டாடா ஹேரியர் எஸ்யூவியில் அசத்தலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்!

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் தயாரிப்பில

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியில் ஏராளமான பிரிமீயம் அம்சங்கள் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா ஹேரியர் எஸ்யூவியில் அசத்தலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்!

வரும் ஜனவரி மாதம் புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. சந்தைப் போட்டி மிகுந்த தருணத்தில் வரும் இந்த புதிய எஸ்யூவியில் ஏராளமான பிரிமீயம் அம்சங்களை டாடா மோட்டார்ஸ் கொடுத்துள்ள தகவலை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டுள்ளது.

டாடா ஹேரியர் எஸ்யூவியில் அசத்தலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்!

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் தயாரிப்பில் பிரபலமான விஸ்டியோன் நிறுவனத்திடமிருந்து இந்த இன்ஃபோடயின்மென்ட் சிஸ்டம் சப்ளை பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

டாடா ஹேரியர் எஸ்யூவியில் அசத்தலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்!

மஸ்தா மற்றும் ஃபோர்டு நிறுவனத்தின் கார்களுக்கு விஸ்டியோன் நிறுவனத்தின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான் பயன்படுத்தப்படுகிறது. ரேஞ்ச்ரோவர் வெலர் எஸ்யூவியில் விஸ்டியோன் நிறுவனத்தின் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த வரிசையில் ஹேரியர் எஸ்யூவியில் தரமிக்க இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறுகிறது.

டாடா ஹேரியர் எஸ்யூவியில் அசத்தலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்!

ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் சப்போர்ட் செய்யும் என்பதுடன், ஸ்மார்ட்போன் இணைத்துக் கொள்வதற்கான மிரர்லிங்க் வசதி மற்றும் சேட்டிலைட் நேவிகேஷன் வசதியையும் அலிக்கும். ரிவர்ஸ் கேமராவுக்கும் இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் திரை சப்போர்ட் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டாடா ஹேரியர் எஸ்யூவியில் அசத்தலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்!

டாடா டியாகோ உள்ளிட்ட கார்களில் ஹார்மன் நிறுவனத்தின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஹேரியர் எஸ்யூவிக்கு விஸ்டியோன் நிறுவனத்திடமிருந்து பெறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், ஹார்மனைவிட விஸ்டியோன் நிறுவனத்தின் தொடுதிரை மிக எளிதாகவும், துல்லியமான இயக்குதல் அனுபவத்தை வழங்கும்.

டாடா ஹேரியர் எஸ்யூவியில் அசத்தலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்!

மிக தரமான ஒலியை வழங்கும் ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டமும், டாப் வேரியண்ட்டில் சப் ஊஃபர் ஸ்பீக்கரும் வழங்கப்பட உள்ளது. இது நிச்சயம் ஹேரியர் எஸ்யூவியின் மதிப்புக்கு அதிக வலு சேர்க்கும் விஷயமாக இருக்கும். இதுபோன்று பல பிரிமீயம் அம்சங்கள் டாடா ஹேரியர் எஸ்யூவியில் இடம்பெற இருக்கிறது.

டாடா ஹேரியர் எஸ்யூவியில் அசத்தலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்!

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இந்த எஸ்யூவி 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஹேரியர் எஸ்யூவியில் அசத்தலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்!

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியில் பல முக்கிய பாகங்கள் லேண்ட்ரோவர் மாடல்களிலிருந்து பங்கிட்டுக் கொள்ளும். ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். ரூ.13 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Thursday, November 8, 2018, 11:57 [IST]
English summary
Tata Motors is gearing up for the launch of the Harrier SUV in the country and the company has already revealed the premium SUV. The Tata Harrier will be launched in early 2019 and now, more details of SUV have been revealed. Previously, we had reported about the interior features of the Tata Harrier.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+