ஜோடியாக காட்சி தந்த டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள்!!

சென்னையில் உள்ள பார்க்கிங் வளாகத்தில், டாடா ஹேரியர் எஸ்யூவியும், 45எக்ஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் காரும் ஒன்றாக நிறுத்தப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களை டிரைவ்ஸ்பார்க் வாசகர் சிஜின் சாமுவேல் பகி

சென்னையில் உள்ள பார்க்கிங் வளாகத்தில், டாடா ஹேரியர் எஸ்யூவியும், 45எக்ஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் காரும் ஒன்றாக நிறுத்தப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களை டிரைவ்ஸ்பார்க் வாசகர் சிஜின் சாமுவேல் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜோடியாக காட்சி தந்த டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள்!!

இந்த இரு கார்களும் முழுவதுமாக அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்காலிக ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. தயாரிப்பு நிலை மாடலில் இவை மாற்றம் செய்யப்படும்.

ஜோடியாக காட்சி தந்த டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள்!!

டாடா 45எக்ஸ் பிரிமியம் எக்ஸ்யூவி மிகப்பெரிய ஹேட்ச்பேக் கார் மாடலாக தோற்றமளிக்கிறது. இந்த கார் டிசைனில் மிக அசத்தலாக இருக்கும் என்பது கான்செப்ட் மாடலை வைத்து கணிக்கப்பட்ட ஒன்று. மேலும், ஏராளமான தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெறும் என்பதால் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

ஜோடியாக காட்சி தந்த டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள்!!

இந்த காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பன்படுத்தப்படும். இந்த காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வருகிறது. இது மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுடன் நேருக்கு நேர் போட்டியிடும்.

ஜோடியாக காட்சி தந்த டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள்!!

டாடா ஹேரியர் எஸ்யூவியும் மிக மிரட்டலாக தோற்றமளிக்கிறது. இந்த எஸ்யூவியின் டிசைனும் ஆட்டோ எக்ஸ்போவில் பார்த்த பலரையும் ஆவல் கொள்ள செய்துள்ளது. இந்த காரின் இன்டீரியரின் படத்தையும் இங்கே பார்க்கும் வாய்ப்பையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.

ஜோடியாக காட்சி தந்த டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள்!!

இன்டீரியர் மிகவும் பிரிமியமாகவும், சிறப்பாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஃப்ளோட்டிங் தொடுதிரை அமைப்புடைய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவிங் மோடுகளுக்காக சென்டல் கன்சோலில் பிரத்யேக டயல் உள்ளிட்டவை இருப்பது தெரிகிறது. மொத்தத்தில் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

ஜோடியாக காட்சி தந்த டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள்!!

டாடா ஹேரியர் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

ஜோடியாக காட்சி தந்த டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள்!!

டாடா 45எக்ஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் காரானது அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹேரியர் எஸ்யூவியானது அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு கார்களுமே போட்டியாளர்களைவிட அதிக சிறப்பம்சங்கள் மற்றும் சவாலான விலையில் வரும் என்பதால் அதிக ஆவலை கிளப்பியிருக்கிறது.

Article Published On: Saturday, September 15, 2018, 12:46 [IST]
English summary
Tata Motors had revealed the 45X concept hatchback at the Auto Expo 2018. The prototype version of the premium hatchback has been spotted several times on Indian roads. Now, DriveSpark reader Sijin Samuel has sent us the images of the Tata 45X premium hatchback which is parked alongside the Harrier SUV in a parking lot in Chennai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+