங்கப்படலாம் என ஹூண்டாய் நிறுவன வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Trending On Drivespark:

புதிய அண்டில் புத்தம் புதிய மூன்று கார்களை வெளியிடும் மாருதி சுஸுகி... முழு தகவல்கள்..!!

விபத்தில்லா பெருவாழ்வு... வாகன ஓட்டுனர்கள் எடுக்க வேண்டிய புத்தாண்டு சபதம்!

கண்ணில் வசமாக சிக்கிய ஹூண்டாயின் புதிய கார் இதுதான்..!!

தற்சமயம் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேவைகளில் புதிய சான்ட்ரோ கார் வெளியிடப்பட்டு, பிறகு அது ஏஎம்டி வேரியன்டிற்கு மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending On Drivespark

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
ஹூண்டாய் நிறுவனம்இந்தியாவில் விற்பனை செய்து வரும் கார்களில், அதற்கான பெரிய விற்பனை திறனை பெற்றுள்ள மாடல் சான்ட்ரோ.
Story first published: Tuesday, January 2, 2018, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark