புதிய டாடா 45எக்ஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்... டிசைனை பார்த்து ஆடி போன பலேனோ!
டாடா 45எக்ஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. படங்கள், தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், டாடா நிறுவனம் காட்சிக்கு வைத்திருக்கும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் கான்செப்ட் பத்திரிக்கையாளர்களின் பாராட்டுதல்களை பெற்றிருக்கிறது.

டாடா 45எக்ஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த கார் கான்செப்ட் ஐரோப்பிய டிசைன் தாத்பரியங்களுடன் அசத்துகிறது. வெளித்தோற்றத்திலும் உட்புறத்திலும் அட்டகாசமான டிசைன் தாத்பரியங்களையும், தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கார் வழக்கமான டாடா கார்களிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.

முகப்பில் எல்இடி ஹெட்லைட்டுகளும், அதனுடன் இயைந்து நிற்கும் க்ரில் அமைப்பும் வசீகரிக்கிறது. பம்பர் அமைப்பு புதுமையாக இருக்கிறது. பானட் அமைப்பு நெக்ஸான் உள்ளிட்ட கார்களை நினைவூட்டுவதாக இருக்கிறது.

டாடா 45எக்ஸ் கான்செப்ட் காரின் பக்கவாட்டில் மிக வலிமையான க்ரீஸ் லைன் ஒன்று முன்புற வீல் ஆர்ச்சிலிருந்து பின்புறத்தில் டெயில் லைட்டுகள் வரை இணைக்கிறது. இது காரின் தோற்றத்திற்கு கம்பீரத்தையும் கவர்ச்சியையும் தருகிறது. ஏ பில்லரும், பி பில்லரும் கருப்பு வண்ணத்தில் இருக்கின்றன.
Recommended Video


பின்புறத்தில் டாடா 45எக்ஸ் கான்செப்ட் காரின் விண்ட்ஷீல்டு மிக வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்டு இருப்பதுடன், கூரை முடிவில் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டெயில் லைட்டுகளும் மிக கவர்ச்சியாக இருக்கிறது.

இன்டீரியரை காணும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால், டாடா நெக்ஸான் போன்று ஃப்ளோட்டிங் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், உயர்தர மியூசிக் சிஸ்டம் போன்ற புதிய டாடா கார்களின் அசத்தலான அம்சங்களை பெற்றிருக்கும் என நம்பலாம்.

தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்படும்போது, மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு இணையான ரகத்தில் விற்பனைக்கு வரும். டாடா மோட்டார்ஸ் போட்டியாளர்களைவிட குறைவான விலையில் இந்த காரை இறக்க முனையும் என்பதால், போட்டியாளர்களுக்கு நெருக்கடி தரும்.


Click it and Unblock the Notifications








