டாடா செடான் கார் கான்செப்ட்... ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகமாகிறது!
ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய செடான் கார் கான்செப்ட்டை டாடா மோட்டார்ஸ் வெளியிட இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டு வரும் புதிய கார் மாடல்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. நேர்த்தியான டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சரியான விலை போன்றவை வாடிக்கையாளர்களிடம் சிறப்பான ஆதரவை பெற்று வருகிறது.

டாடா டியாகோ, டீகோர் கார்கள் மூலமாக மார்க்கெட்டில் சிறப்பான இடத்திற்கு முன்னேறி இருக்கும் டாடா மோட்டார்ஸ் அண்மையில் நடந்து முடிந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எச்5எக்ஸ் என்ற புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடலையும், 45எக்ஸ் என்ற பெயரில் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடலையும் பார்வைக்கு வைத்து பார்வையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், அடுத்து ஒரு புத்தம் புதிய காரின் கான்செப்ட் மாடலை விரைவில் வெளியிட இருக்கிறது டாடா மோட்டார்ஸ். அடுத்த மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய செடான் கார் மாடல் கான்செப்ட் ஒன்றை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்த இருக்கிறது.

இந்த புத்தம் புதிய செடான் காரின் டீசரை டாடா வெளியிட்டு இருக்கிறது. வழக்கம்போல் இந்த காரும் மிக நவீன டிசைன் தாத்பரியங்களுடன் வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார்கள் அட்வான்ஸ்டு மோடுலர் பிளாட்ஃபார்மில்தான் [AMP] உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே இந்த புதிய மாடலும் உருவாக்கப்பட இருக்கிறது.

இந்த புதிய செடான் கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்படும். அதன்படி, பெரிய வீல் ஆர்ச்சுகள், கவர்ச்சிகரமான க்ரில் மற்றும் பம்பர் அமைப்புடன் டிசைன் செய்யப்படும்.

வழக்கம்போல் இந்த புதிய டாடா கார்களும் அதிக இடவசதியை பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கும்.

வழக்கம்போல் இந்த புதிய டாடா கார்களும் அதிக இடவசதியை பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜெனிவா மோட்டார்ஸ் ஷோவில் பங்கு கொள்ள துவங்கி 20 ஆண்டுகளை தொட இருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக இந்த புதிய செடான் காரை அங்கு பார்வைக்கு கொண்டு வர இருக்கிறது. கடந்த ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் டாடா டாமோ ரேஸ்மோ என்ற ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.


Click it and Unblock the Notifications








