நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

டாட்டா நானோ கார்கள் தயாரிப்பை நிறுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது குறித்து அந்நிறுவனம் எந்த விதமான அதிகார பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

By Balasubramanian

டாட்டா நானோ கார்கள் தயாரிப்பை நிறுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது குறித்து அந்நிறுவனம் எந்த விதமான அதிகார பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

டாடா நிறுவனம் மக்களுக்கு குறைந்த விலையில் கார்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 1 லட்ச ரூபாய்க்கு நானோ கார்களை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்தது.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

இதற்காக அந்நிறுவனம் பல வல்லுநர்களை வைத்து மிக குறைந்த விலையில் பாகங்கள் இன்ஜின்கள் என எல்லாவற்றையும் பொருத்த முயற்சி செய்தது. எவ்வளவு முயற்சி செய்தும் அந்நிறுவனத்தால் 1 லட்ச ரூபாய்க்கு காரை தயார் செய்ய முடியவில்லை.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

எனினும் ஒரு லட்ச ரூபாய்க்கு சற்று விலை அதிகமாக இந்தியாவிலேயே குறைந்த விலை கார் ஒன்றை தயார் செய்தது. இதை குறைந்த விலை கார் என அந்நிறுவனம் பொதுமக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த துவங்கியது.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

இது தான் பாசிட்டிவ் ரீச் கொடுக்கும் என எதிர்பார்த்த இந்நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியாக இது நெகட்டிவ்வாக ரீச் ஆகியது. நானோ கார் வைத்திருப்பவர்களை சமூகத்தில் அந்தஸ்து குறைந்ததாக மக்கள் பார்க்க துவங்கினர்.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

இதனால் புதிதாக கார் வாங்குபவர்கள் நானோ கார் என்ற பெயரை கேட்டாலே வேண்டாம் என கேட்ட துவங்கினர். இந்த காரில் உள்ள வசதிகள் என்ன? நமது தேவைக்கு ஏற்ற கார் தான என்பதை அவர்கள் பார்க்கவே விரும்பவில்லை.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

முதலில் குறைந்த விலை கார்கள் என எண்ணி பலர் வாங்கி விற்பனை அதிகரித்தாலும், நானோ கார் வைத்திருப்பவர்களை சமூகத்தில் குறைந்த அந்தஸ்து உடையவராக மக்கள் பார்க்கப்பட்ட பின்பு அதன் விற்பனை எதிர்பார்க்க முடியாத அளவிற்கு குறைந்தது.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

இதை சமாளிக்க அந்நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது, புதுப்புது வேரியன்ட்களை அறிமுகப்படுத்த துவங்கியது. இருந்தும் எந்த வித பலனும் இல்லை. கார் விற்பனையில் முன்னேற்றம் காணவே முடியவில்லை.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

படிப்படியாக இந்த காரின் விற்பனையும் இந்தியாவில் வெகுவாக குறைய துவங்கியது. கடந்தாண்டு ஜூன் மாதம் டாடா நிறுவனம் மொத்தம் 275 கார்களை தயாரித்தது. அதே நேரத்தில் 167 கார்களை தான் விற்பனை செய்தது.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

ஆனால் நிலைமை ஆண்டிற்கு ஆண்டு மோசமாக போய் கொண்டே இருந்தது. கடந்த ஜூன் மாதம் அந்நிறுவனம் ஒரே ஒரு நானோ காரை மட்டுமே தயாரித்துள்ளது. 3 கார்களை விற்பனை செய்துள்ளது. ஒரு காரை கூட இந்தாண்டு ஏற்றுமதி செய்யவில்லை கடந்தாண்டு ஜூன் மாதம் 25 கார்களை ஏற்றுமதி செய்தது.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

இது குறித்து டாடா நிறுவனத்திடம் கேட்கும் போது நானோ கார்களில் வீழ்ச்சி குறித்து நாங்கள் அறிவோம் இந்த காரை 2019ம் ஆண்டிற்கு பின்பு தொடர முடியாது என்பது எங்களுக்கு தெரியும். ஆனாலும் இது குறித்து தற்போது எந்த முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை. என கூறினார்.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

டாடா நானோ கார் முதன் முறையாக கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ வில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த கார் முதன் முறையாக 2009ம் ஆண்டு மார்ச் மாதம் தான் விற்பனைக்கு வந்தது.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

இந்த கார் அறிமுகமாகும் போது இந்த காரின் விலை ஒரு லட்சம் தான் என இருந்தது. அவர் கூறுகையில் நாம் ஒரு லட்ச ரூபாயில் கார் தயாரிப்பதாக கூறினேன் தற்போது இதை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கவிருக்கிறேன் எனது வாக்கை நிறைவேற்றி விட்டேன் என கூறினார்.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

தற்போது வெளியாகும் ஜென் எக்ஸ் நானோ காரை பொருத்தவரை 624 சிசி, இரண்டு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 37 பிஎச்பி பவரையும் 51 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது ஏஎம்டி ஆகிய ஆப்ஷன்களுடன் விற்பனையாகி வருகிறது.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

நானோ கார் தயாரிக்க ஆரம்பம் முதலே பெரும் பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. முதலில் மேற்கு வங்கத்தில் இதற்கான தொழிற்சாலை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்தது. ஆனால் அங்கு விவசாயிகள் தங்கள் நிலத்தை தர மறுத்ததால் அந்நிறுவனம் குஜராத்திற்கு சென்றது.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

பின்னர் காரை தொடர்ந்த 1 லட்ச ரூபாய்க்கு அந்நிறுவனத்தால் விற்பனை செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் விற்பனையான கார்களும் சில தீ பிடிப்பது, உள்ளிட்ட சில செய்திகள் வெளியானது. இதனாலும் குறைந்த விலை கார் என்பதாலும் மக்களிடம் போதிய வரவேற்ப்பில்லை.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

இருந்தாலும் மக்களிடம் சொல்லிய வாக்கிற்காகவும், சில மக்கள் இதை விரும்பி வாங்குவதாலும் டாடா நிறுவனம் இது அந்நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் மாடல் என்றாலும் தொடர்ந்து விற்பனை செய்தே வந்தது.

நிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்?

அந்நிறுவனம் இந்த விற்பனையை அதிகரிக்க பல்வேறு மாற்றங்களை செய்து வந்தாலும் விற்பனை அதிகரித்த மாதிரி தெரியவில்லை. தற்போது அந்த கார் தயாரிப்பை கைவிடும் நிலையில் அதன் விற்பனை உள்ளது. ஆனால் டாடா நிறுவனத்திற்கு இது பொன்னான வாய்ப்பு இந்த நேரத்தை பயன்படுத்தி புதிதாக நானோ விலையில் வேறு ஒரு காரை பயன்படுத்தி சரியாக புரோமோஷன் செய்தால் விட்ட மார்கெட்டை பிடிக்க வாய்ப்புள்ளது.

English summary
Tata Motors Might Stop Production Of The Nano — Just One Unit Produced In June 2018.Read in Tamil
Story first published: Thursday, July 5, 2018, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X