விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த டாடா ஆலையில், நானோ கார்களின் உற்பத்தியானது, கடந்த 5 ஆண்டுகளில் மிக மிக கடுமையாக சரிவடைந்துள்ளது.

விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த டாடா ஆலையில், நானோ கார்களின் உற்பத்தியானது, கடந்த 5 ஆண்டுகளில் மிக மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முன் குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்தார். அவர் முதல் அமைச்சராக இருந்த 2011ம் ஆண்டு, குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில், டாடா தொழிற்சாலை ஒன்றை திறந்து வைத்தார்.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

இந்தியாவின் மிகவும் விலை மலிவான காரான நானோ உற்பத்திக்காக இந்த தொழிற்சாலை திறக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இதற்காக அன்றைய காலகட்டத்தில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

ஆனால் நானோ கார் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையாகவில்லை. இதனால் சனந்த் தொழிற்சாலையில் நானோ காரின் உற்பத்தி கடுமையாக குறைந்தது. இந்த சூழலில், சனந்த் தொழிற்சாலையில் நானோ காரின் உற்பத்தி நிலவரத்தை விளக்குமாறு குஜராத் மாநில சட்டசபையில் எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர்.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

எம்எல்ஏக்கள் வஜிசிங்பாய் பாண்டே (தாகுத் தொகுதி), புன்ஜா வனீஸ் (உனா தொகுதி), பாகுபாய் வஜா (மங்ரோல் தொகுதி) ஆகியோர்தான் இந்த கேள்வியை எழுப்பியவர்கள். கடந்த 5 ஆண்டுகளில், சனந்த் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட நானோ கார்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்ற கேள்வியை அவர்கள் கேட்டிருந்தனர்.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

இதற்கு குஜராத் மாநில முதல் அமைச்சர் விஜய் ரூபானி பதில் அளித்துள்ளார். இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில், டாடா நானோ கார்களின் உற்பத்தி 90 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்திருக்கும் தகவல் தெரியவந்துள்ளது.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

கடந்த 2013-14ல் 21,155 நானோ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது 2014-15ல் 17,489ஆக சரிவடைந்தது. ஆனால் 2015-16ல் நானோ கார்களின் உற்பத்தி 22,214ஆக அதிகரித்தது. எனினும் அதன்பின் மீண்டும் நானோ கார் உற்பத்தி கடும் சரிவை சந்திக்க தொடங்கியது.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

இதன்படி 2016-17ல் நானோ கார் உற்பத்தி வெறும் 8,305ஆக குறைந்தது. இருப்பதிலேயே மிகவும் குறைந்தபட்சமாக கடந்த 2017-18ல் நானோ கார் உற்பத்தி 1,920 ஆக சரிவடைந்தது. இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில், நானோ கார் உற்பத்தி 90 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்து விட்டது.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

நானோ கார் தொழிற்சாலை அமைப்பதற்காக முதலில் மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில்தான் டாடா நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தியது. ஆனால் இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் கடும் போராட்டங்கள் வெடித்தன.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

டாடா நானோ கார் தொழிற்சாலை அமைக்க நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக மேற்கு வங்க விவசாயிகள் நடத்திய போராட்டம், இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதன்பின்புதான் சிங்கூரில், நானோ தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை டாடா கைவிட்டது.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

இந்த சூழலில்தான் குஜராத் மாநிலத்திற்கு வரும்படி டாடா நிறுவனத்தை தற்போதைய பிரதமரும், அப்போதைய குஜராத் முதல் அமைச்சருமான மோடி அழைத்தார். அத்துடன் சனந்த் பகுதியில், 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் டாடா தொழிற்சாலை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

அந்த தொழிற்சாலையில்தான் தற்போது நானோ கார்களின் உற்பத்தி, கடந்த 5 ஆண்டுகளில் 90 சதவீத அளவிற்கு கடுமையான சரிவை சந்தித்துள்ளது. டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவின் கனவு கார்களில் ஒன்றுதான் நானோ.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

வெறும் 1 லட்ச ரூபாய்க்கு நானோ காரை தயாரித்து வழங்கப்போவதாக ரத்தன் டாடா அறிவித்தபோது, இந்தியாவே அவரை திரும்பி பார்த்தது. அவ்வளவு ஏன்? உலகில் உள்ள அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ரத்தன் டாடாவை திரும்பி பார்த்தன.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளை சேர்ந்த சில நிறுவனங்கள், இந்த திட்டத்தை கேலியும் செய்தன. ஆனால் அவை எல்லாவற்றையும் கடந்து நானோ காரை டாடா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. முன்னதாக அறிவித்திருந்தபடி 1 லட்ச ரூபாய் என்ற விலையில்தான் நானோ கார் விற்பனை செய்யப்பட்டது.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

ஆனால் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு அதே விலைக்கு நானோ காரை, டாடா நிறுவனத்தால் விற்பனை செய்ய முடியவில்லை. அத்துடன் டாடா எதிர்பார்த்த அளவிற்கு நானோ காரின் விற்பனையும் பெரிதாக நடக்கவில்லை.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

அத்துடன் நானோ காரின் பாதுகாப்பு குறித்து எழுந்த அச்சங்களும், அதன் விற்பனை சரிவடைய முக்கிய காரணமாக அமைந்தன. இதன்பின் சில மாற்றங்களை செய்து புதிய புதிய வேரியண்ட்களை அறிமுகம் செய்தாலும், நானோ காரின் விற்பனை அதிகரிக்கவில்லை.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

இதனால் உற்பத்தி கடுமையாக சரிந்தது. இறுதியாக கடந்த ஜூன் மாதம் ஒரே ஒரு நானோ காரை மட்டுமே டாடா நிறுவனம் உற்பத்தி செய்தது. எனவே நானோ காரின் உற்பத்தியை நிறுத்தி விடுவது என டாடா நிறுவனம் சமீபத்தில் முடிவு செய்தது.

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மோடி திறந்த டாடா ஆலையில் உற்பத்தி கடும் சரிவு.. பாஜ முதல்வர் ஒப்புதல்

இனி வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டு கேட்டால் மட்டும், நானோ காரை உற்பத்தி செய்து தர டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியா மட்டுமல்லாது, உலகிலேயே மிகவும் விலை குறைந்த கார்களில் ஒன்றாக நானோ கருதப்படுகிறது. ஆனால் இறுதியில் நானோவுக்கு தோல்வியே மிஞ்சியுள்ளது.

Most Read Articles

டாடா நானோ ஜென்எக்ஸ் காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Tata Nano Production Fell by 90% in Gujarat Plant. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X