டாடா ஹாரியர் எஸ்யூவி பெங்களூரில் சோதனை ஓட்டம்!!

பெங்களூரில், அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் எஸ்யூவியை எமது வாசகர் ஒருவர் படம் பிடித்து அனுப்பி இருக்கிறார். பின்புறத்தில் தற்காலிகமான டெயில் லைட்டுகள் கெ

By Saravana Rajan

டாடா ஹாரியர் எஸ்யூவி பெங்களூரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படத்தையும் மற்றும் கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

டாடா ஹாரியர் எஸ்யூவி பெங்களூரில் சோதனை ஓட்டம்!!

ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலாக காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தும் பணிகளில் டாடா தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியை ஹாரியர் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவி பெங்களூரில் சோதனை ஓட்டம்!!

அவ்வாறு தயாரிப்புக்கு செல்வதற்கான முந்தைய நிலை மாடல்கள் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. பெங்களூர் நகரில் ஓசூர் சாலையில் டாடா ஹாரியர் எஸ்யூவி உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவி பெங்களூரில் சோதனை ஓட்டம்!!

அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டம் செய்யப்பட்ட அந்த மாடலை எமது வாசகர் ஒருவர் படம் பிடித்து அனுப்பி இருக்கிறார். பின்புறத்தில் தற்காலிகமான டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவி பெங்களூரில் சோதனை ஓட்டம்!!

மிக பிரம்மாண்டமான தோற்றத்திலான எஸ்யூவி மாடலாக பின்புறம் தோற்றமளிக்கிறது. வலிமையான பம்பர் அமைப்பு, ரூஃப் ஸ்பாய்லர் உள்ளிட்டவற்றை காண முடிகிறது. பின்புறத்தில் ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கும் என்பதை கணிக்க முடிகிறது. ஆனால், முழுமையாக மூடப்பட்டிருப்பதால், பெரும்பாலான அம்சங்களை யூக அடிப்படையிலேயே சொல்ல முடியும்.

டாடா ஹாரியர் எஸ்யூவி பெங்களூரில் சோதனை ஓட்டம்!!

டாடா ஹாரியர் எஸ்யூவி 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வருகிறது. இதில், 5 சீட்டர் மாடல் முதலில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், தற்போது நமக்கு கிடைத்திருக்கும் மாடலானது 7 சீட்டர் மாடல் என்று தெரிகிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவி பெங்களூரில் சோதனை ஓட்டம்!!

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியானது லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல். இந்த மாடலானது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் கொாள்கையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் முதல் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டாடா ஹாரியர் எஸ்யூவி பெங்களூரில் சோதனை ஓட்டம்!!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மாடலிலும் வருகிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவி பெங்களூரில் சோதனை ஓட்டம்!!

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பிரிமியம் ஆடியோ சிஸ்டம், உயர்தரமான அப்ஹோல்ஸ்ட்ரி போன்றவை இடம்பெற்றிருக்கும். பாதுகாப்பு வசதிகளிலும் மிகச் சிறப்பான மாடலாக இருக்கும்.

டாடா ஹாரியர் எஸ்யூவி பெங்களூரில் சோதனை ஓட்டம்!!

அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்த புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுடன் 5 சீட்டர் மாடல் போட்டி போடும். போட்டியாளர்களுக்கு மிக சவாலான பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 23, 2018, 11:41 [IST]
English summary
Tata Motors is gearing up for the launch of the Harrier SUV in the Indian market in 2019. The company has been testing the SUV on Indian roads for quite some time. Now, we have spotted the Tata Harrier SUV in Bangalore.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+