டாடா ஹெக்ஸா காரின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம்!
டாடா ஹெக்ஸா காரில் XM+ என்ற புதிய வேரிண்ட் ரூ.15.27 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. 16 அங்குல சார்கோல் க்ரே அலாய் சக்கரங்கள், முன்புற பனிவிளக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரிவர்ஸ்
டாடா ஹெக்ஸா காரின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வேரியண்ட்டின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா ஹெக்ஸா காரில் XM+ என்ற புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. டாடா ஹெக்ஸா காரின் விலை உயர்ந்த XT வேரியண்ட்டைவிட இந்த புதிய வேரியண்ட் சற்றே குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டாடா ஹெக்ஸா XM+ வேரியண்ட்டில் 16 அங்குல சார்கோல் க்ரே வண்ணக் கலவையிலான புதிய அலாய் சக்கரங்கள், முன்புற பனிவிளக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரிவர்ஸ் கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்களும் இந்த வேரியண்ட்டில் உள்ளது.

உட்புறத்தில் சாஃப்ட் டச் எனப்படும் மென்மையான தொடு உணர்வை தரும் தரமான பாகங்களுடன் டேஷ்போர்டு இடம்பெற்றுள்ளது. ஸ்டீயரிங் வீலில் லெதர் உறையும் இந்த வேரியண்ட்டில் முக்கிய அம்சம் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் உள்ளது.

இந்த புதிய வேரிணண்ட்டில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் இடம்பெற்றுள்ளன. 8 வண்ணத்தில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டமும் இந்த வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளது. முழுவது் கருப்பு வண்ண இன்டீரியர் மற்றும் விருப்பத்தின்பேரில் சன்ரூஃப் வசதியுடன் இந்த வேரியண்ட்டை தேர்வு செய்ய முடியும்.

டாடா ஹெக்ஸா காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

டாடா ஹெக்ஸா காரின் XM+ வேரியண்ட் ரூ.15.27 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பொதுவாக நடுத்தர விலை வேரியண்ட்டுகள் விற்பனையில் முக்கிய இடம் வகிக்கின்றன. அந்த வகையில், டாடா ஹெக்ஸா காரின் இந்த புதிய XM+ வேரியண்ட் நிச்சயம் மதிப்புமிக்க தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications