இன்டிகா மற்றும் இன்டிகோ கார்களின் தயாரிப்பை நிறுத்தியது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்
இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டர்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பான இன்டிகா மற்றும் இன்டிகோ ஆகிய கார்களின் தயாரிப்பை நிறுத்தியுள்ளது. விற்பனை குறைந்ததான் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத
இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டர்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பான இன்டிகா மற்றும் இன்டிகோ ஆகிய கார்களின் தயாரிப்பை நிறுத்தியுள்ளது. விற்பனை குறைந்ததான் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார் நிறுவனத்தின்
அதிக விற்பனையாகும் காராக இருந்தது இன்டிகா, குறைந்த விலையில் தரமான கார்களை வாங்க நினைக்கும் பல வாடிக்கையாளர்கள் இந்த காரை தேர்ந்தெடுத்தனர். கேப்ஸ் நடத்தும் பலர் இந்த காரை விரும்பி வாங்கினர்.

1998ம் ஆண்டு அறிமுகமான இந்த கார், விற்பனையில் சக்கை போடு போட்டது. பல போட்டியாளர்கள் இ்நத காரின் விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். பலர் இந்த காருக்கு போட்டியாக களமிறக்கிய கார்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியமாலேயே போனது.

இப்படி கார் விற்பனையில் பெரும் ராஜாங்கம் நடத்திய இந்த காரின் விற்பனை காலம் செல்ல செல்ல குறைந்து கொண்டே வந்தது. மேலும் போட்டி நிறுவனங்களின் புதிய அம்சங்கள் மற்றும் வசதிகள் அடங்கிய கார்களாலும், டாடா நிறுவனம் வேறு புதிய கார்களை களம் இறக்கிய காரணத்தாலும் டாடா இன்டிகா மற்றும் இன்டிகோ இசிஎஸ் ஆகிய கார்களின் விற்பனை படிப்படியாக சரிந்தது.

இன்டிகோ காரும் இன்டிகா கார் போலவே மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றது. ஹட்ச் பேக் ரக கார்கள விரும்புபவர்களுக்கு இண்டிகாவும், செடன் ரக கார் பிரியர்களுக்காக இன்டிகோவும், என விற்பனையானது இன்டிகோ கார் கடந்த 2002ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது.

கடந்தாண்டு நடந்த விற்பனை அறிக்கையில் படி டாடா மோட்டார் நிறுவனம் மொத்தம் 1,87,321 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2017ம் ஆண்டை விட 22 சதவீத வளர்ச்சி 2017ல் 1,53,151 கார்கள் மட்டுமே விற்பனையானது.

கடந்த ஆண்டு மொத்தம் விற்பனையான காரின் எண்ணிக்கையில் 2,583 இன்டிகா கார்களும், 1,756 இன்டிகோ கார்களும் உள்ளடங்கும். இந்த இரண்டு கார்களும் குறைந்த அளவு விற்பனையையே அடைந்துள்ளது.

அதே போல் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா முழவதும் ஒரு இன்டிகா/இன்டிகோ கார்கள் கூட விற்பனையாகவில்லை, அதே போல் ஒரு கார் கூட தயாரிக்கப்படவும் இல்லை. இந்நிலையில் இன்டிகா மற்றும் இன்டிகோ கார்களின் தயாரிப்பை டாடா நிறுவனம் நிறுத்தியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அந்நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அறிவித்துள்ளார்.

ஆனால் ஏற்கனவே விற்பனையாகன கார்களுக்கான சர்வீஸ், மற்றும் தற்போது ஸ்டாக் உள்ள கார்கள் விற்பனையானால் சர்வீஸ் செய்வதில் அதற்குரிய ஸ்பேர் பார்ட்ஸ்களை வழங்கும் நடை முறையில் எந்த மாற்றமும் இல்லை அது தொடர்ந்து நடைபெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்டிகா மற்றும் இன்டிகோ ஜோடி போட்டு விற்பனையானது போல் ஹெக்ஸா, மற்றும் நெக்ஸான் ஆகிய கார்கள் விற்பனையாகும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக டியாகோ என்ற காரும் விற்பனைக்கு உள்ளதால் அந்நிறுவனம் வாடிக்கையாளர்களை இழக்காது என தெரிவித்துள்ளன.

இது குறித்து டீலர்களும், இந்த கார் தயாரிப்பு நிறுத்துவதற்கான அறிவிப்பு எதிர்பார்த்தது தான். அவை இரண்டும் மிகப்பழைய மாடல்களாக உள்ளன. மக்கள் மத்தியிலும் போதிய வரவேற்ப்பு இல்லை. ஒரிரு கார்கள் விற்பனையாவதற்காக செய்யப்படும் செலவுகளை கணக்கிடும் போது பெரிய அளவில் லாபமும் கிடைக்கவில்லை. காலம் மாற மாற நாமும் அடுத்த கட்டத்திற்கு கடந்து தானே ஆக வேண்டும். என கூறினர்.

எது இப்படியோ இந்திய மக்கள் பலருக்கு இன்டிகா கார் தங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியிருந்தது. அவர்களின் சந்தோஷம், துக்கம் என எல்லா சம்பவங்களில் இந்த கார் ஏதோ ஒரு வகையில் பயணித்திருக்கும். இனி காலப்போக்கில் இந்த மாடல் கார் இனி நம்மை விட்டு மெது மெதுவாக மறைந்து போகும். இனி காலமும் மாறி போகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்.


Click it and Unblock the Notifications








