புதிய டாடா 45எக்ஸ் காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம்!

புதிய டாடா 45எக்ஸ் ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சினுடன் ஹைப்ரிட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா 45எக்ஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய டாடா 45எக்ஸ் காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம்!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டாடா 45எக்ஸ் என்ற பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் கான்செப்ட் மாடல் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிலையில், இந்த கான்செப்ட் மாடல் தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா 45எக்ஸ் காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம்!

இந்த நிலையில், இந்த கார் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்தன வண்ணம் உள்ளன. புதிய டாடா 45எக்ஸ் ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சினுடன் ஹைப்ரிட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.

புதிய டாடா 45எக்ஸ் காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம்!

இந்த மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்திற்காக 48 வோல்ட் பேட்டரி பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஹைப்ரிட் சிஸ்டம் மூலமாக கார்பன் புகை வெளியேற்றம் குறைவதுடன், அதிக மைலேஜும் கிடைக்கும். மேலும், எஞ்சினுடைய ஆக்சிலரேஷனை அதிகரிக்கவும் இது உதவும்.

புதிய டாடா 45எக்ஸ் காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம்!

டாடா 45எக்ஸ் காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சினை இங்கிலாந்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐரோப்பிய தொழில்நுட்ப மையம் (TMETC) உருவாக்கியது. எனவே, இந்த காருக்கான மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் இந்த மையமே உருவாக்கி இருப்பதாக கருதப்படுகிறது. இந்த மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் இரு நுட்பங்களில் P0 மற்றும் P2 ஆகிய இரண்டு பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.

புதிய டாடா 45எக்ஸ் காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம்!

டாடா 45எக்ஸ் கார் தவிர்த்து, டாடா நெக்ஸான் எஸ்யூவியிலும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் இடம்பெற இருக்கிறது. மேலும், டாடா எக்ஸ்452 என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்பட்டு வரும் பிரிமீயம் செடான் காரிலும் இந்த மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் பயன்படுத்தப்படும்.

புதிய டாடா 45எக்ஸ் காரில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம்!

எதிர்காலத்தில் வாகனங்களுக்கான மாசு உமிழ்வு விதிமுறைகள் மிகவும் கடுமையாக்கப்பட இருக்கிறது. அதனை மனதில் வைத்தே, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது. இதனால், வர்த்தகத்தில் தொய்வு இல்லாமல் தொடர முடியும் வாய்ப்பை பெறும்.

Source: Team BHP

Most Read Articles
English summary
Tata Motors unveiled the 45X hatchback concept alongside the H5X concept at the Auto Expo 2018. Tata Motors is all set to launch the production version of the H5X that is named as Harrier. Tata Motors is also working on the production version of the 45X. Now, more details of the 45X hatchback have been revealed.
Story first published: Monday, November 5, 2018, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X