டாடா ஹாரியர் எஸ்யூவியின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

அடுத்த மாதம் 23ந் தேதி புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அன்றைய தினம் விலை உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களும் வெளியி

டாடா ஹாரியர் எஸ்யூவியின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் எஸ்யூவி தற்போது தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஹாரியர் என்ற பெயரிலான இந்த புத்தம் புதிய எஸ்யூவி மாடல் அண்மையில் நடந்த மீடியா டிரைவின்போது நடந்த நிகழ்ச்சியின்போது பொது பார்வைக்கு வந்தது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

இந்த நிலையில், அடுத்த மாதம் 23ந் தேதி புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அன்றைய தினம் விலை உள்ளிட்ட அனைத்து முக்கிய விபரங்களும் வெளியிடப்படும்.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

லேண்ட்ரோவர் டி8 பிளாட்ஃபார்மை தழுவிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒமேகா பிளாட்ஃபார்மில்தான் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், டிசைனிலும் புதுமையாகவும் சிறப்பாகவும் வந்திருக்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் உள்ளன. அதேநேரத்தில், சன்ரூஃப், டியூவல் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறவில்லை.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

இந்த எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஆட்டோமேட்டிக் வைப்பர் மற்றும் ஹெட்லைட்டுகளும் உள்ளன.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி ரூ.16 லட்சம் முதல் ரூ.21 லட்சம் ஆன்ரோடு விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப் காம்பஸ், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Tata Motors has officially confirmed that their flagship product, the Harrier SUV, will be launched in the country on January 23. The Tata Harrier is one of the most-awaited five-seater SUVs on the Indian market, and it has been almost a month since it was officially unveiled.
Story first published: Tuesday, December 25, 2018, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X