விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் கார்ப்பரேட் நிறுவனம்.. டபே டிராக்டரின் வித்தியாச முயற்சி..

விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் அப்ளிகேஷன் ஒன்றை, டபே டிராக்டர் நிறுவனம் லான்ச் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் அப்ளிகேஷன் ஒன்றை, டபே டிராக்டர் நிறுவனம் லான்ச் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் டபே டிராக்டர்..

இந்தியாவின் 2வது மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனமான டபே, விவசாயிகளுக்கு உதவும் வகையில், 'JFarm Service APP' என்ற அப்ளிகேஷனை லான்ச் செய்துள்ளது. டிராக்டர் தேவைப்படும் விவசாயிகள், இதன் மூலமாக மற்ற விவசாயிகளிடம் இருந்து டிராக்டர்களை வாடகைக்கு எடுத்து கொள்ள முடியும்.

விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் டபே டிராக்டர்..

இதுகுறித்து டபே நிறுவனத்தின் தலைவர் கேசவன் கூறுகையில், ''இந்த டிஜிட்டல் அப்ளிகேஷன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 600 ரூபாய் என்ற வீதத்தில் டிராக்டர்களை வாடகைக்கு விட்டதன் மூலம், மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும், சுமார் 16,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் டபே டிராக்டர்..

இந்த விவசாயிகள் கடந்த சீசனில் மட்டும் டிராக்டர்களை வாடகைக்கு வழங்கியதன் மூலமாக ரூ.15 கோடி வருமானம் ஈட்டியுள்ளனர்'' என்றார். கார்ப்பரேட்களுக்கான சமூக பொறுப்பு (CORPORATE SOCIAL RESPONSIBILITY) திட்டத்தின் கீழ் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் டபே டிராக்டர்..

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் இருந்து குறிப்பட்ட அளவு தொகையை ஒதுக்கி சமூக நடவடிக்கைகளுக்கு செலவிட வேண்டும் என்பதுதான் சிஎஸ்ஆர் எனப்படும் கார்ப்பரேட்களுக்கான சமூக பொறுப்பு திட்டமாகும்.

விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் டபே டிராக்டர்..

எனவே 'JFarm Service APP' மூலம் லாபம் ஈட்ட வேண்டும் என்பது எங்களின் நோக்கம் அல்ல என்று டபே நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேசவன் மேலும் கூறுகையில், ''இந்தியாவில் தற்போது சுமார் 45 லட்சம் டிராக்டர்கள் உள்ளன. ஆனால் அவை அதிகம் பயன்படுத்தப்படுகிறதா? என்பது சந்தேகமே.

விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் டபே டிராக்டர்..

இந்த டிராக்டர்களை ஒரு வருடத்திற்கே வெறும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மணி நேரம் வரை மட்டுமே பயன்படுத்துகின்றனர். எனவே அதனை வாடகைக்கு விடுவதன் மூலம் விவசாயிகளால் ஓரளவு கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். இதற்காகவே இந்த டிஜிட்டல் அப்ளிகேஷன்.

விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் டபே டிராக்டர்..

இந்தியாவில் 45 லட்சம் டிராக்டர்கள் இருப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்தேன். இதில், 10 சதவீத டிராக்டர்கள் இந்த திட்டத்தில் இணைந்தால் கூட, விவசாயிகளால் 421 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் டபே டிராக்டர்..

இந்த அப்ளிகேஷன் தற்போது 7 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவின் எஞ்சிய பகுதிகளிலும் இந்த நிதியாண்டிற்கு உள்ளாக, இந்த அப்ளிகேஷன் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சில மாநில அரசுகளுடன் டபே டிராக்டர் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Most Read Articles

டாடா நிறுவனம் சமீபத்தில் லான்ச் செய்த டியாகோ என்ஆர்ஜி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
TAFE Tractor Helps Farmers Through 'JFarm Service APP'. Read in Tamil
Story first published: Monday, September 24, 2018, 11:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X