டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியீடு!!

டாடா எச்5எக்ஸ் என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்ட கான்செப்ட் மாடலின் தயாரிப்பு நிலை மாடலின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது டாடா எச்5எக்ஸ் கான்செப்ட்டின் தயாரிப்பு நிலை மாடலுக

By Saravana Rajan

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடலுக்கான அதிகாரப்பூர்வமான பெயர் இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியீடு!!

கடந்த பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் டாடா எச்5எக்ஸ் என்ற புதிய எஸ்யூவி கான்செப்ட் மாடலை டாடா மோட்டார்ஸ் பார்வைக்கு வைத்திருந்தது. இந்த எஸ்யூவி கான்செப்ட்டின் டிசைன் மிக அசத்தலாக இருந்ததால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியீடு!!

மேலும், எஸ்யூவி பிரியர்கள் மத்தியிலும் ஆவலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த புதிய எஸ்யூவியை சந்தைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. தற்போது தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் இந்த எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் அடுத்த சில மாதங்களில் பொது பார்வைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியீடு!!

இந்த நிலையில், டாடா எச்5எக்ஸ் என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்ட கான்செப்ட் மாடலின் தயாரிப்பு நிலை மாடலின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. மேலும், பெயர் விபரமும் இன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது டாடா எச்5எக்ஸ் கான்செப்ட்டின் தயாரிப்பு நிலை மாடலுக்கு ஹாரியர் என பெயர் சூட்டி இருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியீடு!!

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் உற்பத்தி புனே நகரில் உள்ள டாடா கார் தொழிற்சாலையில் விரைவில் துவங்கப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவியை சற்று பிரிமியம் ரகத்தில் நிலை நிறுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக, நாடுமுழுவதும் உள்ள ஷோரூம்களை நவீனப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியீடு!!

டாடா ஹாரியர் எஸ்யூவியானது லேண்ட்ரோவர் எல்எஸ்550 பிளாட்ஃபார்மின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவிற்கு ஏற்ப பல்வேறு மாறுதல்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. லேண்ட்ரோவர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டாலும், இந்த புதிய எஸ்யூவிக்கான உதிரிபாகங்கள் உள்ளூர் சப்ளையர்களால் பெறப்பட்டு உற்பத்தி செய்யப்படுவதால், விலை மிக சவாலாக இருக்கும்.

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியீடு!!

டாடா ஹாரியர் எஸ்யூவியானு 5 பேர் செல்வதற்கான இருக்கை அமைப்பு மற்றும் 7 பேர் செல்வதற்கான இருக்கை அமைப்பு என இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முதலில் 5 சீட்டர் மாடலும், பின்னர் 7 சீட்டர் மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியீடு!!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 140 பிஎச்பிபவரையும்,320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலும் பின்னர் அறிமுகம் செய்யப்படும்.

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியீடு!!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய யடாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. இதன் 5 சீட்டர் மாடலானது ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 மார்க்கெட்டை குறிவைத்து ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 11, 2018, 18:06 [IST]
English summary
Tata Motors has revealed the name of their upcoming SUV as the Harrier. The company yesterday put out a teaser, showcasing the front-end of the production version of their new SUV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+