டாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி வரும் ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடலின் அறிமுக விபரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி வரும் ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த நிலையில், டாடா ஹாரியர் எஸ்யூவியானது முதலில் டீசல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே வர இருப்பது உறுதியாகி இருக்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

ஆட்டோமேட்டிக் மாடல் ஆப்ஷன் இப்போது இல்லை என்ற தகவல் வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில், டாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலை உருவாக்கி வருவதாக டாடா மோட்டார்ஸ் வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

அடுத்த ஆண்டு மத்தியில் டாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக கார் தேகோ தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. அதாவது, தனது நேரடி போட்டியாளரின் எஞ்சினையே டாடா ஹாரியர் பங்கிட்டு கொள்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

அதேபோன்று, ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தான் டாடா ஹாரியர் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஆட்டோமேட்டிக் மாடலை கூடிய விரைவில் களமிறக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

முன்னதாக இசட்எஃப் நிறுவனத்திடமிருந்து 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சப்ளை பெற்று ஹாரியரில் பயன்படுத்த டாடா முயற்சி செய்தது. ஆனால், இசட்எஃப் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக விலையை மிக அதிகமாக நிர்ணயிக்க வேண்டி வரும் என்பதை உணர்ந்து அந்த திட்டத்தை கைவிட்டது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

அதேநேரத்தில், அனைவரும் எதிர்பார்க்கும் ஆல் வீல் டிரைவ் மாடலானது இப்போதைக்கு வராது என்ற தெரிகிறது. ஏனெனில், மார்க்கெட்டில் ஆல் வீல் டிரைவ் மாடலுக்கான வரவேற்பு மிக குறைவாக இருப்பதாக காரணமாக பார்க்கப்படுகிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

அதேபோன்று, ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் இருக்கிறது. இதே எஞ்சின் டாடா ஹாரியரிலும் பயன்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஆனால், இதுகுறித்த உறுதியான தகவல் எதுவும் இதுவரை இல்லை.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

இந்த நிலையில், குறைந்தபட்சம் ஆட்டோமேட்டிக் மாடல் அவசியம் என்பதை டாடா மோட்டார்ஸ் உணர்ந்து கொண்டுள்ளது. இதனால், ஹாரியர் ஆட்டோமேட்டிக் மாடலை களமிறக்குவதில் தீவிரமாக இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிட ரூ.70,000 கூடுதல் விலையில் ஆட்டோமேட்டிக் மாடல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, December 10, 2018, 13:31 [IST]
English summary
Tata Harrier Automatic To Be Launched In Mid-2019. Read in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+