டாடா கார்களின் விலை அதிகரிக்கிறது

ஆட்டோமொபைல் துறையில் பல வாகனங்களை வெற்றிகரமாக விற்பனை செய்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகனத்திற்கான விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

By Balasubramanian

ஆட்டோமொபைல் துறையில் பல வாகனங்களை வெற்றிகரமாக விற்பனை செய்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகனத்திற்கான விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

டாடா கார்களின் விலை அதிகரிக்கிறது

எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை அதிகரிப்பு என்பது குறித்து அந்நிறுவனம் குறிப்பிடவில்லை, எனினும் அனைத்து மாடல் கார்களும் கட்டாயம் விலையை அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு காருக்கும் சுமார் ரூ 60,000 வரை விலையேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா கார்களின் விலை அதிகரிக்கிறது

உற்பத்தி செலவுகள், மார்கெட் நிலவரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த விலையேற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விலையேற்றம் வரும் ஏப்., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

டாடா கார்களின் விலை அதிகரிக்கிறது

இது குறித்து டாடா மோட்டார் பயணிகள் வாகன வர்த்தக தலைவர் மயங்க் பாரிக் கூறுகையில் :"உற்பத்தி செலவுகள், மார்க்கெட் நிலவரம், மற்றும் பொருளாதார நிலைகளை கருத்தில் கொண்டு விலையேற்றம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வரும் ஆண்டுகளில் எங்களின் வளர்ச்சியை அது பாதிக்காத வகையில் பார்த்து கொள்வோம்."என கூறினார்.

டாடா கார்களின் விலை அதிகரிக்கிறது

சமீபமாக காலமாக டியாகோ, ஹெக்ஸா, டிகோர், நெக்ஸான் மாடல் கார்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது வாடிக்கையார்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாடா கார்களின் விலை அதிகரிக்கிறது

டாடா மோட்டர்ஸ் நிறுவனம் எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலையேற்றம் என அறிவிக்காவிட்டாலும் அந்நிறுவனத்தில் உயர் ரக காரான ஹெக்ஸா காரிற்கு தான் அதிகபட்ட விலையேற்றமான ரூ 60,000 விலையேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 21, 2018, 10:09 [IST]
English summary
Tata Motors Hike Prices Of its Entire Passenger Vehicle Lineup. Read in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+