புதிய டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களின் அறிமுக விபரம்!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எச்5எக்ஸ் எஸ்யூவி அடுத்த ஆண்டு முதல் காலாண்டிலும், 45எக்ஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவும் விற்பனைக்கு அறிமுகமம் செய்யப்பட இர

By Saravana Rajan

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எச்5எக்ஸ் எஸ்யூவி மற்றும் 45எக்ஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள் எப்போது விற்பனைக்கு வர இருக்கின்றன என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களின் அறிமுக விபரம்!!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய எச்5எக்ஸ் எஸ்யூவி கான்செப்ட் மாடலும், 45எக்ஸ் என்ற பிரிமியம் ஹேட்ச்பேக் ரக காரின் கான்செப்ட்டும் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

புதிய டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களின் அறிமுக விபரம்!!

அசத்தலான டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கும் இந்த இரு கார்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற ஆவலும் எழுந்தது.

புதிய டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களின் அறிமுக விபரம்!!

இந்த நிலையில், இரண்டு கார்களின் அறிமுக விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் 5 சீட்டர் மாடல் அடுத்த ஆண்டு முதல் காலாண்டிலும், 45எக்ஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த தகவலை டாடா மோட்டார்ஸ் உயர் அதிகாரி மாயங்க் பரீக் தெரிவித்துள்ளார்.

புதிய டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களின் அறிமுக விபரம்!!

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியானது லேண்ட்ரோவர் நிறுவனத்தின் எல்550 பிளாட்ஃபார்மின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதே கட்டமைப்பில்தான் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி உருவானது. எனவே, இந்த மாடல் மீது அதீத எதிர்பார்ப்பு இருக்கிறது.

புதிய டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களின் அறிமுக விபரம்!!

இந்த மாடலானது 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வர இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, 5 சீட்டர் மாடல்தான் முதலில் வர இருக்கிறது. 7 சீட்டர் மாடல் அதன்பின்னர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களின் அறிமுக விபரம்!!

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்பட இருக்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லைம வாய்ந்தது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களின் அறிமுக விபரம்!!

புதிய 45எக்ஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திந் அட்வான்ஸ்டு மோடுலர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களின் அறிமுக விபரம்!!

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களின் அறிமுக விபரம்!!

இந்த புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விற்பனைக்கு வர இருக்கிறது. வழக்கம்போல் போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: TOI

Article Published On: Friday, April 27, 2018, 10:57 [IST]
English summary
Tata Motors unveiled two concept models at the Auto Expo 2018, the H5X SUV and the 45X premium hatchback. Now, a report from TOI has revealed the launch details of both the models. Tata Motors has been testing the H5X SUV on Indian roads for quite some time and we expected the SUV to be launched soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+