ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் திட்டத்தை விற்க டாடா மோட்டார்ஸ் முடிவு!

ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் காரை தயாரிப்பு நிலை மாடலாக உருவாக்க விருப்பமுள்ள நிறுவனத்திடம் இந்த கார் திட்டத்தை விற்பனை செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. எனவே, இந்த ரேஸ்மோ கார் வேறு நிறுவனத்தின் மூல

By Saravana Rajan

ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் திட்டத்தை விற்பனை செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் திட்டத்தை விற்க டாடா மோட்டார்ஸ் முடிவு!

கடந்த ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் டாமோ என்ற புதிய கார் பிராண்டை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. டாமோ பிராண்டில் அதிசெயல்திறன்மிக்க ஸ்போர்ட்ஸ் கார்களையும், மின்சார கார்களையும் உருவாக்க இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்தது. டாமோ பிராண்டில் முதல் மாடலாக ரேஸ்மோ என்ற பெயரில் காம்பேக்ட் ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடலை காட்சிப்படுத்தியது.

ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் திட்டத்தை விற்க டாடா மோட்டார்ஸ் முடிவு!

ஜெனிவா மோட்டார் ஷோ வந்த பார்வையாளர்களை இந்த கார் வெகுவாக கவர்ந்தது. எனவே, நிச்சயம் இந்த கார் தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன், ஐரோப்பாவின் மதிப்புமிக்க டிசைன் விருதையும் இந்த கார் பெற்றது.

ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் திட்டத்தை விற்க டாடா மோட்டார்ஸ் முடிவு!

இத்தாலியை சேர்ந்த பிரபல டிசைனர் மர்செல்லோ காந்தினிதான் இந்த காரை வடிவமைத்து கொடுத்தார். காம்பேக்ட் ரகத்திலான ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. மிக நவீன டிசைன் தாத்பரியங்களை இந்த கார் பெற்றிருந்தது.

ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் திட்டத்தை விற்க டாடா மோட்டார்ஸ் முடிவு!

இந்த காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருந்தது. 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருந்தது. ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக உருவாக்கப்பட்டது.

ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் திட்டத்தை விற்க டாடா மோட்டார்ஸ் முடிவு!

ரூ.25 லட்சம் விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில், இந்த காரை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியை கைவிடுவதாக டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு கூறியது. இனி பெர்ஃபார்மென்ஸ் கார்களை கோவையை சேர்ந்த ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் கூட்டணியில் உருவாக்க இருப்பதாகவும் அறிவித்தது.

ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் திட்டத்தை விற்க டாடா மோட்டார்ஸ் முடிவு!

டாமோ பிராண்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.250 கோடி நிதியை புதிய வர்த்தக வாகனங்கள் உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது இந்த காரை ஆவலோடு எதிர்பார்த்தவர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் திட்டத்தை விற்க டாடா மோட்டார்ஸ் முடிவு!

ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த காரின் மின்சார மாடல் கான்செப்ட்டை டாடா காட்சிக்கு வைத்திருந்தது. இதனால், இந்த கார் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கருதப்பட்டது.

ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் கார் திட்டத்தை விற்க டாடா மோட்டார்ஸ் முடிவு!

இந்தநிலையில், ரேஸ்மோ ஸ்போர்ட்ஸ் காரை தயாரிப்பு நிலை மாடலாக உருவாக்க விருப்பமுள்ள நிறுவனத்திடம் இந்த கார் திட்டத்தை விற்பனை செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. எனவே, இந்த ரேஸ்மோ கார் வேறு நிறுவனத்தின் மூலமாக தயாரிப்பு நிலை மாடலாக உருப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 25, 2018, 13:36 [IST]
English summary
Indian automaker Tata Motors revealed its Racemo sports car at the 2017 Geneva Motor Show. Since then there had been a lot of uncertainties about the project. Now, Autocar India reports that Tata Motors has decided to axe the Racemo project.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+