டாடா கார்களின் சிறந்த கட்டுறுதியை பரைசாற்றும் சம்பவம்: நெகிழ்ந்து போன உரிமையாளர்!

Written By:

கோவாவில், டாடா நெக்ஸான் கார் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்து குறித்து கார் உரிமையாளர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இருக்கும் படங்களும், தகவல்களும் ஒரு பக்கம் அதிர்ச்சியையும், மறுபுறத்தில் ஒரு நல்ல செய்தியையும் தந்துள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் கார் விபத்து... பயணிகள் பத்திரம்!

கோவாவை சேர்ந்தவர் ஸ்ரீஜித் குமார். தனது புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியில் தனது மனைவி மற்றும் 7வயது மற்றும் 5 வயது மகன்களுடன் சில தினங்களுக்கு முன் வெளியூர் சென்றுள்ளார். அப்போது, அவர் சென்ற குறுகலான சாலையில், டாடா ஏஸ் மினி டிரக் எதிர்திசையில் அதிவேகத்தில் வந்துள்ளது.

டாடா நெக்ஸான் கார் விபத்து... பயணிகள் பத்திரம்!

அந்த மினி டிரக் காருக்கு நேராக வருவதை உணர்ந்து கொண்ட ஸ்ரீஜித் குமார், மோதுவதை தவிர்ப்பதற்காக தான் ஓட்டிச் சென்ற நெக்ஸான் எஸ்யூவியை இடது புறமாக திருப்பி இருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இறங்கியது.

டாடா நெக்ஸான் கார் விபத்து... பயணிகள் பத்திரம்!

அப்போது மண் சாலையில் இருந்த பள்ளத்தில் கார் விழுந்ததுடன், இடது முன்சக்கர டயர் பஞ்சராகி கார் கட்டுப்பாட்டை இழந்தது. அதேவேகத்தில், பல்டியடித்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஸ்ரீஜித்குமாரும், அவரது குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Recommended Video - Watch Now!
Andhra Pradesh State Transport Bus Crashes Into Bike Showroom - DriveSpark
டாடா நெக்ஸான் கார் விபத்து... பயணிகள் பத்திரம்!

கார் கவிழ்ந்த போதிலும் டாடா நெக்ஸான் காரின் சிறப்பான கட்டுமானத்தால் பயணிகளுக்கு அதிக பாதிப்பில்லை. காரின் பின்புற கதவை உடைத்து அனைவரும் பத்திரமாக வெளியேறி விட்டனர்.

டாடா நெக்ஸான் கார் விபத்து... பயணிகள் பத்திரம்!

இந்த விபத்தில் நெக்ஸான் காரின் கூரை மற்றும் பில்லர்கள் மிக வலுவாக இருப்பதை காண முடிகிறது. பில்லர்கள் வலு இல்லை என்றால், நிச்சயம் பயணிகள் பெரிய அளவிலான காயமடைந்திருக்க வாய்ப்புண்டு.

டாடா நெக்ஸான் கார் விபத்து... பயணிகள் பத்திரம்!

தனது குடும்பம் உயிர் பிழைத்தற்கு கடவுளுக்கு நன்றி என்று ஸ்ரீஜித்குமார் தனது பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது அந்த கார் மறு சீரமைப்புக்காக சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. டாடா கார்கள் விபத்தில் சிக்கும் செய்திகள் தொடர்ந்து வந்தாலும், அதில் பயணிப்பவர்கள் பத்திரமாக மீட்கப்படுவது ஆறுதல் தரும் செய்திதான்.

டாடா நெக்ஸான் கார் விபத்து... பயணிகள் பத்திரம்!

டாடா கார்களின் கட்டுமானத்தை மெய்ப்பிக்கும் வகையிலேயே இந்த விபத்தும் அமைந்துள்ளது. பல நிறுவனங்கள் எரிபொருள் சிக்கனத்திற்காக கார்களின் கட்டுமானத்தில் சமரசம் செய்து கொள்கின்றன. ஆனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் கட்டுமானத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். தொடர்ந்து செய்தியை படித்தால், உண்மையை உணர முடியும்.

டாடா கார் விபத்து

கடந்த 31ந் தேதி காலை 9.30 மணியளவில் இந்த டாடா டியாகோ கார் விபத்தில் சிக்கி உள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் பல்டியடித்து சாலை ஓர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து கிடக்கிறது.

டாடா கார் விபத்து

ஆனால், காரில் பயணித்தவர்கள் காயமின்றி, உயிர் தப்பிவிட்டனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

டாடா கார் விபத்து

மேலும், பல்டியடித்தபோதிலும் கார் அதிக சேதமடையவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். காரின் சிறப்பான கட்டுமானத் தரமே இதற்கு காரணமாக பார்க்க முடிகிறது.

டாடா கார் விபத்து

விபத்தில் சிக்கி வருவது துரதிருஷ்டமாக இருந்தாலும், காரின் சிறப்பான கட்டுறுதி காரணமாக பயணிகள் உயிர் தப்பி வருகின்றனர் என்பது புலனாகிறது.

டாடா நெக்ஸான், டாடா டியாகோ கார்களின் கட்டுறுதியை தூக்கி அடிக்கும் வகையில், டாடா ஹெக்ஸா காரின் கட்டுறுதித்தன்மை ஒரு சம்பவம் மூலமாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அந்த சம்பவத்தையும் பார்க்கலாம்.

Via- Rushlane

டாடா கார் விபத்து

மும்பையில் சில மாதங்களுக்கு முன் கன மழை பெய்தது. அப்போது பலமான காற்று வீச்சும் இருந்தது. பலமான காற்று வீச்சு காரணமாக ராட்சத மரம் ஒன்று வெளியில் நிறுத்தப்பட்டு இருந்த டாடா ஹெக்ஸா காரின் மீது விழுந்துவிட்டது.

டாடா கார் விபத்து

வெளியில் நிறுத்தப்பட்டிருந்த அந்த காரின் மீது அந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்து விட்டது. இந்த சம்பவத்தில் டாடா ஹெக்ஸா காரின் கூரை பகுதி சேதமடைந்தது.

டாடா கார் விபத்து

ஆனால், டாடா ஹெக்ஸா காரின் ஏ பில்லர், பி பில்லர் மற்றும் சி பில்லர் ஆகியவை மிக வலுவாக இருந்ததன் காரணமாகவே ராட்சத மரம் விழுந்தும் அதனை தாங்கி நின்றுள்ளது.

டாடா கார் விபத்து

நல்லவேளையாக காரில் பயணிகள் யாரும் இல்லை என்பதால், யாருக்கும் பாதிப்பு இல்லை. இதுவே வேறு கார்களாக இருந்தால் நிச்சயம் கார் மரத்தின் எடையை தாங்க முடியாமல் அப்பளமாகி போயிருக்கும்.

டாடா கார் விபத்து

புதிய டாடா ஹெக்ஸா கார் ஹைட்ரோஃபார்ம்டு லேடர் ஃப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்படுகிறது. இந்த சேஸீ மிக உறுதியானது என்பதுடன், சிறந்த கட்டமைப்பை கொடுக்க வல்லது என்பதுடன், அருமையான ஓட்டுதல் தரத்தையும் வழங்கும். மேலும், எஸ்யூவி தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஆலோசனைகள் பேரில் உருவாக்கப்பட்டுள்ளது.

Picture Credit: Team BHP

English summary
Tata Cars Built Quality Proved Again.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark