டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

சென்னையில் அரசு பஸ்ஸில் கல்லூரி மாணவர் கெத்து காட்டுவதாக நினைத்துக்கொண்டு கோமாளி தனங்களில் ஈடுபட்டார். இதனால் பஸ்ஸில் பயணித்தவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல

சென்னையில் அரசு பஸ்ஸில் கல்லூரி மாணவர் கெத்து காட்டுவதாக நினைத்துக்கொண்டு கோமாளி தனங்களில் ஈடுபட்டார். இதனால் பஸ்ஸில் பயணித்தவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

சென்னை கல்லூரி மாணவர்கள் மத்தியில் பஸ்களிலும் எலெக்ட்ரிக் ரயில்களிலும் ஆபத்தான நிலையில் பயணம் செய்வது என்பது வாடிக்கையான விஷயமாகி விட்டது. அவ்வப்போது அவர்கள் செய்யும் அட்டூழியங்கள் செய்திகளாகி வருகின்றன.

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

இந்த பிரச்னை பல ஆண்டுகளாக இருந்தாலும் சமீப காலமாக இவ்வாறு வீர தீர சாகசம் என்ற பெயரில் கோமாளி தனங்களை செய்யும் மாணவர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுகின்றனர்.

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

இது பெரும் வைரலாகி பொதுமக்களின் கவனங்களுக்கு செல்கிறது. இதை பார்க்கும் மற்ற சில இளைஞர்களும் இது போன்ற செயல்களில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

கடந்தாண்டு பட்டாக்கத்தியுடன் வாலிபர்கள் சிலர் எலெக்ட்ரிக் ரயிலில் கத்தியை சுத்தியபடியும், பிளாட்பாரங்களில் நெருப்பு பொறி கிளம்பும் படி கத்தியை உரசியபடியும் பயணித்தனர்.

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

இந்த வீடியோ பெரும் அளவில் வைரலாக பரவியது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து "கவனித்தனர்". அதன் பின்பு புத்தாண்டு கொண்டாட்டதின் போது அடுத்த கோமாளித்தனம் ஒன்று நடந்தது.

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக்கில் சென்ற சில இளைஞர்கள் ரோட்டில் தடுப்பிற்காக வைக்கப்பட்டிருந்த பேரிகாட்டை இழுத்துக்கொண்டே சென்றனர். இந்த வீடியோவும் மறுநாளே வந்தது.

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

இந்த செயலை செய்த வாலிபர் ஒருவர் வாக்குமூலம் அளிப்பது போல் தான் செய்ததை வீர தீர சாகச செயல் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதுவும் வைரலாகியது. மேலும் அவர் அந்த வீடியோவில் போலீசாரை சற்று தர குறைவாகவும் பேசியிருந்தார்.

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

இந்நிலையில் வீடியோவில் உதார் விட்ட வாலிபரை பிடித்த போலீசார் அவரையும் "விழுந்து விழுந்து கவனித்தனர்" அதன் பின் தான் செய்தது தவறு என்றும், இனிமேல் இது போல் செய்ய மாட்டேன் என்றும் அவரே மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

அந்த வரிசையில் தற்போது கல்லூரி மாணவர் ஒருவர் பஸ்ஸில் பயணிக்கும் போது பஸ்ஸின் பின் சக்கரத்திற்கு உள்புறமாக தனது காலை உரசிக்கொண்டு பஸ்ஸில் தொங்கியபடி பயணித்தார். இது குறித்து நியூஸ் 18 வெளியிட்ட செய்தியின் படி

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் முதலில் மெர்சல் பாலா என்ற பெயரில் உள்ள கணக்கில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவில் பயணிக்கும் அந்த வாலிபர் பார்க்கும் போது ஏதோ கல்லூரி மாணவர் என்ற தோற்றத்தில் தான் இருக்கிறார்.

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

சென்னையில் இது போன்ற செயல்களை பெரும்பாலும் செய்வது கல்லூரி மாணவர்களாக தான் இருக்கிறார்கள். இதனால் இதுவும் கல்லூரி மாணவராகவே இருக்கலாம் என்ற பேச்சு தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

தற்போது போலீசார் இந்த வீடியோவில் பஸ்ஸில் தொங்கியபடி பஸ் டயரில் தன் காலை உரசி கொண்டே சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்,.

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

இந்த வீடியோ காட்சிகளை பார்க்கும் போது பல்லவன் சாலையை அடுத்த முத்துசாமி பாலம் அருகே இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கூறப்படுகிறது. அந்த சாலை வழியாக எந்தெந்த கல்லூரி மாணவர்கள் பயணிப்பார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் யார் என்ற கேள்விகளின் அடிப்படையில் இதன் விசாரணை நடந்து வருகிறது.

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

இந்த வீடியோவில் இந்த வீடியோவை எடுத்த நபரின் நண்பர்கள் சிலர் பஸ்சிற்கு பின்னால் பைக்கில் வருவது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அவர்களும் பைக்கில் மூன்று பேராக பயணிக்கிறார்கள். மேலும் யாரும் அதில் ஹெல்மெட்டும் அணியவில்லை. இதுவும் குற்றமாகும். இவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

மேலும் இந்த பஸ்சை ஓட்டிய டிரைவர் மற்றும் கண்டெக்டர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. பஸ்ஸில் பயணிக்கும் பயணி இது போன்ற செயலில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக பஸ்ஸை நிறுத்தி அவர்களை இந்த செயலை செய்வதை தடுக்க வேண்டும் ஆனால் அதையும் இவர்கள் செய்ய தவறியுள்ளனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

இதற்கிடையில் இவ்வாறான செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை பஸ்ஸின் டிரைவர் கண்டெக்டர்கள் கண்டித்தாலும், அந்த செயலில் ஈடுபடுவபர்களுடன் சேர்ந்து வந்த சிலர் கூட்டமாக டிரைவர் மற்றும் கண்டெக்டர்களை மிரட்டியும் ரகளையும் செய்து வருவதாக பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டெக்டர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

இது போன்று கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது அவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு பஸ்களில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!

அடுத்து இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க அரசுடன் சேர்ந்து போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Article Published On: Tuesday, November 13, 2018, 13:36 [IST]
English summary
Student do dangerous stunts in bus while travelling. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+