டாடா பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம் வெளியானது!!

ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்திருந்த 45எக்ஸ் என்ற பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் கான்செப்ட் மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஹூண்டாய் எலைட் 20 மற்றும் மாருதி பலேனோ கார்களுக்கு

By Saravana Rajan

டாடா பிரிமியம் ஹேட்ச்பேக் கார் அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம் வெளியானது!!

ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்திருந்த 45எக்ஸ் என்ற பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் கான்செப்ட் மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஹூண்டாய் எலைட் 20 மற்றும் மாருதி பலேனோ கார்களுக்கு போட்டியாக வரும் மாடல் என்பதால், இந்த கார் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டாடா பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம் வெளியானது!!

தற்போது இந்த கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த கார் அறிமுகம் குறித்து விபரம் வெளியாகி இருக்கிறது. புதிய டாடா 45எக்ஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்த தகவல் கூறுகிறது.

டாடா பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம் வெளியானது!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அட்வான்ஸ்டு மோடுலர் பிளாட்ஃபார்மில்[AMP] இந்த புதிய கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் 2.0 என்ற வடிவமைப்பு கொள்கையில் டிசைன் செய்யப்பபட்டு இருக்கிறது.

டாடா பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம் வெளியானது!!

இந்த காரில் தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோ், பிரிமியம் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகிய பல முக்கிய சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். இந்த காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.

டாடா பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம் வெளியானது!!

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள்தான் இந்த புதிய 45எக்ஸ் காரிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. 1.2 லிட்டர் டர்போர்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டாடா பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம் வெளியானது!!

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையு், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். இந்த கார்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது.

டாடா பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம் வெளியானது!!

இதனுடன் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டாடா எச்5எக்ஸ் எஸ்யூவிக்கு ஹாரியர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோன்று, இந்த புதிய டாடா 45எக்ஸ் காருக்கும் புதிய பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம் வெளியானது!!

ஹூண்டாய் எலைட் ஐ20, மாருதி பலேனோ போன்ற போட்டியாளர்களைவிட அதிக இடவசதியுடன் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என்பதால், அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. டாடா டியாகோ, டாடா நெக்ஸான் வரிசையில் இந்த காரும் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 12, 2018, 12:43 [IST]
English summary
Indian automaker Tata Motors revealed the 45X premium hatchback at the Auto Expo 2018. Now, TheEconomicTimes reports that the Tata 45X will be launched in the Indian market in the festive season of 2019. The Tata 45X concept features a futuristic design which is the new Impact Design 2.0 design philosophy.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+