டாடா கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

Written By:

நிதி ஆண்டு முடியும் தருவாயில் கார் விற்பனையை அதிகரிக்கவும், உகாதி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு கார் வாங்குவோர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் சிறப்பு தள்ளுபடி சலுகைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

டாடா டியாகோ

டாடா டியாகோ

விற்பனையில் கலக்கி வரும் டாடா டியாகோ காருக்கு ரூ.28,000 மதிப்புடைய சிறப்பு சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஒரு ரூபாய்க்கு முதல் ஆண்டு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் வரையிலான சிறப்பு பரிசுத் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

 டாடா கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

டாடா டியாகோ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலிலும் வருகிறது. ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி ஆகியவை மிக முக்கிய அம்சங்கள்.

டாடா டீகோர்

டாடா டீகோர்

டாடா டீகோர் காருக்கு ரூ.32,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த காருக்கும் ரூ.1 இன்ஸ்யூரன்ஸ் திட்டமும், ரூ.1 லட்சம் வரையிலான சிறப்பு பரிசுத் திட்டமும் உள்ளது. டாடா டீகோர் கார் 84 பிஎச்பி திறன் வாய்ந்த 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 69 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது.

 டாடா கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

பெட்ரோல் மாடல் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வருகிறது. புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், 15 அங்குல அலாய் சக்கரங்கள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

 டாடா ஸெஸ்ட்

டாடா ஸெஸ்ட்

டாடா ஸெஸ்ட் காருக்கு அதிகபட்சமாக ரூ.65,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இந்த காருக்கும் ரூ.1 இன்ஸ்யூரன்ஸ் திட்டம் வழங்கப்படுகிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 89 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.2 லிட்டர் எஞ்சின் உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

 டாடா கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் எஞ்சின் 75 பிஎச்பி பவரை வழங்கும் ஒரு ஆப்ஷனிலும், 89 பிஎச்பி பவரை அளிக்க வல்ல மற்றொரு ஆப்ஷனிலும் கிடைக்கிறது. டீசல் மாடல் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 15 அங்குல அலாய் வீல்கள், ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு ரூ.80,000 மதிப்புடைய சேமிப்பை பெற முடியும். இந்த மாடலுக்கு ரூ.1க்கு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசுகளை பெறும் வாய்ப்புடைய பரிசுத் திட்டமும் உள்ளது.

 டாடா கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

இந்த எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டு விதமான மாடல்களில் கிடைக்கிறது. ஒரு மாடல் 148 பிஎச்பி பவரையும், மற்றொரு மாடல் 154 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் ஆஃப்ரோடு அம்சங்களை பெற்றிருக்கிறது.

டாடா ஹெக்ஸா

டாடா ஹெக்ஸா

டாடா ஹெக்ஸா காருக்கு ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்பை இப்போது பெற முடியும். ஒரு ரூபாய்க்கு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் திட்டத்துடன் கிடைக்கிறது.

 டாடா கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

இந்த எஸ்யூவியிலும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலிலும் கிடைக்கும். இந்த காரில் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல், ரியர் வியூ கேமரா வசதிகள் உள்ளன.

 டாடா கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

டாடா கார்களுக்கான இந்த விசேஷ சேமிப்புச் சலுகைகள் மார்ச் 31ந் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களை தொடர்பு கொண்டு பெறலாம்.

மேலும்... #டாடா #tata
English summary
Tata Motors Announces March Discount Offers.
Story first published: Wednesday, March 14, 2018, 10:54 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark