ஊட்டியில் டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!!

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி கான்செப்ட்டை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அண்மையில் ஊட்டியில் டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.

By Saravana Rajan

கடந்த பிப்ரவரி மாதம் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி கான்செப்ட் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அட்டகாசமான டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் காட்சிக்கு நிறுத்தப்பட்டிருந்த அந்த கான்செப்ட் மாடல் எப்போது தயாரிப்பு நிலைக்கு செல்லும் என்ற ஆவலும் கூடவே எழுந்தது.

ஊட்டியில் டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!!

இந்த நிலையில், டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி கான்செப்ட்டை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தும் பொருட்டு, தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஊட்டியில் டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!!

அண்மையில் ஊட்டியில் டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஊட்டி மலைச்சாலைகளில் வைத்து அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

ஊட்டியில் டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!!

தற்காலிகமான ஹெட்லைட், டெயில் லைட் கொண்டதாக அந்த மாடல் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்டீரியர் குறித்த தெளிவான படங்கள் இல்லை. எனினும், கான்செப்ட் மாடலை தழுவியே பெரும்பாலான டிசைன் அம்சங்கள் இருக்கும் என்று தெரிகிறது.

ஊட்டியில் டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!!

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக முதலில் அறிமுகமாக இருக்கிறது. இந்த கார் இம்பேக்ட் 2.0 என்ற புதிய தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3டி டெயில் லைட்டுகள், வலிமையான தோற்றத்தை தரும் வீல் ஆர்ச்சுகள், 19 அங்குல அலாய் வீல்கள், இரட்டை வண்ண பம்பர்கள் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ஊட்டியில் டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!!

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி 4,575 மிமீ நீளமும், 1,960மிமீ அகலமும், 1,686 மிமீ உயரமும் கொண்டது. இந்த எஸ்யூவி 2,740 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது. இதனால், உட்புறத்தில் மிக சவுகரியமான இடவசதியை பெற்றிருக்கும்.

ஊட்டியில் டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!!

புதிய டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 140 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். இசட்எஃப் நிறுவனத்தின் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஊட்டியில் டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி சோதனை - ஸ்பை படங்கள்!!

புதிய டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய எஸ்யூவியை டாடா களமிறக்கும் என்பது இப்போதைய கணிப்பாக கூறலாம்.

Source: Rushlane

Most Read Articles
English summary
Tata H5X SUV Spotted in Ooty ghats.
Story first published: Friday, June 15, 2018, 11:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X