வெள்ளத்தில் சிக்கிய கேரள மக்களுக்கு கை கொடுக்கும் டாடா
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டாடா வாகனங்களை டோ செய்து சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லும் பணியை டாடா நிறுவனம் இலவசமாக வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. விரைவில் வெள்ள நிவாரண தொகை
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டாடா வாகனங்களை டோ செய்து சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லும் பணியை டாடா நிறுவனம் இலவசமாக வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. விரைவில் வெள்ள நிவாரண தொகையை கேரள முதல்வரிடம் அந்நிறுவனம் சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிகிறது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் அம்மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. பலர் வீடுகளையும் குடும்பங்களையும் இழந்து நிற்கின்றனர். வெள்ள நீரை சமாளிக்கமுடியாமல் நூற்றிற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கேரளா முழுவதும் நோய் தொற்றும் அபாயமும் உள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள 37 அணைகளில் 35 அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளும் பெரும் பேரிடர்களை உருவாக்கியுள்ளது.இதையடுத்து கேரள மக்களுக்கு நிரவாணங்களை மற்ற மாநில மக்கள், மற்ற மாநில அரசு என எல்லோரும் வழங்கி வருகின்றனர்.

ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களும் தங்கள் பங்கிற்கு நிவாரண நிதிகளை கேரள அரசிற்கு வழங்கி வருகின்றனர். மெர்ஸிடிஸ் பென்ஸ், டிவிஎஸ் மோட்டா்ஸ், மற்றும் ஃபோக்ஸ்வாகன் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்கள் பங்கிற்கு வெள்ளி மீட்பு பணியை அறிவித்துள்ளது. அதன் படி டாடா கார்கள் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை இலவசமாக டோ செய்து செல்லும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இது குறித்து கேரளவில் உள்ள டாடா வாடிக்கையாளர்களுக்கு இதை எஸ்எம்எஸ் மூலம் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்கள் பங்கிற்கு வெள்ளி மீட்பு பணியை அறிவித்துள்ளது. அதன் படி டாடா கார்கள் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை இலவசமாக டோ செய்து செல்லும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இது குறித்து கேரளவில் உள்ள டாடா வாடிக்கையாளர்களுக்கு இதை எஸ்எம்எஸ் மூலம் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது கேரளாவில் வெள்ள வடிந்த பின்பு இந்த நடவடிக்கையை டாடா நிறுவனம் நடைமுறைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிறுவனம் விரைவில் கேரள முதல்வரை சந்தித்து தங்கள் பொருட்களுக்கான நிவாரண தொகையை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்


Click it and Unblock the Notifications