புதிய டாடா ஹேரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

அட்டகாசமான டிசைன், சக்திவாய்ந்த எஞ்சினுடன் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவிக்கு இன்று முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.30,000 முன்பணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று

புத்தம் புதிய டாடா ஹேரியர் எஸ்யூவிக்கு இன்று அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டாடா எச்5எக்ஸ் என்ற பெயரில் புத்தம் புதிய எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த நிலையில்,இந்த எஸ்யூவி கான்செப்ட் ஹேரியர் என்ற பெயரில் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கிறது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

கடந்த சில மாதங்களாக சாலை சோதனை ஓட்டங்களில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய எஸ்யூவி சில தினங்களுக்கு முன் ஜீப் காம்பஸ் எஸ்யூவியுடன் சேர்த்து பெஞ்ச் மார்க் டெஸ்ட் செய்யப்பட்டிருப்பது குறித்த ஸ்பை படங்களும் வெளியாகின.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

இந்த சூழலில், அட்டகாசமான டிசைன், சக்திவாய்ந்த எஞ்சினுடன் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவிக்கு இன்று முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.30,000 முன்பணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

நாடு முழுவதும் உள்ள டாடா மோட்டார்ஸ் டீலர்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இல்லையெனில், டாடா ஹேரியர் எஸ்யூவிக்காக துவங்கப்பட்டு இருக்கும் பிரத்யேக இணையப்பக்கத்திலும் சென்றும் முன்பதிவு செய்யலாம்.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

லேண்ட்ரோவர் டி8 கட்டமைப்பு தாத்பரியத்தின் அடிப்படையில்தான் இந்த புதிய டாடாஹேரியர் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள முதல் கார் மாடலும் இதுவே. இதனால், இந்த எஸ்யூவி மீதான எதிர்பார்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

இந்த எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. KRYOTEC என்ற பெயரில் இந்தத எஞ்சினை அண்மையில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. இந்த எஞ்சின் 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

டாடா ஹேரியர் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக இருக்கும். இந்த எஸ்யூவியில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என எண்ணற்ற தொழில்நுட்ப வசதிகளுடன் பிரிமியம் அந்தஸ்து கொண்ட 5 சீட்டர் மாடலாக வர இருக்கிறது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

அண்மையில் வெளியான தகவல்களின்படி, ரூ.16 லட்சம் முதல் ரூ.21 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.13.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

இந்த ஆண்டு இறுதியில் அல்லது ஜனவரியில் இந்த புதிய மாடலை களமிறக்க டாடா திட்டமிட்டுள்ளது. ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு நேர் போட்டியாகவும், ஹூண்டாய் க்ரெட்டா மார்க்கெட்டையும் குறிவைத்து களமிறக்கப்பட இருக்கிறது.

Article Published On: Monday, October 15, 2018, 13:07 [IST]
English summary
Tata Harrier bookings open.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+