7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் சோதனை: படங்களுடன் தகவல்கள்!

Written By:
Recommended Video - Watch Now!
Tata Nexon Faces Its First Recorded Crash

இந்திய மார்க்கெட்டில் வெற்றிகரமான பட்ஜெட் கார் மாடல் என்ற பெருக்குரியது மாருதி வேகன் ஆர். இந்த நிலையில், மாருதி வேகன் ஆர் காரின் அதிக இருக்கை வசதி கொண்ட சோலியோ என்ற கார் ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி பிராண்டில் விற்பனை செய்யப்படும் இந்த கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல்கள் பல ஆண்டுகளாக எழுந்து அடங்குவது வழக்கமாகவே உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி சோலியோ 7 சீட்டர் கார் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்ததும் எதிர்பார்ப்புக்கு காரணமாக இருந்து வருகிறது.

7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்த சூழலில், தற்போது சுஸுகி சோலியோ கார் மாருதி கார் ஆலை அமைந்துள்ள குர்கான் சுற்று வட்டாரப் பகுதிகளில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. டீம் பிஎச்பி தளத்தை சேர்ந்த ஒருவர் அந்த காரின் ஸ்பை படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்த கார் மினி எம்பிவி ரகத்தில் நிலைநிறுத்தப்படலாம். 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை பெற்றிருக்கும். உயரம் அதிகமான கார் என்பதால், உயரமானவர்களுக்கும் உட்புறத்தில் அதிக ஹெட்ரூம் இடவசதியை அளிக்கும்.

7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்த காரின் மற்றொரு முக்கிய விஷயம். மாருதி ஓம்னி மற்றும் ஈக்கோ கார்கள் போன்றே, ஸ்லைடிங் டோர் கொண்ட மாடல். அதாவது, கதவை திறக்காமல் தள்ளிவிடுவது போன்ற அமைப்பை பெற்றிருக்கிறது.

7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

ஜப்பானில் இந்த கார் ஹைப்ரிட் எரி நுட்பம் கொண்ட மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இந்த காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மோட்டார் ஜெனரேட்டர் யூனிட் வசதியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரின் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரையும்,118 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி துவங்குவதற்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், இந்த புதிய மாருதி கார் ஆட்டோமொபைல் பிரியர்கள் மத்தியிலும், மாருதி கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் மத்தியிலும் மீண்டும் ஆவலை ஏற்படுத்ததி உள்ளது.

7 சீட்டர் மாருதி வேகன் ஆர் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

இந்தியாவில் களமிறக்குவதற்கு முன்னோட்டமாக, ஆட்டோ எக்ஸ்போவில் மீண்டும் காட்சிக்கு வைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். அதேநேரத்தில், இந்த காரை உடனடியாக விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் எதுவும் மாருதியிடம் இல்லை என்றே தெரிகிறது.

English summary
Suzuki Solio spied in India.
Story first published: Saturday, January 27, 2018, 11:35 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark