TRENDING ON ONEINDIA
-
காஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா
-
திடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...
-
கார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்
-
தலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை
-
வேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன?
-
ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா? “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா
-
ஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு
-
ஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம்! இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்!
இதுதான் டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் புதிய பெயர்?
டாடா எச்5எக்ஸ் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாகும் புதிய எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலுக்கான பெயர் விபரம் கசிந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்தத டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எச்5எக்ஸ் என்ற பெயரில் புதிய எஸ்யூவி காரின் மாதிரி மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த எஸ்யூவியின் டிசைன் மிகச் சிறப்பாக இருந்ததால், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும், இந்த புதிய கான்செப்ட் மாடலானது தயாரிப்பு நிலைக்கு உகந்த பல்வேறு அம்சங்களை பெற்றிருந்ததால், விரைவில் அறிமுகமாகும் வாய்ப்புகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் டாடா ஹாரியர் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோமொபைல் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய டிசைன் கொள்கையில் இந்த புதிய எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டிஸ்கவரி எஸ்யூவியின் பிளாட்ஃபார்மின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதுடன், பல டிசன் அம்சங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்தின் புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதே எஞ்சின்தான் ஜீப் காம்பஸ் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படுகிறது. எனினும், எஞ்சின் திறன் குறித்த தொழில்நுட்ப விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
புதிய டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியானது ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும் ரகத்தில் வருகிறது. மேலும், இந்த புதிய எஸ்யூவி முதலில் 5 சீட்டர் மாடலிலும், பின்னர் 7 சீட்டர் மாடலிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
உட்புறத்தில் மிக நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கும். வழக்கம்போல் டாடா கார்களுக்கு உரித்தான அதிக உட்புற இடவசதியை பெற்றிருப்பதால், போட்டியாளர்களைவிட சிறந்த தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
ரூ.12 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் இந்த புதிய எஸ்யூவி மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்களைவிட சிறந்த அம்சங்களுடன் சவாலான விலையிலும் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Autocarindia