ஜெனீவா கண்காட்சியில் அறிமுகமாகும் டாடா புதிய கான்செப்ட் செடான் காரின் டீசர் படங்கள் வெளியீடு..!!

ஜெனீவா கண்காட்சியில் அறிமுகமாகும் டாடா புதிய கான்செப்ட் செடான் காரின் டீசர் படங்கள் வெளியீடு..!!

By Azhagar

விரைவில் தொடங்கவுள்ள ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தும் புதிய செடான் கான்செப்ட் காருக்கான முதல் டீசரை வெளிட்டது.

புதிய டாடா செடான் கான்செப்ட் கார் டீசர் படங்கள் வெளியீடு..!!

எதிர்கால வாகன தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக டாடா தயாராகியிருக்கும் இந்த கான்செப்ட் காரின் இரண்டாது டீசர் படத்தை தற்போது வெளியிட்டுள்ளது.

புதிய டாடா செடான் கான்செப்ட் கார் டீசர் படங்கள் வெளியீடு..!!

இந்த புதிய டீசரில் முன்பக்க முகப்பு விளக்கிற்கான வடிவமைப்பு மற்றும் காரின் க்ரில் அமைப்பு போன்ற காட்டப்பட்டுள்ளது.

இதை பார்க்கும் போது புதிய செடான் கான்செப்ட் காரில் புத்தம் புது எல்.இ.டி திறன் பெற்ற விளக்குகளை பொருத்தியிருப்பது தெரிகிறது.

புதிய டாடா செடான் கான்செப்ட் கார் டீசர் படங்கள் வெளியீடு..!!

இது மல்டி-எல்.இ.டி திறன் பெற்ற முகப்பு விளக்குகளாக தெரிகிறது. மேலும் இதன் வடிவமைப்பில் சில்வர் நிற விரிவாக்கங்கள் விளக்கின் அடியில் இடம்பெற்றுள்ளது.

புதிய டாடா செடான் கான்செப்ட் கார் டீசர் படங்கள் வெளியீடு..!!

டாடா செடான் கான்செப்ட் காரின் டீசர் படங்களை பார்க்கும் போது, அதில் கூர்மையான சாய்வுதள பானட் உள்ளது. இது காருக்கு ஒரு முரட்டு தனமான தோற்றத்தை உருவாக்கி தரலாம்.

புதிய டாடா செடான் கான்செப்ட் கார் டீசர் படங்கள் வெளியீடு..!!

முற்றிலும் புதிய மற்றும் நவீன தரத்தில் உருவாகும் இந்த செடான் கான்செப்ட் கார் டாடாவின் அட்வான்ஸிடு மாடுலர் பிளாட்ஃப்பார்மின் (AMP) கீழ் தயாராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா செடான் கான்செப்ட் கார் டீசர் படங்கள் வெளியீடு..!!

இதே பிளாட்ஃப்பார்மில் உருவாக்கப்பட்ட 45எக்ஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரை 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டாடா காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய டாடா செடான் கான்செப்ட் கார் டீசர் படங்கள் வெளியீடு..!!

இதன் மூலம் ஜெனிவா கண்காட்சியில் டாடா காட்சிப்படுத்த உள்ள இந்த புதிய செடான் கான்செப்ட் கார் ப்ரீமியம் தர அம்சங்களை பெற்றிருக்கும் என்பது உறுதியாகிறது.

புதிய டாடா செடான் கான்செப்ட் கார் டீசர் படங்கள் வெளியீடு..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் இடம்பெற்ற கார்களின் மூலம், டாடா தனது வடிவமைப்பு கொள்கைகளை மாற்றியுள்ளது தெரிகிறது.

அது வெளியிட்ட ஹெச்5 எக்ஸ் எஸ்யூவி மற்றும் 45 எக்ஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் புதிய வடிவமைப்பு மொழிகளில் தயாராகி இருந்தது.

புதிய டாடா செடான் கான்செப்ட் கார் டீசர் படங்கள் வெளியீடு..!!

இம்பேக்ட் டிசைன் 2.0 என்ற பெயரில் இந்த இரண்டு கார்களும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வந்தது. இதுதவிர இந்த புதிய செடான் பற்றிய எந்த தகவல்களையும் டாடா மோட்டார்ஸ் வெளியிடவில்லை.

புதிய டாடா செடான் கான்செப்ட் கார் டீசர் படங்கள் வெளியீடு..!!

இருப்பினும் இந்த கார் ரெவட்ரான் மற்றும் ரெவோடோர்க் எஞ்சின் தேர்வுகளை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவைகளில் இந்த கார்கள் தயாராகலாம்.

புதிய டாடா செடான் கான்செப்ட் கார் டீசர் படங்கள் வெளியீடு..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா வெளியிட்ட புதிய கான்செப்ட் பெற்ற கார்கள் பெரியளவில் இந்திய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. தற்போது ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளிவரும் கார்களும் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளன.

புதிய டாடா செடான் கான்செப்ட் கார் டீசர் படங்கள் வெளியீடு..!!

டீசர் படங்களை பார்க்கும் போது, கான்செப்ட் செடான் கார் இம்பேக்ட் டிசைன் 2.0-வின் கீழ் எதிர்கால வாகன தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் தயாராகியுள்ளது.

புதிய டாடா செடான் கான்செப்ட் கார் டீசர் படங்கள் வெளியீடு..!!

இந்தியா உட்பட உலக நாடுகளில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய செடான் கான்செப்ட் காரை வரும் மார்ச் 6, 2018 அன்று நடைபெறவுள்ள ஜெனீவா கண்காட்சியில் அறிமுகமாகிறது.

Article Published On: Tuesday, February 27, 2018, 12:41 [IST]
English summary
Read in Tamil: Tata Concept Sedan Teased Again Ahead Of Geneva Debut. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+