புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் டீசல் எஞ்சின் விபரங்கள் வெளியீடு!!

புதிய ஹேரியர் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் குறித்த தகவலை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் டாடா ஹேரியர் எஸ்யூவிய

புத்தம் புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் அறிமுகத்தை எதிர்பார்த்து எஸ்யூவி பிரியர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அவ்வப்போது வரும் ஸ்பை படங்களை அடித்துபிடித்து பார்த்துக் கொண்டிருந்தவர்களின் ஆவலுக்கு தீணி போடும் விதத்தில், ஹேரியர் எஸ்யூவியில் இடம்பெற இருக்கும் புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் குறித்த தகவலை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் டீசல் எஞ்சின் விபரங்கள் வெளியீடு!!

ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் டாடா ஹேரியர் எஸ்யூவியில் KRYOTEC என்ற புதிய பெயரில் வர இருக்கிறது. இந்த டீசல் எஞ்சின் Variable Geometry Turbocharger துணையுடன் இயங்கும். இந்த எஞ்சின் மல்டி டிரைவ் மோடுகளுடன் வர இருக்கிறது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் டீசல் எஞ்சின் விபரங்கள் வெளியீடு!!

மேலும், ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில், டெரெயின் ரெஸ்பான்ஸ் தொழில்நுட்பத்துடன் புதிய ஹேரியர் எஸ்யூவி வர இருக்கிறது. இதன்மூலமாக, ஹேரியர் எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டுகளில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெறும் என்பது உறுதியாகி இருக்கிறது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் டீசல் எஞ்சின் விபரங்கள் வெளியீடு!!

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட இருக்கிறது. தவிரவும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வருகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்பட இருக்கிறது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் டீசல் எஞ்சின் விபரங்கள் வெளியீடு!!

இந்த புதிய டீசல் எஞ்சினில் குறைவான உராய்வுத் தன்மை மற்றும் நவீன புகை மறுசுழற்சி தொழில்நுட்பத்துடன் வர இருக்கிறது. அதேநேரத்தில், இந்த புதிய டீசல் எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தர நிர்ணயத்திற்கு இணையானதாக இருக்குமா என்பது குறித்து தகவல் இல்லை.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் டீசல் எஞ்சின் விபரங்கள் வெளியீடு!!

டாடா ஹேரியர் எஸ்யூவியில் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் கொடுக்கப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை. எனினும், கடுமையான பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருப்பதால், நிச்சயம் பெட்ரோல் ஆப்ஷன் பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் டீசல் எஞ்சின் விபரங்கள் வெளியீடு!!

லேண்ட்ரோவர் டிஸ்க்வரி ஸ்போர்ட் எஸ்யூவி உருவாக்கப்பட்ட லேண்ட்ரோவர் LS550 பிளாட்ஃபார்மின் அடிப்படையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒமேகா பிளாட்ஃபார்மில்தான் புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளது. மோனோகாக் சாஸியில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் டீசல் எஞ்சின் விபரங்கள் வெளியீடு!!

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியில் ஏராளமான பிரிமியம் அம்சங்களுடன், தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற்றிருக்கும். ரூ.13 லட்சம் ஆரம்ப விலையில் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போட இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் பாதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata Harrier to be powered by the all-new 2.0L KRYOTEC Diesel engine.
Story first published: Monday, October 8, 2018, 10:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X