புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் முதல் தரிசனம்... புக் பண்ண இது போதும்லே!

பெரும் ஆவலைத் தூண்டியிருக்கும், புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் முதல்முறையாக பொதுப் பார்வைக்கு இன்று வந்தது. உற்பத்தி பிரிவில் இருந்து வெளிவந்த முதல் ஹேரியர் எஸ்யூவியின் படங்கள்,

பெரும் ஆவலைத் தூண்டியிருக்கும், புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் முதல்முறையாக பொதுப் பார்வைக்கு இன்று வந்தது. உற்பத்தி பிரிவில் இருந்து வெளிவந்த முதல் ஹேரியர் எஸ்யூவியின் படங்கள், வீடியோவை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் முதல் தரிசனம்... உற்பத்தியும் துவங்கியது!

மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் அமைந்துள்ள டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய உற்பத்தி பிரிவில் இருந்து வெளிவந்த முதல் ஹேரியர் எஸ்யூவியை வரவேற்கும் நிகழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி குவென்டர் பட்செக் மற்றும் பயணிகள் வாகனப் பிரிவு தலைவர் மாயங்க் பரீக் ஆகியோர் பங்கு கொண்டனர்.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் முதல் தரிசனம்... உற்பத்தியும் துவங்கியது!

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் முகப்பு மிக பிரம்மாண்டமாகவும், பிரமாதமாகவும் வந்துள்ளது. வழக்கம்போல் முகப்பு க்ரில் அமைப்பும், ஹெட்லைட்டும் ஒரே பகுதியில் இல்லாமல், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் பனி விளக்குகள் முக்கோண வடிவிலான ஒரே அறையில் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் முதல் தரிசனம்... உற்பத்தியும் துவங்கியது!

வழக்கமாக ஹெட்லைட் பொருத்தப்படும் பகுதியில் பகல்நேர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஹெட்லைட் அறைக்கு கீழே ஏர்டேம் பகுதியும், அதன் அடிப்பகுதியில் ஸ்கிட் பிளேட்டும் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில் வாடிக்கையாளர்களை முகப்பு டிசைன் வெகுவாக கவரும்.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் முதல் தரிசனம்... உற்பத்தியும் துவங்கியது!

பக்கவாட்டில் மிக பெரிய வீல் ஆர்ச்சுகள் அதற்கு இணையான அலாய் சக்கரங்கள் கம்பீரமாக தெரிகின்றன. தற்போது வரும் கார்களில் கொடுக்கப்படும் கூரை மற்றும் உடல் கூடு பகுதியை தனியாக பிரித்துக் காட்டும் ஃப்ளோட்டிங் கூரை அமைப்பு இடம்பெற்றுள்ளது. அதாவது, டி பில்லர் பகுதி கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு தனியாக பிரிக்கப்பட்டது போல காட்சி தருகிறது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் முதல் தரிசனம்... உற்பத்தியும் துவங்கியது!

தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் முகப்பு பகுதியையும், பின்புற பகுதியையும் பார்க்க முடிகிறது. பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர் அமைப்பானது பக்கவாட்டில் மிக சிறப்பாக டிசைன் செய்யப்பட்டு இருப்பதை காண முடிகிறது. அதற்கு கீழே வலிமையான பம்பர் அமைப்பும், அதன் அடிப்பகுதியில் ஸ்கிட் பிளேட்டும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மொத்ததில் வலிமையான எஸ்யூவி மாடலாக மிரட்டுகிறது

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் முதல் தரிசனம்... உற்பத்தியும் துவங்கியது!

கடந்த பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் வைக்கப்பட்டு இருந்த டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதேபோல, அதன் தயாரிப்பு நிலை மாடலாக இன்று தரிசனம் கொடுத்திருக்கும் டாடா ஹேரியர் எஸ்யூவியும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று நம்பலாம்.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் முதல் தரிசனம்... உற்பத்தியும் துவங்கியது!

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியானது லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் ரேஞ்ச்ரோவர் எவோக் எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட்ட லேண்ட்ரோவர் நிறுவனத்தின் எல்- 550 பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புனேயில் உள்ள டாடா டிசைன் ஸ்டூடியோவில் இந்த புதிய எஸ்யூவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் முதல் தரிசனம்... உற்பத்தியும் துவங்கியது!

பிற டாடா கார்களை போலவே, இடவசதியில் சிறப்பான மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதிக தரை இடைவெளி, 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளிட்ட ஆஃப்ரோடு சாகசங்களுக்கான அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் வருகிறது புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் முதல் தரிசனம்... உற்பத்தியும் துவங்கியது!

இந்த கார் 5 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை பெற்றிருக்கும். பின்புற பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள், 2 ஏர்பேக்குகள், சன் ரூஃப், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கும்.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் முதல் தரிசனம்... உற்பத்தியும் துவங்கியது!

ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் எஞ்சின் புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 138 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தில் கிடைக்கும்.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் முதல் தரிசனம்... உற்பத்தியும் துவங்கியது!

டிசம்பரில் உலக அளவிலான அறிமுக நிகழ்ச்சியும், மீடியா டிரைவும் நடக்க இருக்கிறது. வரும் ஜனவரியில் புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி ரூ.13 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீப் காம்பஸ், ஹூண்டாய் க்ரெட்டா மாடல்களுடன் போட்டி போடும். புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலும் வேறு பெயரில் வெளியிட டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் முதல் தரிசனம்... உற்பத்தியும் துவங்கியது!

புனேயில் உள்ள டாடா கார் தொழிற்சாலையில் அமைக்கப்பட்டு இருக்கும் புதிய டாடா ஹேரியருக்கான உற்பத்திப் பிரிவு வெறும் 6 மாதங்களில் அமைக்கப்பட்டு இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Tata Motors is gearing up for the launch of the new Harrier SUV in the Indian market in 2019. Ahead of that, the production of the Tata Harrier has commenced in India and the first SUV has been rolled out of the all-new assembly line in Pune.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X