பெங்களூரில் தரிசனம் கொடுத்த டாடா ஹேரியர் - ஸ்பை படங்கள்!!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எச்5எக்ஸ் என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி கான்செப்ட் ஹேரியர் என்ற பெயரில் தயாரிப்பு நிலை மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது.
பெங்களூரில் டாடா ஹேரியர் எஸ்யூவி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எச்5எக்ஸ் என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி கான்செப்ட் ஹேரியர் என்ற பெயரில் தயாரிப்பு நிலை மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி மாடல் தற்போது தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி பெங்களூரில் வைத்து சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருகிறது. அங்க அடையாளர்கள் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், அந்த எஸ்யூவி பெங்களூர் சாலைகளில் காண முடிந்தது.

இப்போது கிடைத்திருக்கும் படங்களின் மூலமாக லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியின் முகப்பு க்ரில் அமைப்பை தழுவி வடிவமைக்கப்பட்ட க்ரில் அமைப்புதான் புதிய ஹேரியர் எஸ்யூவியில் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்புறம் மிக பிரம்மாண்டமாக இருப்பதுடன், தற்காலிக டெயில் லைட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. சோதனையில் இருக்கும் மாடலில் அலாய் வீல்கள் இருக்கின்றன.

டாடா ஹேரியர் எஸ்யூவி ஒமேகா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியின் டிசைன் மார்க்கெட்டில் நிச்சயம் பெரிய அளவிலான வரவேற்பை பெறும் மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஹேரியர் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. 7 சீட்டர் மாடல் பின்னர் விற்பனைக்கு கொண்டு வரவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. போட்டியாளர்களைவிட அதிக வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கும்.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மாடலிலும் வருகிறது.

அடுத்த ஆண்டு முதல் பாதியில் புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும் வாய்ப்புள்ளது. 7 சீட்டர் மாடலானது டொாயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு இணையான ரகத்தில் நிலைநிறுத்தப்படும்.


Click it and Unblock the Notifications