டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் எஸ்யூவிக்கும், தயாரிப்பு நிலை மாடலுக்கும் வித்தியாசங்கள் இருக்காது!

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் கான்செப்ட் மாடலுக்கும், தயாரிப்பு நிலை மாடலுக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்காது என்று வடிவமைப்புப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

By Saravana Rajan

கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்திருந்த டாடா எச்5எக்ஸ் என்ற எஸ்யூவி ரக கார் கான்செப்ட் பார்வையாளர்களையும், மீடியாவினரின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்தது.

டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் அதிகம் மாற்றம் இல்லாமல் வருகிறது!

லேண்ட்ரோவர் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட இந்த புதிய எஸ்யூவி மாடலின் டிசைன் கவர்ச்சிகரமாகவும், நவீன காலக்கட்டத்திற்கான மாடலாகவும் இருந்தததே எல்லோரின் பார்வையும் ஒட்டுமொத்தமாக தன் பக்கம் திருப்பியது. இந்த கான்செப்ட் மாடல் ஏற்கனவே தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு சோதனை ஓட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் அதிகம் மாற்றம் இல்லாமல் வருகிறது!

இந்த நிலையில், டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் கான்செப்ட் மாடலுக்கும், தயாரிப்பு நிலை மாடலுக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரின் வடிவமைப்புப் பிரிவு அதிகாரி பிரதாப் போஸிடம் தி குயின்ட் பத்திரிக்கை நேர்காணல் செய்தது.

டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் அதிகம் மாற்றம் இல்லாமல் வருகிறது!

அப்போது, டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலானது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கான்செப்ட் மாடலை 80 முதல் 85 சதவீதம் வரை ஒத்திருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்.

டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் அதிகம் மாற்றம் இல்லாமல் வருகிறது!

லேண்ட்ரோவர் ஒத்துழைப்பில் இரண்டு எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஒன்று 5 சீட்டர் மாடலாகவும் மற்றொன்று 7 சீட்டர் மாடலாகவும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது 5 சீட்டர் மாடல்.

டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் அதிகம் மாற்றம் இல்லாமல் வருகிறது!

தோற்றத்தில் 7 சீட்டர் மாடல் அதிக வித்தியாசம் இருக்காது. எனினும், மூன்று வரிசை இருக்கைகளுக்காக சற்றே கூடுதல் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் அதிகம் மாற்றம் இல்லாமல் வருகிறது!

இந்த இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் அதிகம் மாற்றம் இல்லாமல் வருகிறது!

அண்மையில் பார்த்த ஸ்பை படங்களின் அடிப்படையில் புதிய டாடா எஸ்யூவி இரட்டை வண்ண டேஷ்போர்டு, தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹார்மன் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கும்.

டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் அதிகம் மாற்றம் இல்லாமல் வருகிறது!

இதர டாடா கார்கள் போலவே மிகச் சிறப்பான உட்புற இடவசதியையும் பெற்றிருக்கும். பின் இருக்கையில் மூன்று பெரியவர்கள் தாராளமாக அமர்ந்து செல்வதற்கான ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் இடவசதியுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் அதிகம் மாற்றம் இல்லாமல் வருகிறது!

பின் இருக்கை பயணிகளுக்கான ஏசி வென்ட் கூரை பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கிறது. புதிய டாடா எஸ்யூவியில் 19 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். இதனால், மிக கம்பீரமான தோரணையை பெற்றிருக்கிறது.

டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் அதிகம் மாற்றம் இல்லாமல் வருகிறது!

புதிய டாடா எஸ்யூவி மாடல்களில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே டீசல் எஞ்சின்தான் இந்த எஸ்யூவிகளில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் அதிகம் மாற்றம் இல்லாமல் வருகிறது!

புதிய டாடா எஸ்யூவியின் 5 சீட்டர் மாடலானது 140 பிஎச்பி பவரையும்,7 சீட்டர் மாடல் எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் அதிகம் மாற்றம் இல்லாமல் வருகிறது!

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு நேர் போட்டியான ரகத்தில் இந்த புதிய எஸ்யூவி மாடல் நிலைநிறுத்தப்படும். மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் எக்ஸ்யூவி700 என்ற புதிய பிரிமியம் எஸ்யூவிக்கு நேர் போட்டியாக இருக்கும்.

Source: The Quint

Most Read Articles
English summary
Tata H5X SUV Production Version Will look at least 80% like its concept.
Story first published: Tuesday, February 27, 2018, 11:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X