லேண்ட்ரோவர் எஸ்யூவிகள் போன்று டாடா ஹேரியர் எஸ்யூவியில் 'ரோட்டரி டயல்' வசதி!
லேண்ட்ரோவர் எஸ்யூவிகளில் இருப்பது போன்ற, டிரைவிங் மோடுகளை மாற்றுவதற்கான ரோட்டரி டயல் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய லேண்ட்ரோவர் சொகுசு எஸ்யூவி மாடல்களில் இடம்பெற்றிருக்கும் அதேபோன்ற ரோட்டரி
லேண்ட்ரோவர் எஸ்யூவிகளில் இருப்பது போன்ற, டிரைவிங் மோடுகளை மாற்றுவதற்கான ரோட்டரி டயல் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடுத்த மாதம் பொது பார்வைக்கு வர இருக்கும் புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி வடிவமைப்பிலும், வசதிகளிலும் நாம் ஏற்கனவே சொன்னது போல, வேற லெவலில் இருக்கும் என்பது தொடர்ந்து வெளியாகி வரும் டீசர்கள் மூலமாக தெரிய வருகிறது.

அருமையான டேஷ்போர்டு அமைப்பு குறித்த டீசர் வெளியானது. இந்த நிலையில், டாடா ஹேரியர் எஸ்யூவியில் இடம்பெற்று இருக்கும் விசேஷ அம்சங்கள் குறித்த டீசர்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அதில், டிரைவிங் மோடுகளை மாற்றுவதற்கான ரோட்டரி டயல் (Drive Selector) கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய லேண்ட்ரோவர் சொகுசு எஸ்யூவி மாடல்களில் இடம்பெற்றிருக்கும் அதேபோன்ற ரோட்டரி டயல் இடம்பெற்றிருப்பது பெரும் ஆவலைத் தூண்டும் அம்சமாக உள்ளது. இந்த காரில் இருக்கும் டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் குறித்த விபரமும், அதனை ரோட்டரி டயல் மூலமாக எளிதாக மாற்றுவதற்கான வசதியும் இருக்கிறது.

ரோடு, ரெயின் மற்றும் ஆஃப் ரோடு என மூன்று விதமான நிலைகளில் டிரைவிங் மோடுகளை மாற்றிக் கொள்ள முடியும். ரோடு என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால், சாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கான இயக்க நிலைகளை வழங்கும்.

இரண்டாவது ரெயின் எனப்படும் மழை நேரத்திற்கான டிரைவிங் மோடில் ஈரப்பதமான சாலைகளில் பாதுகாப்பாக செல்வதற்கான இயக்க நிலைகளை வழங்கும். மூன்றாவதாக ஆஃப்ரோடு மோடில் கரடுமுரடான சாலைகள் மற்றும் சாகசப் பயணங்களில் பாதுகாப்பான பயணத்தை வழங்குவதற்கான தொழில்நுட்பங்களின் உதவியுடன் கார் செல்லும்.

டிரைவிங் மோடுகளை மாற்றும்போது சாலைக்கு தக்கவாறு அதிக தரைப்பிடிப்புடன் செல்வதற்கான தொழில்நுட்பங்கள் செயல்படும். எஞ்சின் செயல்திறனிலும், சஸ்பென்ஷன் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் செய்து கொள்ளும். இதனால், சாலை நிலைகளுக்கு ஏற்ப பாதுகாப்பான பயணத்தை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி கார் உருவாக்கப்பட்ட ஜாகுவார் லேண்ட்ரோவர் D8 பிளாட்ஃபார்மின் அடிப்படையில்தான் ஒமேகா என்ற பிளாட்ஃபார்மில்தான் புதிய டாடா ஹேரியர் உருவாக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் கொள்கையில் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் ஃபியட் எஞ்சின்தான் டாடா ஹேரியர் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் டிசம்பர் 2ந் தேதி புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி முதல்முறையாக பொதுப் பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. வரும் ஜனவரி மாதம் புத்தாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது ரூ.30,000 முன்பணத்துடன் இந்த புத்தம் புதிய எஸ்யூவிக்கு முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








