டாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்!!

டாடா 45எக்ஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படும் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் இன்டீரியர் ஸ்பை படம் வெளியாகி இருக்கிறது. டாடா நெக்ஸான் காரில் இருப்பது போன்ற ஃப்ளோட்டிங் திரை அமைப்பு கொண்ட இன்ஃபோடெயின்ம

By Saravana Rajan

டாடா 45எக்ஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படும் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் இன்டீரியர் ஸ்பை படம் வெளியாகி இருக்கிறது. அதன்மூலமாக, இந்த காரில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் குறித்த விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

டாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்!!

கடந்த பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் 45எக்ஸ் என்ற பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் கான்செப்ட் மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்திருந்தது. மிக அட்டகாசமான ஸ்டைலில் காட்சி தந்த அந்த கார் பார்வையாளர்களை வெகுவாக வசீகரித்தது.

டாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்!!

இந்த நிலையில், 45எக்ஸ் கான்செப்ட் கார் மாடலை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட புரோட்டோடைப் மாடல்கள் தற்போது தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

டாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்!!

இதுவரை வெளிப்புற டிசைனை யூகிக்கும் அளவிலான ஸ்பை படங்கள் வெளியாகி வந்தன. தற்போது முதல்முறையாக இன்டீரியரை காணும் வாய்ப்புடன் கூடிய ஸ்பை படம் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்பை படத்தின் மூலமாக டேஷ்போர்டு அமைப்பு குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

டாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்!!

மிக முக்கியமாக, டாடா நெக்ஸான் காரில் இருப்பது போன்ற ஃப்ளோட்டிங் திரை அமைப்பு கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புதிய டாடா 45எக்ஸ் காரில் இடம்பெற்றிருப்பது உறுதியாகி இருக்கிறது. அதற்கு கீழாக க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி கட்டுப்பாட்டு சுவிட்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

டாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்!!

முழுவதுமான கருப்பு வண்ண டேஷ்போர்டு அமைப்பு பிரிமியம் காருக்கு உரிய அந்தஸ்தை பெறுகிறது. இரட்டை டயல்களுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் இடம்பெற்றுள்ளன.

டாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்!!

இந்த கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் 2.0 தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மிக பிரம்மாண்டமான அலாய் சக்கரங்கள் இந்த காருக்கு மிடுக்கான தோற்றத்தை தருகிறது. அங்க அடையாளங்கள் முழுமையாக மறைக்கப்பட்டு இருப்பதால், முழுமையாக காண முடியவில்லை.

டாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்!!

டாடா நெக்ஸான் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த காில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படும்.

டாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்!!

இந்த காரில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு அடுத்து இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

டாடா 45எக்ஸ் இன்டீரியர் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்த விபரங்கள்!!

அதாவது, அடுத்த ஆண்டு பண்டிகை கால பட்டியலில் இந்த கார் இடம்பெறும் என்று தெரிகிறது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 ஆகிய கார் மாடல்களுடன் நேரடியாக போட்டி போடும். போட்டியாளர்களைவிட மிகச் சிறப்பான டிசைன், வசதிகள் மற்றும் சரியான விலையில் வரும் என்று கருதப்படுகிறது.

Source: ACI

Article Published On: Friday, August 10, 2018, 16:13 [IST]
English summary
Indian automaker Tata Motors showcased the 45X concept hatchback at the Auto Expo 2018. The company has been testing the prototype version of the car for quite some time on Indian roads. Now, Autocar India has spotted the Tata 45X hatchback and the interior has been revealed.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+