டாடா கார்களின் விலை கணிசமாக உயர்கிறது

அடுத்த மாதம் டாடா கார்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா கார்களின் விலை கணிசமாக உயர்கிறது

மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களை வைத்து, ஒவ்வொரு காலாண்டிலும் கார் நிறுவனங்கள் பரிசீலனை செய்வது வழக்கம். ஆண்டின் மத்தியில் வரும் காலாண்டுகளில் விலை உயர்வு தவிர்க்கப்பட்டாலும், புத்தாண்டிலும் அதற்கு அடுத்து மார்ச்சிலும் கார் விலையை உயர்த்துவது வாடிக்கையாக உள்ளது.

டாடா கார்களின் விலை கணிசமாக உயர்கிறது

இந்த நிலையில், புத்தாண்டு நெருங்கி வருவதையடுத்து, கார் விலையை உயர்த்தும் முயற்சிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. புத்தாண்டில் கார் விலையை உயர்த்தப் போவதாக முன்னணி கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

டாடா கார்களின் விலை கணிசமாக உயர்கிறது

வரும் ஜனவரி 1 முதல் தனது அனைத்து பயணியர் வாகனங்களின் விலையையும் ரூ.40,000 வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் கூறி இருக்கிறது.

MOST READ: நிஸான் கிக்ஸ் எஸ்யூவி கிக் ஏற்றியதா அல்லது இறக்கியதா? - டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

டாடா கார்களின் விலை கணிசமாக உயர்கிறது

டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் முன்னணி மாடல்களின் விலை உயர்த்தப்பட இருக்கிறது. இது புத்தாண்டில் டாடா கார்களை வாங்க காத்திருப்போருக்கு சற்று ஏமாற்றம் தரும் விஷயமாக அமைந்துள்ளது.

டாடா கார்களின் விலை கணிசமாக உயர்கிறது

இந்த கார்களை வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொண்டால், விலை உயர்விலிருந்து தப்ப இயலுமா என்பதை அருகிலுள்ள டாடா டீலர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்வது அவசியம். முன்பதிவு செய்திருப்பவர்களும் புத்தாண்டில் டெலிவிரி பெற திட்டமிட்டிருந்தால், டாடா டீலரை தொடர்பு கொண்டு விலை உயர்வு குறித்து உறுதி செய்து கொள்வது அவசியம்.

டாடா கார்களின் விலை கணிசமாக உயர்கிறது

இதனிடையே, இந்த ஆண்டு போலவே புதிய மாடல்களை 2019ம் ஆண்டிலும் களமிறக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. முதல் மாடலாக அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கும் டாடா ஹாரியர் எஸயூவி ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

MOST READ: இந்தியாவை ஏளனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்க களத்தில் குதித்த டாடா மோட்டார்ஸ்... குவியும் பாராட்டு

டாடா கார்களின் விலை கணிசமாக உயர்கிறது

மேலும், இந்த எஸ்யூவியானது விற்பனைக்கு முன்னதாக, சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பொது மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலமாக, இந்த எஸ்யூவியை மிக எளிதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமடைய செய்ய முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tamil
English summary
Tata Motors has announced a price hike for their new cars (2019 models). Depending on the model and city, the price hike can go up to Rs 40,000 and will be in effect from 1st January 2019. This applies to only passenger vehicles and the brand has not shared anything regarding their commercial portfolio.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more