இந்தியாவின் 'டெஸ்லா'... டாடா இ விஷன் மின்சார கான்செப்ட் காரின் சிறப்பம்சங்கள்!

டாடா இ- விஷன் மின்சார கார் கான்செப்ட்டின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

மின்சார கார்கள் என்றால் காத தூரம் ஓடிய வாடிக்கையாளர்களை, அதே வேகத்தில் தன்பக்கம் ஓடி வரச் செய்த பெருமை அமெரிக்காவின் டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு உண்டு.

இந்தியாவின் 'டெஸ்லா'... டாடா இ விஷன் மின்சார கான்செப்ட் காரின் சிறப்பம்சங்கள்!

டெஸ்லா கார்களை பார்த்த பின்புதான், எலக்ட்ரிக் கார்களை இவ்வளவு சிறப்பாக வடிவமைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் பல முன்னணி கார்கள் நிறுவனங்கள் இந்த மார்க்கெட்டில் நுழைந்தன. இந்த சூழலில், இந்தியாவில் மின்சார கார்களுக்கான மார்க்கெட் இன்னும் கடினமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் 'டெஸ்லா'... டாடா இ விஷன் மின்சார கான்செப்ட் காரின் சிறப்பம்சங்கள்!

எனினும், டாடா மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் சிறப்பான மின்சார கார்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. எனினும், இவை அனைத்தும் இந்தியர்களின் பட்ஜெட்டை மனதில் வைத்தே மிக கவனமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் 'டெஸ்லா'... டாடா இ விஷன் மின்சார கான்செப்ட் காரின் சிறப்பம்சங்கள்!

இந்த நிலையில், கடந்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எச்5 எக்ஸ் என்ற எஸ்யூவி மாடலையும், 45எக்ஸ் என்ற பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் கான்செப்ட் மாடல்களை பார்வைக்கு வைத்திருந்தது.

இந்தியாவின் 'டெஸ்லா'... டாடா இ விஷன் மின்சார கான்செப்ட் காரின் சிறப்பம்சங்கள்!

பத்திரிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களை இந்த இரண்டு கார்களும் வெகுவாக ஈர்த்ததுடன், பெரும் பாராட்டுதல்களையும் பொதுவெளியில் பெற்றன. இந்த உற்சாகம் தோய்ந்த மனதுடன், ஜெனீவா மோட்டார் ஷோவில் ஒரு அட்டகாசமான மின்சார செடான் காரின் கான்செப்ட்டை டாடா அறிமுகம் செய்தது.

இந்தியாவின் 'டெஸ்லா'... டாடா இ விஷன் மின்சார கான்செப்ட் காரின் சிறப்பம்சங்கள்!

டாடா இ- விஷன் கான்செப்ட் என்ற பெயரிலான கார் ஜெனீவா மோட்டார் ஷோவில் குறிப்பிடத்தக்க கார்களில் ஒன்றாக பாராட்டுதல்களை பெற்றது.

இந்தியாவின் 'டெஸ்லா'... டாடா இ விஷன் மின்சார கான்செப்ட் காரின் சிறப்பம்சங்கள்!

சொகுசு, செயல்திறன், வடிவமைப்பு என அனைத்திலும் இந்தியாவின் டெஸ்லா என்று போற்றும் அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்க விஷயம். குறிப்பாக, டாடா இ-விஷன் மின்சார கான்செப்ட்டின் வடிவமைப்புதான் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தது.

இந்தியாவின் 'டெஸ்லா'... டாடா இ விஷன் மின்சார கான்செப்ட் காரின் சிறப்பம்சங்கள்!

டாடா மோட்டார்ஸ் அங்கமாக செயல்படும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஒமேகா என்ற மின்சார கார்கள் உருவாக்குவதற்கு பிளாட்ஃபார்மில்தான் இந்த காரும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வடிவமைப்பு மேலை நாட்டு சொகுசு கார்களுக்கு இணையானதாக இருந்ததே, பலரின் புருவத்தை உயர்த்திய விஷயம்.

இந்தியாவின் 'டெஸ்லா'... டாடா இ விஷன் மின்சார கான்செப்ட் காரின் சிறப்பம்சங்கள்!

டாடா எச்5எக்ஸ் மற்றும் 45 எக்ஸ் கார்கள் உருவாக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில்தான் இந்த காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மிக உயர்தரமான கட்டமைப்பில் வருவதும் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தியாவின் 'டெஸ்லா'... டாடா இ விஷன் மின்சார கான்செப்ட் காரின் சிறப்பம்சங்கள்!

சொகுசு கார்களில் இருப்பது போன்று, பட்டன் மூலமாக முன் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் இந்த கான்செப்ட் மாடலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், பேடில் ஷிஃப்ட் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஃப்ரேம் இல்லாத கண்ணாடி ஜன்னல்கள் இருக்கின்றன.

இந்தியாவின் 'டெஸ்லா'... டாடா இ விஷன் மின்சார கான்செப்ட் காரின் சிறப்பம்சங்கள்!

டெஸ்லா கார்களுக்கு இணையாக என்று கூறுவதற்கான காரணம், இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 7 வினாடிகளில் எட்டிவிடும் என்பதுடன், மணிக்கு 200 கிமீ வேகம் வரை பயணிக்கும் வல்லமையை பெற்றிருக்கும் என்ற விஷயம்தான்.

இந்தியாவின் 'டெஸ்லா'... டாடா இ விஷன் மின்சார கான்செப்ட் காரின் சிறப்பம்சங்கள்!

இதுவரை தயாரிக்கப்பட்ட டாடா கார்களிலேயே மிகவும் அதிவேகமான ஆக்சிலரேசஷன் கொண்ட காராகவும் இருக்கும். இந்த காரில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 300 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்தியாவின் 'டெஸ்லா'... டாடா இ விஷன் மின்சார கான்செப்ட் காரின் சிறப்பம்சங்கள்!

இந்த கார் குறித்து டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கன்ட்டர் பட்செக் கூறுகையில்," இந்த கான்செப்ட் காரை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறோம். இந்த கான்செப்ட் கார் டாடா மோட்டார்ஸ் இயக்குனர் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது. அனுமதி கிடைத்தவுடன் தயாரிப்புக்கு செல்லும்," என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 'டெஸ்லா'... டாடா இ விஷன் மின்சார கான்செப்ட் காரின் சிறப்பம்சங்கள்!

டாடா இ விஷன் மின்சார கார் 2020 - 2022ம் ஆண்டு காலக்கட்டத்தில் உற்பத்தி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா கேம்ரி மற்றும் ஸ்கோடா சூப்பர்ப் கார்களுக்கு இணையான சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. எனவே, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக விலை உயர்ந்த மாடலாக இருக்கும்.

English summary
Tata eVision Electric Sedan: Key Details in Tamil.
Story first published: Monday, March 12, 2018, 17:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X