TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
விபத்தில் சின்னாபின்னமான டாடா நெக்ஸான்... காயமின்றி வெளியேறிய பயணிகள்!
டாடா நெக்ஸான் கார் ஒன்று பெரும் விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகியது. ஆனால், அந்த காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
டாடா நெக்ஸான் கார்கள் உருண்டு விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை விபத்தில் சிக்கிய டாடா நெக்ஸான் கார்கள் குறித்த வெளியானத் தகவல்கள் ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபுறத்தில் ஆறுதல் தரும் வகையில் அதன் பாதுகாப்பு இருந்து வருவதை மறுக்க முடியாது.
அந்த வகையில், சில தினங்களுக்கு முன் நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்ற டாடா நெக்ஸான் காரின் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட கிராஸ் எடிசன் மாடல் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியது. இதுதொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.
சாலையின் குறுக்கே வந்த மாடு மீது மோதாமல் இருப்பதற்காக, டாடா நெக்ஸான் ஓட்டுனர் காரை அவசரமாக திருப்பி இருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த டாடா நெக்ஸான் கார் பல்டியடித்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
இந்த பயங்கர விபத்தில் அந்த டாடா நெக்ஸான் கார் படுமோசமாக சேதமடைந்துள்ளது. அந்த கார் குறித்து கிடைத்திருக்கும் படங்கள் மிக மோசமாக உருக்குலைந்த நிலையில் காண முடிகிறது..
எனினும், பயணித்தவர்களுக்கு காயமின்றி உயிர் பிழைத்ததாக இந்த படங்களை பகிர்ந்து கொண்ட ஃபேஸ்புக் பதிவர் தெரிவித்துள்ளார். எனினும், காரின் ஏர்பேக்கில் ரத்தக் கறை பட்டு இருக்கிறது.
ஏர்பேக் விரிவடையும்போது ஓட்டுனரின் கைகளில் காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அது சிறிய காயமாகவே இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
டாடா நெக்ஸான் கார் விபத்தில் சிக்குவது அதிர்ச்சியான விஷயமாக இருந்தபோதிலும், இதுவரை நடந்த பெரும்பாலான விபத்துக்களில் பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொள்வதாகவே செய்திகள் கிடைத்துள்ளன. இது ஆறுதல் தரும் விஷயம்.
விபத்தில் சிக்கிய டாடா நெக்ஸான் காரின் கிராஸ் எடிசன் மாடலானது கடந்த செப்டம்பர் மாதம் பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் பல அலங்கார வேலைப்பாடுகளுடன் தனித்துவப்படுத்தப்பட்டிருக்கிறது. தரவுகளின்படி, விபத்தில் சிக்கிய கார் வாங்கி இரண்டு மாதங்களே ஆகிறது.
இந்த மாடலில் ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிக்கான தலா ஒரு ஏர்பேக் வீதம் டூயல் ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இபிடி நுட்பத்துடன் இணைந்து செயல்படும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இதன் முக்கிய பாதுகாப்பு அம்சம்.
மேலும், ஜெர்மனியில் உள்ள மூனிச் நகரில் உள்ள குளோபல் என்சிஏபி அமைப்பின் கிராஷ் டெஸ்ட் மையத்தில் வைத்து டாடா நெக்ஸான் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்த சோதனையில் 64 கிமீ வேகத்தில் தடுப்பின் மீது டாடா நெக்ஸான் எஸ்யூவியை மோதச் செய்து சோதிக்கப்பட்டது.
இந்தத மோதல் சோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தியது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திர மதிப்பீடும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் 3 நட்சத்திர மதிப்பீடும் பெற்றிருக்கிறது. இந்தியாவில் விற்பனையாகும் கார்கள் தொடர்ந்து மோசமான பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றுவந்த நிலையில், டாடா நெக்ஸான் சிறந்த தர மதிப்பீட்டை பெற்றது மகிழ்ச்சி தந்தது.
குறிப்பாக, இதன் ஏ பில்லர் வலுவாக இருப்பதால், முன்புற மோதல் நடந்தாலும் கதவுகளை சாதாரணமாக திறக்கும் அளவுக்கு வலுவாக இருந்ததாக அந்த சோதனையில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இதன் கட்டுமான வடிவமானது, விபத்தின்போது பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதி மற்றும் பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாத அளவுக்கு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், காரில் எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் சரியான வேகத்தில் சாலையில் போக்குவரத்து நிலைகளை கணித்து ஓட்டுவது இதுபோன்ற மோசமான விபத்துக்களை தவிர்க்க வழி தரும்.
விபத்தில் சிக்கிய டாடா நெக்ஸான் எஸ்யூவி அதிவேகத்தில் சென்றிருப்பதை உணர முடிகிறது. நம்மூர் சாலைகளில் காலியாக இருக்கிறதே என்று அதிவேகத்தில் செல்வதும் ஆபத்தை விளைவிக்கும். குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் செல்லும்போது கிராமப் பகுதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளை கடக்கும்போது கவனம் தேவை. கால்நடைகள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் குறுக்கே வர வாய்ப்பு அதிகம் என்பதால் சாலையை கவனித்து ஓட்டுவதும், வேகத்தை குறைத்துக் கொள்வதும் நலம் பயக்கும்.