விடாது கருப்பு... வாகனத்தின் பழுதை சரி செய்து தர மறுத்த டாடா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்...

வாகனத்தின் பழுதை உரிய முறையில் சரி செய்து தர மறுத்த டாடா டீலரை வாடிக்கையாளர் ஒருவர் கதறவிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகனத்தின் பழுதை உரிய முறையில் சரி செய்து தர மறுத்த டாடா டீலரை வாடிக்கையாளர் ஒருவர் கதறவிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பழுதை சரி செய்ய மறுத்த டீலரிடம் ரூ.41 ஆயிரத்தை கறந்த பலே வாடிக்கையாளர்.. நீங்களும் இதை செய்யலாமே

இந்தியாவில் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் டீலர்கள், வாடிக்கையாளர்களிடம் பல்வேறு வழிகளில் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டுள்ளன. இன்சூரன்ஸ், வரி என்ற பல பெயர்களில் வாடிக்கையாளர்களின் பணத்தை அவர்கள் சுருட்டுகின்றனர்.

பழுதை சரி செய்ய மறுத்த டீலரிடம் ரூ.41 ஆயிரத்தை கறந்த பலே வாடிக்கையாளர்.. நீங்களும் இதை செய்யலாமே

இப்படி தங்களின் பணம் சுருட்டப்படுவதை பல வாடிக்கையாளர்கள் அறிந்தே வைத்துள்ளனர். ஆனால் இந்த பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது? நமக்கு ஏன் வம்பு? என பலர் அமைதியாகவே இருந்து விடுகின்றனர். இதுதவிர டீலர்கள் சில சமயங்களில் வாகனங்களை சரியாக சர்வீஸ் செய்து தருவரும் கிடையாது.

பழுதை சரி செய்ய மறுத்த டீலரிடம் ரூ.41 ஆயிரத்தை கறந்த பலே வாடிக்கையாளர்.. நீங்களும் இதை செய்யலாமே

சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவரான நீரஜ் திவாரிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. நீரஜ் திவாரி என்பவர், டாடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பில், ட்ரக் ஒன்றை வாங்கினார். ஆனால் ட்ரக் அடிக்கடி பழுதாகி கொண்டே இருந்தது.

பழுதை சரி செய்ய மறுத்த டீலரிடம் ரூ.41 ஆயிரத்தை கறந்த பலே வாடிக்கையாளர்.. நீங்களும் இதை செய்யலாமே

இதனால் சம்பந்தப்பட்ட டீலரிடம், நீரஜ் திவாரி ட்ரக்கை கொடுத்தார். ஆனால் டீலர்ஷிப்பில் இருந்தவர்கள் பழுதை சரி செய்து தர மறுத்து விட்டனர். இத்தனைக்கு நீரஜ் திவாரியின் ட்ரக், வாரண்டி காலத்திற்கு உட்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பழுதை சரி செய்ய மறுத்த டீலரிடம் ரூ.41 ஆயிரத்தை கறந்த பலே வாடிக்கையாளர்.. நீங்களும் இதை செய்யலாமே

எனவே இந்த பிரச்னையை அப்படியே விட்டு விடக்கூடாது என நீரஜ் திவாரி முடிவு செய்தார். உடனடியாக மாவட்ட அளவிலான நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தை நீரஜ் திவாரி அணுகினார். ஆனால் அங்கே அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை.

பழுதை சரி செய்ய மறுத்த டீலரிடம் ரூ.41 ஆயிரத்தை கறந்த பலே வாடிக்கையாளர்.. நீங்களும் இதை செய்யலாமே

ஆம், மாவட்ட அளவிலான நுகர்வோர் குறைதீர் நீதிமன்றமானது, நீரஜ் திவாரியின் மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இருந்தபோதும் நீரஜ் திவாரி விடவில்லை. அடுத்தபடியாக, மாநில அளவிலான நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தை அவர் அணுகினார்.

பழுதை சரி செய்ய மறுத்த டீலரிடம் ரூ.41 ஆயிரத்தை கறந்த பலே வாடிக்கையாளர்.. நீங்களும் இதை செய்யலாமே

இதனை ஏற்றுக்கொண்ட மாநில அளவிலான நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம், நீரஜ் திவாரியின் புகாரை விசாரித்தது. விசாரணை முடிவில் நீரஜ் திவாரிக்கு, சம்பந்தப்பட்ட டீலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Recommended Video

மஹிந்திரா அல்டுராஸ் ஆஃப் ரோடு டிரைவ் - முதல் அபிப்ராயம்
பழுதை சரி செய்ய மறுத்த டீலரிடம் ரூ.41 ஆயிரத்தை கறந்த பலே வாடிக்கையாளர்.. நீங்களும் இதை செய்யலாமே

ஆனால் குற்றச்சாட்டில் இருந்து டாடா நிறுவனம் விடுவிக்கப்பட்டது. இதற்கு காரணம் ஒன்றும் கூறப்பட்டது. நீரஜ் திவாரியின் ட்ரக்கில் உற்பத்தி குறைபாடு எதுவும் ஏற்படவில்லை. எனவே இந்த விவகாரத்தில் ட்ரக்கின் உற்பத்தியாளரான டாடா நிறுவனம் மீது எந்த தவறும் இல்லை என கூறப்பட்டது.

பழுதை சரி செய்ய மறுத்த டீலரிடம் ரூ.41 ஆயிரத்தை கறந்த பலே வாடிக்கையாளர்.. நீங்களும் இதை செய்யலாமே

என்றாலும் வாரண்டி காலத்தின் கீழ் இருந்தும், ட்ரக்கை பழுது நீக்கி தர மறுத்த டீலர், நீரஜ் திவாரிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பில், நீரஜ் திவாரிக்கு திருப்தி ஏற்படவில்லை.

பழுதை சரி செய்ய மறுத்த டீலரிடம் ரூ.41 ஆயிரத்தை கறந்த பலே வாடிக்கையாளர்.. நீங்களும் இதை செய்யலாமே

எனவே தேசிய நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தை நீரஜ் திவாரி அணுகினார். இதனை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் நீதிமன்றமானது, மாநில அளவிலான நீதிமன்றத்தின் உத்தரவில் சில திருத்தங்களை மேற்கொண்டு, அதிரடியான உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது.

பழுதை சரி செய்ய மறுத்த டீலரிடம் ரூ.41 ஆயிரத்தை கறந்த பலே வாடிக்கையாளர்.. நீங்களும் இதை செய்யலாமே

இந்த விவகாரத்தில் வாகன உற்பத்தியாளருக்கும் பொறுப்பு இருப்பதாக தேசிய நுகர்வோம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே டாடா மோட்டார்ஸ் மற்றும் அதன் டீலர் ஆகிய இருவரும் இணைந்து நீரஜ் திவாரிக்கு 41,568 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பழுதை சரி செய்ய மறுத்த டீலரிடம் ரூ.41 ஆயிரத்தை கறந்த பலே வாடிக்கையாளர்.. நீங்களும் இதை செய்யலாமே

இந்த தொகையை ஒரு மாத காலத்திற்குள்ளாக வழங்க வேண்டும் என டாடா மோட்டார்ஸ் மற்றும் அதன் டீலருக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் மற்றும் அதன் டீலர்கள் இது போன்ற புகார்களில் சிக்குவது இது முதல் முறையல்ல.

பழுதை சரி செய்ய மறுத்த டீலரிடம் ரூ.41 ஆயிரத்தை கறந்த பலே வாடிக்கையாளர்.. நீங்களும் இதை செய்யலாமே

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அதுல் குமார் அகர்வால் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டாடா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப் புதிய கார் ஒன்றை வாங்கினார். ஆனால் வாங்கியது முதலே கார் அடிக்கடி பழுதாகி கொண்டே இருந்தது.

பழுதை சரி செய்ய மறுத்த டீலரிடம் ரூ.41 ஆயிரத்தை கறந்த பலே வாடிக்கையாளர்.. நீங்களும் இதை செய்யலாமே

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அதுல் குமார் அகர்வார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது புதிய கார் என்ற போர்வையில் பழைய கார் ஒன்றை அதுல் குமார் அகர்வாலின் தலையில் கட்டியிருப்பது தெரியவந்தது.

பழுதை சரி செய்ய மறுத்த டீலரிடம் ரூ.41 ஆயிரத்தை கறந்த பலே வாடிக்கையாளர்.. நீங்களும் இதை செய்யலாமே

இந்த வழக்கில் காரை விற்பனை செய்த டீலருடன் சேர்த்து, அதன் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் நீதிமன்றம் தண்டனை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Tata Motors, Its Dealer Ordered To Pay Rs.41k Compensation To Chhattisgarh Customer. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X