தற்கொலை செய்யப்போகிறதா டாடா நேனோ கார்?

இந்தியாவின் மிக குறைந்த விலை காராக உள்ள டாடா நேனோ காரின் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது டீலர்களிடம் இருக்கும் ஸ்டாக்கை மட்டும் விற்கவும், புதிய கார் ஆர்டர்களை வாங்க

By Balasubramanian

இந்தியாவின் மிக குறைந்த விலை காராக உள்ள டாடா நேனோ காரின் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது டீலர்களிடம் இருக்கும் ஸ்டாக்கை மட்டும் விற்கவும், புதிய கார் ஆர்டர்களை வாங்க வேண்டாம் எனவும் அந்நிறுவனம் டீலர்களிடம் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறது என்ற வதந்தி பரவி வருகிறது. இது குறித்து முழு செய்தியை கீழே படிக்கலாம் வாருங்கள்.

டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறதா?

சில ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த விலையில் கார்களை தயாரிக்க முடிவு டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா முடிவு செய்தார். அதை தன் கனவு திட்டமாக செயல்படுத்த தனது ஊழியர்களை பணித்தார். அவர்கள் பல்வேறு மாடல்கள் செய்து டாடா நேனோ என்ற காரை சுமார் 1 லட்ச ரூபாய்க்கு விற்பனை கொண்டு வர முடிவு செய்தனர்.

டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறதா?

ஆனால் இந்த காரை எவ்வளவு முயன்றும் அவர்களால் குறைந்த விலையில் தயாரிக்க முடியவில்லை. இருந்தும் டாடா நிறுவனம் ரூ 1 லட்சத்திற்கு கார் தயாரிப்பதாக முன்னரே அறிவித்திருந்தது. அதே போல் டாடா நேனோ காரை குறைந்த விலையில் விற்பனையும் செய்தது.

டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறதா?

டாடா குறைந்த விலை கார் என்று விளம்பரம் செய்தால் இந்த காரை அதிக அளவில் விற்கலாம் என திட்டமிட்டது. ஆனால் அதுவே அவர்களுக்கு கேடாக முடிந்தது. மக்கள் மத்தியில் நேனோ கார் வைத்திருப்பவர்களை குறைத்து எடை போட துவங்கி விட்டனர். இதனால் பலர் நேனோ காரை வாங்க தயங்கினர்.

டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறதா?

மேலும் இந்த கார் வெளியான போதே இந்த காரின் உயரம் மற்றும் முன்புறம் இன்ஜின் இல்லாதது என இந்த கார் விபத்திற்குள்ளானால் சேதாரம் அதிகம் என மக்கள் மத்தியில் ஒரு வித பயமும் கிளம்பியது. இதனால் அந்நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு கார்கள் விற்பனையாகவில்லை.

டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறதா?

இருந்தாலும் ஒரளவிற்கு இந்த காரை சிலர் வாங்கினர். அதனால் தொடர்ந்து அந்நிறுவனம் இந்த காரில் பல அப்டேட்களை செய்து, மக்களின் கவனத்தை ஈர்க்க இந்த பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டே வந்தது.

டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறதா?

இந்நிலையில் கார் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து படிப்படியாக விற்பனை அதிகரித்தாலும், 2012ம் ஆண்டில் இருந்து இந்த காரின் விற்பனை படிப்படியாக சரிய துவங்கி தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. சரிவில் இருந்து மீட்க இந்நிறுவனம் பல முயற்சிகள் செய்தாலும், வீழ்ச்சியின் தாக்கத்தை சற்று குறைக்கதான் முடிந்ததே தவிர விற்பனையை அதிகரிக்க முடியவில்லை.

டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறதா?

இருந்தாலும் அந்நிறுவனம் தொடர்ந்து காரில் பல வித அப்கிரேட்களை செய்தது. காரின் டிசைனில் சிறிது மாற்றங்கள் செய்து நேனோ ஜென் எக்ஸ் என்ற பெயரில் ஒரு காரை வெளியிட்டது. சமீபத்தில் ஏஎம்டி ஆப்ஷன்களுடன் ஒரு காரை அந்நிறுவனம் வெளியிட்டது. அதுவும் சொல்லிக்கொள்ளும்படியாக விற்பனையாகவில்லை.

டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறதா?

இந்நிலையில் கடந்த நிதியாண்டில் டாடா நேனோ கார் மொத்தம் 1851 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் அதற்கு முந்தைய நிதியாண்டில் 7591 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்த 2012 முதல் இந்த காரின் விற்பனை சரிவை சந்தித்து வந்திருந்தாலும், இந்த நிதியாண்டின் சரிவு மிக அதிக அளவில் இருந்தது.

டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறதா?

இதற்கு முக்கிய காரணம் டாடா நிறுவனம் டியாகோ, டிகோ, நெக்ஸான், ஹெக்ஸா ஆகிய கார்களை விற்பனை செய்வதில் தீவிரம் காட்டியது தான் என கூறப்படுகிறது. மேலும் நேனோ வாங்க வரும் வாடிக்கையாளர்களையும் அந்நிறுவனத்தின் வேறு கார்களை வாங்க அந்நிறுவன ஊழியர்களே பரிந்துரைப்பதாகவும் கூறப்படுகிறது.

டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறதா?

இந்நிலையில் டாடா நிறுவனம் டீலர்களிடம் தற்போது இருக்கும் டாடா நேனோ கார்களின் ஸ்டாக்குகளை மட்டும் கிளயர் செய்யவும், புதிதாக கார்களுக்க ஆர்டர்களை பெறவேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானவும் டாடா நேனோ கார்களை டாடா நிறுவனம் நிறுத்தப்போவதாக வதந்திகள் பரவியது.

டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறதா?

ஆனால் இந்த அறிவுறுத்தல் என்பது எல்லா கார்களிலும் புதிய வேரியன்ட் அல்லது, சில மாற்றங்களை செய்து வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டால், அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு முன்னர் டீலர்களிடம் இருக்கும் ஸ்டாக்குகளை மட்டும் விற்பனை செய்ய கூறுவது இயல்புதான். புதிய மாடல் வந்து விட்டால் பழைய மாடல் விற்காமல் போய்விடும் என்பதால் இந்த யுக்தியை கையாள்வார்கள்.

டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறதா?

ஆனால் டாடா நேனோ விஷயத்தில் அந்நிறுவனம் என்ன திட்டமிட்டுள்ளது. என்பது தெரியவில்லை. டாடா நேனோவின் விற்பனை குறைவாக இருந்தாலும் இது தான் குறைந்த விலை கார் என்ற பெயர் மார்க்கெட்டில் உள்ளது. அதனால் இந்த காரின் விற்பனையை நிறுத்தி அந்த பெயரை இழக்க அந்நிறுவனம் முடிவு செய்யாது எனவும் கூறப்படுகிறது,.

டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறதா?

டாடா நேனோ கார் 624 சிசி டுவின் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் விற்பனை செய்யப்படுகிறது. இது 37 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த காரின் இன்ஜினில் 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. சிட்டிக்குள் கார் ஓட்ட இந்த கார் சிறந்த காராக பயன்படும். கடந்த 2014ம் ஆண்டு இந்த காரில் ஏஎம்டி ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கார் ஓட்டிகளுக்கு நல்ல வசதியை ஏற்படுத்தி தரும்.

டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறதா?

இந்நிலையில் டாடா நிறுவனம் டீலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறித்து பல்வேறு விதமாக பேசப்படுகிறது. சமீபகாலமாக எலெக்ட்ரிக் கார்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதால் நேனோ காரின் எலெக்ட்ரிக் வேரியன்ட்டை அந்நிறுவனம் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறதா?

நேனோ எலெக்ரிக் கார் மூலம் குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்காலிகமாக பெட்ரோல் இன்ஜின் ரக நேனோ கார்களை தயாரிப்பதை அந்நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

டாடா நேனோ கார் தனது ஆயுளை முடித்து கொள்ள போகிறதா?

எலெக்ட்ரிக் நேனோ கார் வந்தால் மிக குறைந்த பரமரிப்பு செலவுடன், குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும். இதன் மூலம் மக்களும் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவார். எலெக்ட்ரிக் கார்களை மக்கள் அதிகம் பயன்படுத்தினால் எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்யும் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும். இதனால் ஓட்டுமொத்த எலெக்ட்ரிக் வாகனங்களின் மார்கெட்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

English summary
Tata Nano on life-support: Here’s why. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X