டாடா இ-விஷன் மின்சார செடான் கான்செப்ட் காரின் புதிய படங்கள்!!

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனீவாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், டாடா இ- விஷன் என்ற மின்சார செடான் காரின் மாதிரி மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த காரின் டிசைன் பார்வையாளர்களை

By Saravana Rajan

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனீவாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், டாடா இ- விஷன் என்ற மின்சார செடான் காரின் மாதிரி மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த காரின் டிசைன் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

டாடா இ-விஷன் மின்சார செடான் கான்செப்ட் காரின் புதிய படங்கள்!!

இந்த நிலையில், இந்த கார் குறித்த புதிய படங்கள் ஆட்டோகார் ஃபோரம் இணையப்பக்கத்தில் வெளியாகி இருக்கின்றன. ஆனால், இந்த படங்கள் எங்கு எடுக்கப்பட்டன என்பது குறித்த விபரம் இல்லை. கட்டடத்தின் பக்கத்தில் இந்த கார் நிறுத்தப்பட்டு இருந்தபோது படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

டாடா இ-விஷன் மின்சார செடான் கான்செப்ட் காரின் புதிய படங்கள்!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜெனீவா மோட்டார் ஷோவின்போது சில மாதிரி படங்களை வெளியிட்டது. அந்த படங்கள் போல இல்லாமல், இந்த கார் உண்மையாக எப்படி இருக்கும் என்பதை இந்த படங்கள் காட்டுகின்றன.

டாடா இ-விஷன் மின்சார செடான் கான்செப்ட் காரின் புதிய படங்கள்!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒமேகா பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 4.3 மீட்டர் நீளத்துடன் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

டாடா இ-விஷன் மின்சார செடான் கான்செப்ட் காரின் புதிய படங்கள்!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் மாடல்கள் டிசைன் செய்யப்பட்ட இம்பேக்ட் டிசைன் 2.0 தாத்பரியத்தின் அடிப்படையில்தான் இந்த காரும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் டிசைன் ஜெனீவா மோட்டார் ஷோ வந்த பார்வையாளர்கள் தவிர்த்து, கார் நிறுவனங்களும் பாராட்டும் அளவுக்கு இருந்தது.

டாடா இ-விஷன் மின்சார செடான் கான்செப்ட் காரின் புதிய படங்கள்!!

இந்த கார் மிக நவீன டிசைன் தாத்பரியங்களை பெற்றிருக்கிறது. சொகுசு கார் போல தோற்றமளிக்கிது. இந்த காரில் 21 அங்குல அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஃப்ரேம் இல்லாத கதவுகள் பொருத்தப்பட்டு இருப்பதும் முக்கிய அம்சம்.

டாடா இ-விஷன் மின்சார செடான் கான்செப்ட் காரின் புதிய படங்கள்!!

காரின் உட்புறத்தில் மரத் தகடுகள் மற்றும் லெதர் மூலமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் மடக்கும் வசதி கொண்ட தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இடம்பெற்றுள்ளது.

டாடா இ-விஷன் மின்சார செடான் கான்செப்ட் காரின் புதிய படங்கள்!!

ஏற்கனவே வெளியிடப்பட்ட படங்களில் மூன்று திரைகள் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் மல்டிஃபங்ஷன் ஆகிய மூன்று பிரிவுகளாக இருக்கும்.

டாடா இ-விஷன் மின்சார செடான் கான்செப்ட் காரின் புதிய படங்கள்!!

புதிய டாடா இ-விஷன் காரில் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.நேவிகேஷன் வசதி, காரின் இயக்கம் குறித்த தகவல்களை இந்த சாதனம் புட்டு புட்டு வைக்கும்.

டாடா இ-விஷன் மின்சார செடான் கான்செப்ட் காரின் புதிய படங்கள்!!

இந்த கார் முழுமையான மின்சார கார் மாடலாவும், மிட்சைஸ் செடான் கார்களுக்கு இணையான சிறப்பம்சங்களையும் பெற்றிருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. அப்படி பார்க்கும்போது, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி கார்கள் அங்கம் வகிக்கும் செக்மென்ட்டில் எதிர்காலத்தில் மின்சார மாடலாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.

Image Source: Autocarindia

Most Read Articles
English summary
The E-Vision concept features the latest iteration of Tata's design philosophy, Impact Design 2.0. The concept makes use of exquisite materials and looks really futuristic. Now, new images of the Tata E-Vision concept have emerged on the internet. The location is unknown.
Story first published: Tuesday, May 8, 2018, 13:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X