ஊட்டியில் டாடா 45எக்ஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்: ஸ்பை படங்கள்!

ஊட்டியில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வரும் டாடா 45எக்ஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் ஸ்பை படங்கள் வெலியாகி இருக்கின்றன. அந்த படங்களையும், கூடுதல் விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

ஊட்டியில் டாடா 45எக்ஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்: ஸ்பை படங்கள்!

தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் தற்காலிக ஹெட்லைட்டுகள் மாற்றப்பட்டு, தயாரிப்பு நிலை மாடலில் பயன்படுத்தப்படும் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. பகல்நேர விளக்குகள், பெரிய ஏர் டேம் பகுதி கொடுக்கப்பட்டுள்ளன.

ஊட்டியில் டாடா 45எக்ஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்: ஸ்பை படங்கள்!

அடுத்து பக்கவாட்டில், 4 ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு இருப்பதும் புதிய ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வருகிறது. ஹெட்லைட்டை போலவே, டெயில் லைட்டுகளும் மிக கச்சிதமாகவும் சிறப்பான முறையில் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

ஊட்டியில் டாடா 45எக்ஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்: ஸ்பை படங்கள்!

கடந்த பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் 45எக்ஸ் என்ற பெயரிலான கான்செப்ட் மாடல் தற்போது தயாரிப்பு நிலைக்கு மேம்பட்டிருப்பதை இந்த புதிய ஸ்பை படங்கள் மூலமாக உணர்ந்து கொள்ள முடிகிறது. மேலும், மிக விரைவாக சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகளுடன் இறுதிக் கட்ட சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

ஊட்டியில் டாடா 45எக்ஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்: ஸ்பை படங்கள்!

இந்த காரின் இன்டீரியர் குறித்த தெளிவான படங்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹார்மன் ஆடியோ சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஊட்டியில் டாடா 45எக்ஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்: ஸ்பை படங்கள்!

அதேபோன்று, ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த புதிய கார் எதிர்பார்க்கப்படுகிறது. மிக பிரிமீயமான மாடலாக வர இருக்கிறது.

ஊட்டியில் டாடா 45எக்ஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்: ஸ்பை படங்கள்!

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் எஞ்சின் ஆப்ஷன்கள் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த காரில் 108 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினும், 108 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஊட்டியில் டாடா 45எக்ஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்: ஸ்பை படங்கள்!

மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 உள்ளிட்ட கார்களுடன் நேரடியாக மோதும். போட்டியாளர்களைவிட அதிக சிறப்பம்சங்கள், சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்களுடன் குறைவான விலையில் வரும் என்ற எதிர்பார்ப்பு கார் பிரியர்களின் ஆவலைத் தூண்டி இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த கார் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது.

Source: Wheelmonk

Tamil
English summary
Tata Motors' 45X premium hatchback was spotted testing once again on India roads; now in Ooty. The new spy pics of Tata 45X reveal some extra details of the car, including disc brakes on all four wheels.
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more