புதிய கார் எனக்கூறி பழைய காரை வாடிக்கையாளரின் தலையில் கட்டிய டீலர்.. வசமாக சிக்கி கொண்டது டாடா

புதிய கார் என்ற போர்வையில், வாடிக்கையாளருக்கு பழைய காரை விற்பனை செய்த டாடா நிறுவன டீலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

By Arun

புதிய கார் என்ற போர்வையில், வாடிக்கையாளருக்கு பழைய காரை விற்பனை செய்த டாடா நிறுவன டீலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், டாடா நிறுவனத்தையும் நுகர்வோர் நீதிமன்றம் தண்டித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய கார் எனக்கூறி பழைய காரை விற்பனை செய்த டீலர்.. கையும் களவுமாக சிக்கி கொண்டது டாடா..

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்தவர் அதுல் குமார் அகர்வால். பஞ்ச்குலாவில் உள்ள பனர்ஸிதாஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தில், 3.61 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய டாடா கார் ஒன்றை, கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, அதுல் குமார் அகர்வால் வாங்கினார்.

புதிய கார் எனக்கூறி பழைய காரை விற்பனை செய்த டீலர்.. கையும் களவுமாக சிக்கி கொண்டது டாடா..

ஆனால் வாங்கிய முதல் நாளில் இருந்தே கார் அடிக்கடி பழுதாகி கொண்டே இருந்தது. எனினும் முதல் சர்வீஸ் முடிந்த பிறகு, பிரச்னைகள் சரியாகி விடும் என அதுல் குமார் அகர்வால் நினைத்தார். இதன்படி 2015ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி, முதல் சர்வீசுக்கு கார் விடப்பட்டது. ஆனால் அதன்பின்பும் முன்னேற்றம் இல்லை.

புதிய கார் எனக்கூறி பழைய காரை விற்பனை செய்த டீலர்.. கையும் களவுமாக சிக்கி கொண்டது டாடா..

இதனால் காரில் ஏற்பட்ட பிரச்னைகளை எல்லாம், சண்டிகரில் உள்ள பெர்க்லி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு (டாடா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையம்), அதுல் குமார் அகர்வால் பல முறை தெரியப்படுத்தினார். ஆனால் அங்குள்ள டெக்னீசியன்கள் எவரும் காரை சரி செய்து தரவில்லை.

புதிய கார் எனக்கூறி பழைய காரை விற்பனை செய்த டீலர்.. கையும் களவுமாக சிக்கி கொண்டது டாடா..

குறிப்பாக, காரில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியாகும் பிரச்னை நீடித்து கொண்டே இருந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான டாடா டீலர்களிடம் அதுல்குமார் அகர்வால் சென்று விட்டார். ஆனால் ஒருவராலும் பிரச்னையை சரி செய்ய முடியவில்லை.

புதிய கார் எனக்கூறி பழைய காரை விற்பனை செய்த டீலர்.. கையும் களவுமாக சிக்கி கொண்டது டாடா..

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அதுல் குமார் அகர்வால், மாவட்ட குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் உத்தரவின் பேரில், சண்டிகரில் உள்ள பிஇசி யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜி பேராசிரியர்கள் அடங்கிய கமிட்டி, அதுல் குமார் அகர்வாலின் காரை பரிசோதனை செய்தது.

புதிய கார் எனக்கூறி பழைய காரை விற்பனை செய்த டீலர்.. கையும் களவுமாக சிக்கி கொண்டது டாடா..

அப்போது டர்போசார்ஜர், இன்ஜெக்டர், ப்யூயல் லைன் ஆகியவற்றை மாற்றியும் கூட, அதிக அளவிலான கரும்புகை வெளியாவது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் பிக் அப் மிகவும் மந்தமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக அந்த கார் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.

புதிய கார் எனக்கூறி பழைய காரை விற்பனை செய்த டீலர்.. கையும் களவுமாக சிக்கி கொண்டது டாடா..

எல்லாவற்றுக்கும் மேலாக, பனர்ஸிதாஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனமானது, புதிய கார் என்ற பெயரில் பழுதடைந்த பழைய காரை அதுல் குமார் அகர்வாலுக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கி, தற்போது நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புதிய கார் எனக்கூறி பழைய காரை விற்பனை செய்த டீலர்.. கையும் களவுமாக சிக்கி கொண்டது டாடா..

இதன்படி பழைய காரை புதிது என விற்பனை செய்த பனர்ஸிதாஸ் ஆட்டோமொபைல்ஸ், பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத பெர்க்லி டாடா மோட்டார்ஸ் (அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையம்) மற்றும் டாடா மோட்டார்ஸ் (கார் உற்பத்தியாளர்) ஆகியோர், அதுல் குமார் அகர்வாலுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

புதிய கார் எனக்கூறி பழைய காரை விற்பனை செய்த டீலர்.. கையும் களவுமாக சிக்கி கொண்டது டாடா..

அத்துடன் பழைய காருக்கு பதிலாக அதுல் குமார் அகர்வாலுக்கு புதிய கார் வழங்க வேண்டும் அல்லது 3.61 லட்ச ரூபாயை வட்டியுடன் சேர்த்து திருப்பி வழங்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.

புதிய கார் எனக்கூறி பழைய காரை விற்பனை செய்த டீலர்.. கையும் களவுமாக சிக்கி கொண்டது டாடா..

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ஒருவரது ஸ்கோடா லாரா காரின் ரப்பர் பெல்ட் பழுதானது. இந்த சம்பவத்தில் டீலர்கள் எப்படி எல்லாம் கார் ஓனரை ஏமாற்றப்பார்த்தார்கள், அதில் இருந்து அவர் எப்படி தப்பினார் என்பதையும் இங்கே கிளிக் செய்து பாருங்கள்.

டாடா நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் கீழே காணலாம்...

Article Published On: Tuesday, September 11, 2018, 11:57 [IST]
English summary
Tata Dealer Sold Repaired Car As New-Court Orders To Give Compensation. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+